அசுரர்கள் அழிவு *****
... சால பொருளும் சம்மதித்து ஆங்காரமுடன்
அலையில் வளர்ந்த அரிய கணை எடுத்து
சிலை ஏற்றி அம்பைப் சிரித்து மிகத்தெடுக்க
அம்புப் பகையாலும் ஆதி மால் பகையாலும்
பம்பழித்துச் சூரர்ஊர் பற்பம் போல்தான் ஆக்கி
சூரர் இருவருட சிரசை மிகஅறுத்து
வாரிதனில் விட்டெறிந்து ஆழி சுனையாடி
மலரோன் அடிபணிந்து வைகுண்டம் கேட்டிடவே
பலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார்
அவ்வுகத்தை மாயன் அன்று அழித்து ஈசரிடம்
செவ்வாக நின்று செப்பினார் ஈசருடன்.

---------
உரை
---------
... எல்லாவற்றுக்கும் வழியாக நிற்கும் பொருளாகிய திருமால் அச்சூரர்களை அழிக்கச் சம்மதித்தார். பிறகு தம் வீரத்தை உபயோகித்து அலையிலே வளர்ந்து வந்த சக்தி வாய்ந்த அந்தக் கணையை எடுத்தார்.
பிறகு, அக்கணையை வில்லில் ஏற்றி, அசுரர்கள் மேல் புன்சிரிப்புடன் தொடுத்தார். அந்த அம்பின் பகையினாலும், திருமாலின் பகையினாலும், திருமாலின் பகையினாலும் அவர்களின் இராச்சியம் தூளாக்கப்பட்டது; அசுரர்களின் தலைகள் அறுக்கப்பட்டுக் கடலில் எறியப்பட்டன. பிறகு, அம்பானது, கடல் தீர்த்தமாடித் திருமால் பாதம் பணிந்து வைகுண்டபதவி கேட்டது. பிறகு, அந்த யுகத்தை மாயன் அழித்து ஈசரிடம் சென்று மகிழ்வு பொருந்த நின்று சொல்லலானார்.
---------------------

... தரியா முடுக்கம்தாம் பொறுக்காத தேவர் எல்லாம்
அரியோ என முறையம் அநேகம் பொறுக்கரிதே
என்று ஈசர் சொல்ல இயல்கன்னி ஏதுரைப்பாள்
மலைலோகம் மேலோகம் வையமதில் ஆகாட்டால்
அலைமேல் துயிலும் ஓர்ஆண்டி உண்டு கண்டீரே
முன்னே அச்சூரருக்கு முன் சாபமிட்ட ஒரு
வண்ண சுருதிமுனி மந்திரபுரக் கணையாய்
வளர்ந்து அங்கு இருப்பன்காண் மாயருட பக்கமதிலே
கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபை கூர்ந்தே ஈசர்
மாலை வரவழைத்து வளப்பம் எல்லாம் உரைக்க ...

... இப்பொழுது, அச்சூரர்கள் தேவர்கள் பொறுத்துக் கொள்ள முடியாதவண்ணம் செய்கின்ற துன்பங்களைத் தாங்க முடியாமல் அவர்கள் 'அரியோ' என்று அபயம் இடும் ஒலியைக் கேட்டுக்கொண்டு என்னால் அமைதியாக இருக்க முடியவில்லையே?" என்று வருந்தினார்.
இவற்றைக் கேட்ட இசை போன்ற ஒலியையுடைய சக்திதேவி, ஈசரிடம் வழி ஒன்று கூறுகிறாள்,
"என் அன்பரே, மலைலோகம், மேல்லோகம், பூலோகம் ஆகியவற்றில் உள்ளவர்களால் அவர்களை அழிக்க முடியாவிட்டால் என்ன? அலைமேல் பள்ளி கொண்டுள்ள ஆண்டியாகிய நாராயணமூர்த்தி ஒருவர் உள்ளார் அல்லவா? தாங்கள் அவரை நினைக்கவில்லையா? முன்பு, சுருதி முனிவன் அச்சூரரைச் சாபமிட்டு அவர்களை அழிக்க மந்திரபுரக் கணையாய் மாயருடைய பக்கத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறான், இதை அறிந்து கொள்வீராக" என்றாள். இந்த ஆறுதல் மொழிகளைக் கேட்டு ஈசர் மனம் மகிழ்ந்து திருமாலை அழைத்து அவரிடம் எல்லா நிலைமைகளையும் எடுத்துரைத்தார்.
------------------------

சூரர் அவர் செய்த துஷ்டம் பொறுக்காமல்
வீரமுள்ள தேவர் விரைந்தே முறையமிட
தேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டுக்
காவலாய் நித்தம் கைக்குள் இருக்கின்ற
பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வார் அங்கு ஈசுரரும்
கண்ணே மணியே கருத்தினுள் ஆனவளே
பூலோகம் தன்னில் உள்ள புருடர் ஆயுதத்தாலும்
மேலோகம் வாழும் விமலர் ஆயுதத்தாலும்
மலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும்
அலையாத வரங்கள் அச்சூரர்க்கே கொடுத்தோம் ...

அசுரர்கள் செய்த துன்பத்தைப் பொறுக்க முடியாமல் வீரமுள்ள தேவர்கள்கூட அவசர ஒலி எழுப்பி அபாயமிட்டார்கள். தேவர்களின் அபய ஒலியைச் சிவன் தெளிவாகக் கேட்டு, எல்ல உயிர்களுக்கும் காவலாய் நின்று என்றும் பிரியாது தம்மில் இணைந்து நிற்கும் சக்திதேவியைப் பார்த்து,
"கண்ணே, மணியே, நல்ல சிந்தனையினுள் இருப்பவளே, கேட்பாயாக. தேவர்களைத் துன்புறுத்தும் இந்த அசுரர்களைப் பூலோகத்தில் உள்ள மக்களின் ஆயுதத்தாலும், மேல் உலகத்தில் வாழுகின்ற விமலரின் ஆயுதத்தாலும், மலை மேலே வாழும் மாமுனிவர்களாலும் துன்புறுத்த முடியாத பெரிய வரங்களை அச்சூரர்களுக்கு அன்று நாம் கொடுத்தோம் அல்லவா? ...
--------------------------

சூரர்கள் வரம் பெற்று ஆட்சி புரிதல்*****
... பாரமுள்ள கோட்டை பண்ணினார் அம்மானை
இப்படியே சூரர் இவர் வாழும் அந்நாளில்
முப்படியே சூரர் ஊழி விதிப்படியால்
இறப்பது அறியாமல் எரியை மிகக்கண்டு ஆவி
உறப்புசிக்கச் சென்ற வீட்டில் இறந்தாற் போல்
தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார்
முன்பிலுள்ள சூரர் முடுக்கமதைக் கண்டு ஆவி
நம்பி பதம் மறந்து நாம்தாம் பெரிது எனவே
கெம்பினார் சூரர் கெட்டனர்காண் அம்மானை ...

... பலமான கோட்டைகள் பல அமைத்து அரசாண்டனர்.
இப்படியாக, அசுரர்கள் ஆட்சி புரிந்து வருகையில், முன்னர் விதித்த விதிப்படி தாம் இறந்து போவதைப் பற்றி அறியாமல், விட்டில்பூச்சி தீயைக் கண்டு அதை உண்ணும் ஆசை கொண்டு, அதில் விழுந்து இறப்பதைப் போல, தமது தம்பியர், தமையன், சந்ததிகள், மந்திரிமார், ஆகியோரின் வீரத்தினைக் கண்டு அவர்களின் வீரத்தை நம்பினார். அதனால், அவர்கள் இறைவன் பாதம் மறந்து "நாம்தாம் பெரியோர்கள்" என்னும் ஆணவச் செருக்குக் கொண்டு குதித்து அழியக்கூடிய கெடுதலான உள்ளத்தைப் பெற்றனர்.
--------------------------
உரை
---------
... பலமான கோட்டைகள் பல அமைத்து அரசாண்டனர்.
இப்படியாக, அசுரர்கள் ஆட்சி புரிந்து வருகையில், முன்னர் விதித்த விதிப்படி தாம் இறந்து போவதைப் பற்றி அறியாமல், விட்டில்பூச்சி தீயைக் கண்டு அதை உண்ணும் ஆசை கொண்டு, அதில் விழுந்து இறப்பதைப் போல, தமது தம்பியர், தமையன், சந்ததிகள், மந்திரிமார், ஆகியோரின் வீரத்தினைக் கண்டு அவர்களின் வீரத்தை நம்பினார். அதனால், அவர்கள் இறைவன் பாதம் மறந்து "நாம்தாம் பெரியோர்கள்" என்னும் ஆணவச் செருக்குக் கொண்டு குதித்து அழியக்கூடிய கெடுதலான உள்ளத்தைப் பெற்றனர்.
--------------------------
சூரர்கள் வரம் பெற்று ஆட்சி புரிதல்*****
... சதுர் சூரப்படையாய்ச் சேர்ந்து அங்கு இனிதிருந்தார்
இப்படியே சூரர் இவர் சேர்க்கை தம்முடனே
அப்படியே அந்த யுகம் ஆண்டிருந்தார் அம்மானை
ஆண்டிருந்த சூரர் அவர் இருந்த மேடையது
தாண்டி நின்ற வானத் தடாக உயரமதே
சூரர் படைகள் தொழுது அடிபணிந்து
பாதகருக்கு நித்தம் பணிந்து ஏவல் செய்திடுவார்
ஊழியங்கள் செய்து உற்ற இறை இறுத்துப்
பாளையங்களாகப் பணிந்திருந்தார் அம்மானை
சூரர் கொடுமுடியைச் சூட்டி அரசாண்டு ...

அச்சூரர்கள் நான்கு வகைப்படைகளோடு சேர்ந்து இனிமை பொருந்த கூடியிருந்து அந்த யுகத்தை ஆண்டு வாழ்ந்து வந்தனர்.
இப்படி, ஆண்டு வந்த அவர்களின் சிம்மாசனம் வானலோகத்தைத் தாண்டி நிற்கின்ற உயரம் கொண்டதாக இருந்தது.
சூரர்களின் படைகள், அவர்களைத் தினமும் அடிபணிந்து எல்லாவகை வேலைகளும் செய்து, கேட்கப்பட்ட வரிகளைத் கொடுத்து ஏவல் படைகளாகப் பணிந்து வாழ்ந்து வந்தன. இவ்வகையில் சூரர்கள் கொடுமையான கிரீடத்தை அணிந்து, ...
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக