*தேவர்கள் அபயம்*****
இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுமே
அப்படியே ஓரணுவும் அவர் நினையாதே இருந்தால்
குட்டம் குறைநோய் கொடிய கன்னப் புற்றுடனே
கட்டம் வந்து சாகக் கழுத்தில் கண்ட மாலையுடன்
தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும்
காதானது கேளாது கண்ணே குருடாகும்
புத்தியுற்று வித்தையற்று பேருறுப்பும் இல்லாமல்
முத்திகெட்ட புத்தி முழுக்கிரியை தான்பிடித்து
பிள்ளையற்று வாழ்வுமற்று பெண்சாதி தானுமற்று
தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி
மாநிலத்தோர் எல்லாம் மாபாவி என்று சொல்லி

---------
உரை
---------
"இப்படியே ஏழு பிறப்பிலும் உம்மை ஓர் அணு அளவுகூட நினையாது இருந்தால், அவன் குஷ்ட நோய் போன்ற இழிவான நோய்களும், கொடுமை பொருந்திய கன்னப்புற்று நோயும், மிகவும் கஷ்டம் கொடுத்து அழிக்கும் கண்டமாலை நோயும், என்றைக்கும் தீராத கருவங்கும், தீர்க்க முடியாத வாயு நோய்களும், காதானது கேளாமலும், கண்கள் குருடாவதும், அறிவின்றியும், கல்வி முதலிய வித்தைகளின்றியும், உடம்பில் உள்ள முக்கிய உறுப்புகளின்றியும், முக்தி அடைகின்ற அறிவில்லாத புத்தியுடனும், முழுமையான கிரியை வழிகளை மட்டும் கடைபிடித்து ஒழுகி வாழ்வான். குழந்தைகளின்றி, மகிழ்ச்சியான வாழ்வின்றி, மனைவியற்று, தாயின்றி, வீடின்றி, முடவனைப் போன்ற வாழ்க்கை வாழ்வான். இந்தத் தேசத்தில் உள்ளவர்கள் எல்லாரும் 'இவன் பெரிய பாவி என்று சொல்லுவர்'.
---------------------

தேவர்கள் அபயம்*****
அல்லாய்ப் பகலாய் ஆணாகிப் பெண்ணாகி
எல்லோர்க்கும் சீவன் ஈயுகின்ற பெம்மானே
பட்சி பறவை பலசீவ செந்துமுதல்
இச்சையுடன் செய்நடப்பும் இயல்கணக்குச் சேர்ப்போனே
ஒரு பிறப்பில் உம்மை உட்கொள்ளாப் பேர்களையும்
கருவினமாய் ஏழு பிறப்பிலும் கைகேட்போனே
ஆறு பிறப்பில் அரியே உன்னைப் போற்றாமல்
தூறு மிகப்பேசித் தொழாதபேர் ஆனாலும்
ஏழாம் பிறப்பில் உம்மை எள்ளளவுதான் நினைத்தால்
வாழலாம் என்று அவர்க்கு வைகுண்டம் ஈந்தோனே

"இரவாகி, பகலாகி, ஆணாகி, பெண்ணாகி எல்லாருக்கும் உயிரைக் கொடுக்கின்ற இறையவனே; பட்சிகள், பறவைகள் இன்னும் பல சீவ செந்துகள் எல்லாம் ஆசையுடன் செய்கின்ற செயல்களை எல்லாம் முறையாகக் கணக்கில் எழுதிச் சேர்த்து வைத்திருப்போனே; ஒரு பிறப்பில் உம்மை மனதின்கண் நினைக்காத பேர்களையும், இரக்க மனங்கொண்டு அவர்களின் முதல் பிறப்பையும் சேர்த்து ஏழு பிறப்பிலும் ஆதரவு கொடுத்துக் கைக்கணக்குக் கேட்போனே; ஆறு பிறப்பிலும் அரியாகிய உன்னைத் துதிக்காமல் இழிவு நிலை பேசி, உன்னைத் தொழுகின்ற தன்மை இல்லாதவர்கள் ஆனாலும், ஏழாவது பிறப்பிலாவது உன்னை எள்ளளவு நினைத்தால்கூட நித்திய வாழ்வான உயர்ந்த வைகுண்டபதவி கொடுப்பவனே;

உச்சிச் சுழியே உம் என்னும் எழுத்தோனே
அச்சிச் சுழியே அம் என்னும் எழுத்தோனே
அஞ்சு எழுத்தும் மூன்று எழுத்தும் ஆதி அ என்னும்
நெஞ்சு எழுத்தும் எட்டு எழுத்தும் நீ ஆகி நின்றோனே
எண் ஒரு பத்தும் எண் இரண்டும் யவ்வே நடுவாக
ஒண்ணு எழுத்தாய் நின்ற உடைய பெருமாளே
தண்தரளத் தூணாகித் தரு ஐந்து பேராகி
மண்டலத்து உள்ளூறலுமாய் மாயமுமாய் நின்றோனே
போக்கு வரத்துப் புகுந்து இரண்டு கால்வீட்டில்
நாக்கு இரண்டு பேசி நடுநின்ற நாரணரே ...

அம் உம் என்னும் எழுத்தோனே; நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தும், முருகா என்னும் மூன்று எழுத்தும், ஆதியாகிய அ என்னும் எழுத்தும், நெஞ்செழுத்தாகிய சி என்னும் எழுத்தும், நமோநாராயண நம என்னும் எட்டெழுத்தும் நீயே ஆகி நின்றவனே; அறுகோண சிவாயநம சக்கரத்தில் பன்னிரண்டு எழுத்துக்களின் நடுவே ய என்னும் ஓர் எழுத்தாகி நிற்போனே, குளிர்ச்சி பொருந்திய முத்தாலான நடு நாடியாகிய தூணாகி, அந்த நடுநாடியாகிய தூணில் பஞ்சாட்சரமாகிய ஐந்து பேர்களை உள்ளடக்கி நிற்கும் பெருமானே; பிரமரந்திரத்தில் உருவாகும் அமுத பானமாகவும், அமுதபானத்தை அடைய முடியாதவாறு தடுக்கும் மாயையாகவும் நின்றவனே; போக்குவரத்துச் செய்யும் இரண்டு சுவாச துவார வீட்டில் சூரியகலை, சந்திரகலை என்னும் இரண்டு நாக்காகிய நாடிகளும் செய்கை புரிந்து (பேசி) கடைசியில் சுழிமுனையாகிய நடுநாடியில் நிலை நிற்கும் நாராயனரே,

ஆதியே அனாதி அய்யா நாராயணரே
சோதியே வேதச்சுடரே சுடரொளியே
பக்தர்க்கு நித்தாபரன் ஏற்றார்க்கு ஏற்றோனே
சித்தர்க்குச் சித்தா செயல் ஒத்தார்க்கு ஏற்றோனே
மூவர்க்கு அனாதி முழுமணியாய் நின்றோனே
தேவர்க்கும் நல்ல சினேகமாய் நின்றோனே
கிட்ட வரார்க்கு எட்டாத கிருஷ்ணா உன்றன் பதத்தை
கட்டு அவிழும் அட்டானக் கருணாகரக் கடலே
உச்சிச் சுழியே உம் என்னும் எழுத்தோனே ...

"ஆதியே, அனாதியே, அய்யா நாராயணரே, சோதியே, வேதங்கள் கூறும் சுடரே, சுடரொளியே, பக்தர்களுக்கும் நித்திய பரவாழ்வை ஏற்றவர்க்கும் ஏற்றவனே; சித்தர்களுக்கும் சித்துச் செயல்கள் செய்வோருக்கும் ஏற்றவனே; மூவர்க்கும் அனாதியே, முழுமணியாய் நின்றோனே; தேவர்களுக்கும் நல்ல சிநேகனாய் இருப்பவனே; உன் பக்கத்தில் வராதவர்களுக்கு எட்டாத தூரத்தில் நிற்கும் கிருஷ்ணா, உன் பதத்தைக் காண முடியாது கட்டி இருக்கும் கட்டினை அவிழ்ப்பீராக. எட்டுத் திக்கும் பரவி இருக்கும் கருணாகரக் கடலே, சுழி முனையில் இருப்பவனே; உயிர் (அச்சு) மூச்சாக நிற்பவனே; .

சங்கையுள்ள கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
எல்லோரும் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
எல்லோரும் மெத்த அறம் மெலிந்தார் அம்மானை
இப்படியே செய்யும் இடுக்கமது ஆற்றாமல்
அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட
நிலந்தேவி ஆகாய நீர்த்தேவியும் கூடித்
தலந்தேவி மன்னன் தனக்கே முறையமிட
தேவாதி தேவர்தேவி முறையம் ஆற்றாமல்
மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது
கண்டு தேவாதிகளும் கன்னி புவிமகளும்
சங்கையுள்ள கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
எல்லோரும் கஞ்சனுட இடுக்கமது தன்னாலே
எல்லோரும் மெத்த அறம் மெலிந்தார் அம்மானை
இப்படியே செய்யும் இடுக்கமது ஆற்றாமல்
அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட
நிலந்தேவி ஆகாய நீர்த்தேவியும் கூடித்
தலந்தேவி மன்னன் தனக்கே முறையமிட
தேவாதி தேவர்தேவி முறையம் ஆற்றாமல்
மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது
கண்டு தேவாதிகளும் கன்னி புவிமகளும்
---------
உரை
---------
தேவர்கள் கூட்டமும் தெய்வக் கன்னிகளும் மற்ற எல்லாரும் கஞ்சனுடைய கொடுமைகளினால் தரும நியாயங்கள் கிடைக்காமல் வாழ்ந்தனர். இப்படியாகத் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பத்தினைப் பொறுக்க முடியாமல், தேவர்கள் மாயனிடம் கூறி அபயமிட்டனர். பூமாதேவியும், கங்காதேவியும் சேர்ந்து இலட்சுமிதேவியின் நாயகனாகிய மாயனுக்கு அபயமிட்டனர். தேவர்கள் அபயமும், தேவியர்கள் அபயமும் கேட்டு மனம் பொறுக்க முடியாமல் மூவர்களில் ஒருவராகிய நாராயண மூர்த்தி பள்ளி கொள்ளும் இடத்திலிருந்து கண் விழித்துப் பார்த்தார். இதைக் கண்டு தேவர்களும், கன்னிப் பூமாதேவியும் அவரை வணங்கிப் போற்றினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக