இரணியன் பாடு*****
... மாலான வேதன் மனது கோபம் வெகுண்டு
உன்னை இன்னும் இந்த உலகில் பிறவி செய்து
கொன்றே விடுவேன் கிரேதாயுகம் வயது
திகைந்தல்லோ போச்சு திரேதாயுகம் பிறந்தால்
முற்பிறவித் துண்டம் உயிர்ப் பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னில் நீ இசைந்த மொழி கேட்பேன் நான்
என்று இரணியனை இரணச் சங்காரம் இட்டு
அன்று கிரேதாயுகம் அழித்தார் அம்மானை
அந்தக் கிரேதாயுகம் அழித்த அந்நாளில்
கந்த திருவேசம் கரந்திருந்த மாயவனார்
செந்தூர்ப் பதியில் சேர்ந்து இருந்தார் அம்மானை

---------
உரை
---------
உடனே, மாயன் இன்னும் அதிக கோபமாக "உன்னைக் கொன்று, இன்னும் இந்த யுகத்திலேயே பிறவி செய்வேன். அனால் கிரேதாயுகத்தின் வயது முடிந்து விட்டது. எனவே, அடுத்த திரேதா யுகத்தில் முன்புள்ள எஞ்சிய துண்டத்தில் உன் உயிரைப் பிறவி செய்யும்போது இப்போது நீ கூறிய இழிவான மொழிகளைப் பற்றி நான் கேட்பேன்" என்று கூறி இரணியனைக் கொன்று, கிரேதாயுகத்தையும் அழித்தார்.
கந்தனுடைய வேடம் பூண்டிருந்த மாயன் திருச்செந்தூர்ப் பதியை அடைந்து அங்கிருந்தார்.
இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.
---------------------

*இரணியன் பாடு*****
... பத்து மலையைப் பார நாகமாய்ப் பதித்து
இத்தலத்தில் என்னை இறக்க வைத்தாய் அல்லாது
ஏலாது உன்னாலே இந்த மொழி பேசாதே ...

"பத்து மலைகளை வலிமை பொருந்திய நகமாக்கி அதன் மூலம் என் மேல் குத்திக் கிழித்து இந்த இடத்தில் என்னைக் கொள்ளுகின்றாய்; அத்தகைய நகம் இல்லாது உன்னால் என்னை அழிக்க முடியாது. எனவே, என்னைப் பற்றி இழிந்த மொழி பேசாதே" என்று மறுத்துரைதான்.
---------------------
உரை
---------
"பத்து மலைகளை வலிமை பொருந்திய நகமாக்கி அதன் மூலம் என் மேல் குத்திக் கிழித்து இந்த இடத்தில் என்னைக் கொள்ளுகின்றாய்; அத்தகைய நகம் இல்லாது உன்னால் என்னை அழிக்க முடியாது. எனவே, என்னைப் பற்றி இழிந்த மொழி பேசாதே" என்று மறுத்துரைதான்.
---------------------
இரணியன் பாடு*****
...சூரபத்மனாகத் தோன்றின காலமதில்
ஊர் இரப்பனாக உருவாக நான் தோன்றிக்
கொன்றேன் நான் என்று கூறினேன் அப்போது
அந்நேரம் நீதான் ஆண்டி அல்ல கொன்றது என்றாய்
வேலாயுதத்தாலே வென்றாய் நீ அல்லாது
ஏலாது உன்னாலே என்று அன்று பேசினாயே
ஆயுதங்கள் அம்பு அஸ்திரம் வாள் இல்லாமல்
வாயிதமாய் என் நகத்தால் வகிர்ந்தேன் நான் உன்வயிற்றை
என்று மாயன் உரைக்க ஏதுரைப்பான் மாஅசுரன் ...

"இரணியனே, நீ சூரபத்மனாகத் தோன்றிய சமயத்தில் நான் ஊர் இரப்பனாகக் கந்தன் உருவாக உருவெடுத்து உன்னைக் கொன்றேன்.
நான் உன்னைக் கொன்றேன் என்பதை மறுத்து வேலாயுதம் உன்னைக் கொன்றதாகவும், ஆண்டியாகிய நான் உன்னைக் கொல்லவில்லை என்றும், உன்னைக் கொல்லும் அள்வு எனக்குச் சக்தி இல்லை என்றும் கூறினாய்.
எனவே, இப்பொழுது ஆயுதம், அம்பு, அஸ்திரங்கள் இல்லாமல் என்னுடைய நகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி உன் நெஞ்சை இரண்டாகப் பிளந்தேன்" என்று மாயன் உரைத்தார்.
இதைக் கேட்ட இரணியன் மாயனை நோக்கி, ...

சூரன் இரணியனாய்த் தோன்றினான் அவ்வுகத்தில்
மாயன் ஒருகோலம் மகவாய் உருவெடுத்து
வாயில் நடையில் வைத்து மாபாவிச் சூரனையும்
நெஞ்சை அவர் நகத்தால் நேரே பிளந்து வைத்து
வஞ்சகனோடே மாயன் மிகஉரைத்தார் ...

கிரேதாயுகத்தில் தோன்றிய சூரனை இரணியனாய் அந்த யுகத்திலேயே படைத்தார். மாயனும் இரணியனின் மகன் பிரகலாதானாகப் பிறந்து, நரசிம்மனாகவும் ஒரு கோலம் எடுத்து, வீட்டு வாயில் நடையில் வைத்து மகா பாவியான இரணியன் நெஞ்சை நரசிம்மத்தின் நகத்தால் இரண்டாகப் பிளந்து வைத்துக்கொண்டு, இரணியனோடு கூறலுற்றார்.

*சக்திதேவியின் சாபம் தீர்தல்*****
...சத்திசாபம் தீர்த்துத் தவலோகமே அனுப்பித்
தத்தியாய் சூரனையும் சங்காரம் செய்து அந்தச்
சூரன் ஊர்தன்னைத் தீயோன்தனக்கு அளித்து
வீரச் சூரன்தனையும் மேலும் அந்த யுகத்தில்
பார இரணியனாய்ப் படைத்தார்காண் அம்மானை

இவ்வாறு பலமான முறையில் சூரனை அழித்துவிட்டு, சக்தியின் சாபத்தைத் தீர்த்துத் தவலோகத்துக்கு (கயிலை) அனுப்பிவிட்டு, அந்த நாட்டை வேறு ஓர் அரக்கனுக்கு ஆட்சி புரிய அளித்தார்.
வீரனான சூரனை அதே யுகத்தில் வீரமுள்ள இரணியனாய்ப் படைத்தார். இலட்சுமியே, காண்பாயாக.

சக்திதேவியின் சாபம் தீர்தல்*****
ஆதியே அனாதி ஆதி திருவுளமே
சோதியே என்னுடைய சூல்சாபம் தீரும்
என்று உமையாள் எடுத்து மிகஉரைக்க
நன்று என்று அந்த நாராயணர் மகிழ்ந்து
சாபமது தீரச் சாந்தி மிகவளர்த்தார்
தாபமுடன் மாயன் சாந்தி மிகவளர்க்க
அம்மை உமையாளின் ஆனசாபம் தீர்ந்து
செம்மையுடன் கயிலை சென்றனல்காண் அம்மானை ...

சக்திதேவி, "ஆதியே, அநாதியானவரே, ஆதித் திருவுளமே, சோதியே, என்னுடைய முன்வினைச் சாபத்தைத் தீர்த்துத் தர வேண்டும்" என்று பணிவுடன் நாராயணரிடம் எடுத்துரைத்தாள்.
இதைக் கேட்ட நாராயணர் "நன்று" என்று கூறிவிட்டு, அவளது சாபம் தீருவதற்குச் சாந்தி ஓமம் வளர்த்தார்.
இவ்வாறு அனுதாபத்துடன் சாந்தி ஓமம் வளர்த்த காரணத்தால் அம்மை உமையாளின் (சக்தியின்) சாபம் தீர்ந்து மகிழ்வுடன் பரிசுத்தமாகக் கயிலை சென்றடைந்தாள்.

விருத்தம் (ஆசிரியர் கூற்று)*****
சூரனைத் துணித்த சத்தி சூலமும் கடலில் மூழ்கி
வீரமால் பதத்தைப் போற்றி விளம்புவாள் சத்தி மாது
மூரனைச் செயிக்க முன்னாள் முற்சூலமாய்ச் சபித்த சாபம்
தீரவே வேணும் என்று திருப்பாதம் வணங்கி நின்றாள்

சூரனை அழித்த வேலாயுதமாகிய சக்தி கடலில் தீர்த்தமாடித் திரும்பி வந்து வீரம் பொருந்திய திருமாலின் பாதத்தைப் போற்றி "முன்னொரு நாள், சூரனைத் தாங்கள் வெற்றி கொள்வதற்காக என்னை வேலாயுதமாகச் சபித்த சாபம் இப்பொழுது தீர வேண்டும்" என்று சொல்லி வணங்கி நின்றாள்.

*வீரவாகுதேவர் தூது*****
...என்னையோ கொல்ல இரப்பனால் ஏலாது
உன்னையோ கொல்ல ஓட்டுவனோ நான் துணிந்தால்
வேலாயுதத்தாலே வென்று கொண்டது அல்லாது
ஏலாது உன்னாலே இளப்பம் இங்கே பேசாதே
என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்
கொன்றாரே சூரனுட குறை உயிரை அம்மானை.
...என்னையோ கொல்ல இரப்பனால் ஏலாது
உன்னையோ கொல்ல ஓட்டுவனோ நான் துணிந்தால்
வேலாயுதத்தாலே வென்று கொண்டது அல்லாது
ஏலாது உன்னாலே இளப்பம் இங்கே பேசாதே
என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன்
கொன்றாரே சூரனுட குறை உயிரை அம்மானை.
---------
உரை
---------
"ஏ பண்டாரம், என்னைக் கொல்ல இரக்கும் பண்டாரத்தால் முடியாது. நான் உன்னைக் கொல்லத் துணிந்திருந்தால் உன்னைத் தப்பித்துப் போக விட்டிருக்க மாட்டேன். வேலாயுதத்தைக் கொண்டு என்னை வெற்றி கொண்டாய். அந்த வேலாயுதம் இல்லை எனில் என்னை நீ வெற்றி கொள்ள முடியாது. என்னைத் தரம் தாழ்த்தி நீ பேசாதே" என்றான்.
இதைக் கேட்ட கந்தன் மிகுந்த கோபமுற்றுச் சூரனுடைய குறை உயிரையும் போக்கினார். இலட்சுமிதேவியே, கேட்பாயாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக