திருமாலைக் கண்ணனாகப் பிறவி செய்ய முடிவு*****
இப்படியே மாயன் இசைய அந்த ஈசுரரும்
அப்படியே பிறவி அமைக்கத் துணிந்தனராம்
துணிந்தாரே மாயன் தொகுத்தது எல்லாம் ஆராய்ந்தது
அணிந்தார மார்பன் வகைப்படியே செய்யலுற்றார்

*****கண்ணன் அவதாரம்*****
தெய்வகியாள் வயிற்றில் திருமால் பிறந்திடவே
ஐவர்க்கும் உறுதியிட அச்சுதரும் தோன்றுவாராம்
கலக்கமுடன் விலங்கில் கலுழ்ந்து இருந்து மாதுவுட
மலக்கமது தீர மாலோன் பிறக்கலுற்றார்

---------
உரை
---------
இப்படியாகத் திருமால் கூறவும், ஈசர் திருமாலை அப்படியே பிறவி செய்ய முடிவு செய்தார். திருமால் தொகுத்துக் கூறிய எல்லாவற்றின் உண்மைகளையும் ஆராய்ந்து எந்த மாறுதலுமின்றி அந்த வகையிலே எல்லாப் பிறவிகளையும் செய்தார்.

பஞ்சபாண்டவர்களுக்கு ஊக்கம் கொடுத்துக் காத்திடுவதற்காகவும், மனக் கலக்கத்தோடு கைவிலங்குடன் அழுது கலங்கிக் கொண்டிருந்த தெய்வகியின் துன்பம் தீரவும், திருமால் தெய்வகி வயிற்றில் பிறக்கத் தயாரானார்.
---------------------

நடை (வேறு)*****
உருப்பிணியாய் இலட்சுமியை உலகில் பிறவி செய்யும்
கரும்பினிய தெய்வக் கயிலாச மாமணியே
சத்த பெலமுள்ள தத்துவத்தார் தங்களையும்
மெத்த வரம் பெற்ற மிகுஅசுரர் தங்களையும்
எல்லோரையும் இப்பிறவி இதிலே வதைத்திடவும்
எல்லோரையும் பிறவி ஆக்கி வைக்க வேணும் என்றார்
என்றனக்கு நல்ல ஏற்ற கிளைபோல
விந்து வழிக் குலம்போல் மிகுவாய்ப் படையும் என்றார்

என் மனைவி இலட்சுமிதேவியை உருப்பிணியாக (ருக்குமணியாக) பூலோகத்தில் படைக்க வேண்டும்.
கரும்பு போன்ற இனிமை பொருந்திய தெய்வக் கயிலாச மாமணியே, நான் ஏழு யானை பலமுள்ள உடம்பைப் பெற்றவர்களையும், கடினமான அரிய பல வரங்களைப் பெற்ற அசுரர்களையும், வேறு அரக்கர் எல்லாரையும் என்னுடைய இந்த அவதாரத்திலேயே அழிக்கும் நிலையில் அவர்களைப் பிறவி செய்து அருள வேண்டும்.
மேலும், எனது விருப்பத்திற்கு ஏற்ற நல்ல மக்களையும், என் விந்திலிருந்து தோன்றிய சந்ததிகளாக இருப்பவர்களையும் அதிகமாகப் படைக்க வேண்டும்,"" என்று மாயன் கூறி முடித்தார்.

*நடை (வேறு)*****
முன்னே வியாசர் மொழிந்த மொழி மாறாமல்
என்னை அந்தப் பூமியிலே இப்போது பிறவி செய்யும்
செந்தமிழ் சேர் மாயன் சிவனாரையும் பணிந்து
என்றனுக்கு ஏற்ற ஈரையாயிரம் மடவாரைக்
கன்னியராய் என்றனுக்கு கவரியிட நீர் படையும்
பன்னீர்க் குணம் போல் பைம்பொன் நிறத்தவராய்
ஆயர் குலத்தில் அநேக மடவாரைப்
பாயும் உறவாடி இருக்கப் படைப்பீர்காண் ஈசுரரே

"முன்னர் வியாசர் கூறிய ஞானமொழிக்கு மாறுதல் வராவண்ணம் என்னைப் பூலோகத்தில் இப்பொழுது பிறவி செய்வீராக." என்று பணிந்து கூறி, "(நான் ஏற்கெனவே கூறியபடி தாய்மாரைப் படைத்து விட்டீர். இனி) எனது விருப்பத்துக்கு ஏற்ற பத்தாயிரம் கன்னிப் பெண்களைக் கவரி வீசுவதற்குப் படைத்து அருள வேண்டும்.
பன்னீர் மணத்தைப் போன்ற இனிமையான மணமும் குணமும் உடைய அழகான பொன்னிறம் பொருந்திய அநேகப் பெண்களை நான் உறவாடுவதற்காக ஆயர் குலத்தில் படைத்திடல் வேண்டும்.

விருத்தம் (வேறு)*****
முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப் போகாமல்
தன்னை மதலை என எடுக்கத் தவமாய் இருந்த தெய்வகிக்கும்
சொன்ன மொழியும் தவறாமல் துயரம் அறவே தேவருக்கும்
என்னைப் பிறவி செய்து அனுப்பும் இறவாது இருக்கும் பெம்மானே

மீண்டும் திருமால் ஈசரை நோக்கி, "என்றும் இறவாத நிலையில் இருக்கும் இறைவனே, ஏற்கெனவே வியாசர் கூறிய ஞான மொழியின்படியும், ஆகம நூல்களின் நியாய நீதிகள் தவறு வராதபடியும், என்னைக் குழந்தையாகப் பெற்றெடுக்கத் தவம் இருக்கும் தெய்வகிக்கு வியாசர் சொன்ன மொழியில் பிழை ஏற்படாத வகையிலும், தேவர்களுக்கு எல்லாத் துயரங்களும் நீக்கப்படுவதற்காகவும், என்னைப் பிறவி செய்து அனுப்புவீராக" என்று கூறினார்.

திருமாலும் ஈசுரரும் ஆலோசித்தல்*****
அல்லாமல் பின்னும் ஆன தெய்வ ரோகிணியும்
நல்ல மகவான நாராயணர் நமக்கு
மகவாய் உதிப்பார் என மகாபரனார் சொன்னபடி
தவமாய் இருந்து தவிக்கிறாள் தேவகியும்
இப்படியே உள்ள எழுத்தின் படியாலே
அப்படியே என்னை அனுப்பும் என்றார் அம்மானை

அது மட்டுமல்லாமல், இன்னும் ஒரு நிகழ்ச்சி உண்டு. தெய்வகியும் ரோகிணியும், 'ஏற்கெனவே சிவனார் சொன்னபடி, பலருக்கு நன்மை புரியும் குழந்தையாகப் பூலோகத்தில் பிறந்த நாராயணர், தங்களுக்கும் குழந்தையாகப் பிறப்பார்' என்று கடுந்தவம் செய்து தவிக்கின்றார்கள். எனவே இப்படியுள்ள விதி இருப்பதால் அப்படியே என்னைப் படைத்து அனுப்பும்" என்றார்.

*திருமாலும் ஈசுரரும் ஆலோசித்தல்*****
ஆரும் மிகஒவ்வாத அச்சுதரும் ஏதுரைப்பார்
மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி
பாரும் பாரதம் முதலாய்ப் பாரதப் போர்தான் வரையும்
நாராயணராய் நாட்டில் மிகப்பிறந்து
வீறான பார்தான் மிகுதேரை ஓட்டுவித்து
சத்த பலமுள்ள சராசந்தன்தான் வரையும்
மற்றும் அவனோடு ஆறு வலிய பலக்காரரையும்
கொல்ல வகை கூறிக் குரு நிலையைத்தான் பார்த்து
வெல்ல பிறப்பார் எனவே வியாசர் மொழிந்தபடி

ஈசர் கூறியதைக் கேட்டு, யாருக்கும் ஒப்பில்லாத திருமால் "ஈசுரரே, கயிலையில் முன்னர் ஒரு தடவை வியாசர் 'உலகில் பாரத நிகழ்ச்சிகளின் ஆரம்பம்முதல் பாரதப்போர் முடிவுவரையும் செய்து முடிப்பதற்கு நாராயணர் கண்ணபிரானாக உலகில் பிறந்து, வீரம் பொருந்திய அருச்சுனனின் உயர்வான தேரை ஒட்டிச் சென்று, ஏழு யானை பலமுள்ள சராசந்தன்வரை அதிக பலமுள்ள கர்ணன்போன்ற அறுவர்களையும் அவர்களின் உயிர் நிலைகளைக் கண்டறிந்து, அழிக்கும் வழி வகைகளை வெளியிட்டு, அழிக்கச் செய்து, வெற்றி கொள்வதற்குத் துவாபரயுகத்தில் பீரப்பார் என்று சொன்ன ஞானமொழிப்படி நான் பிறக்க வேண்டியுள்ளது பார்ப்பீராக.

வாண நரபாலன் என்னும் மாபாவி கஞ்சனினால்
நாணமது கெட்டோம் எனநாடி மிகத்தேவரெல்லாம்
பூமாதேவிமுதல் பொறுக்க மிகக்கூடாமல்
ஆமா அரியே ஆதி முறையம் என்றார்
முறையம் பொறுக்காமல் முடுகி இங்கே வந்தேன் என்று
மறைவேத மாமணியும் மகிழ்ந்து உரைத்தார் அம்மானை
அதுகேட்டு ஈசர் அச்சுதருக்கு ஏதுரைப்பார்
இதுநானும் கேட்டு இருக்குதுகான் இம்முறையம்
ஆனதால் கஞ்சன் அவனைமுதல் கொல்லுதற்கு
ஏனமது பாரும் என்று எடுத்துரைத்தார் ஈசுரரும்
பாரும் என்று ஈசர் பச்சைமாலோடு உரைக்க

"ஈசுரரே , 'அரக்கனான நரபாலன் என்னும் மாபாவி கஞ்சனால் வெட்கம் கெட்டு வாழுகின்றோம்' என்று எல்லாத் தேவர்களும், பூமாதேவியும், கஞ்சனது கொடுமை பொறுக்க முடியாவண்ணம் 'பசுக் கூட்டங்களைக் காத்த அரியே ஆதியே முறையம்' என்று அபயக் குரலிட்டனர். அது பொறுக்க முடியாமல் மனம் வருத்தமுற்றுத் தங்களைப் பார்க்க இங்கே வந்தேன்" என்று தாம் வந்த காரணத்தை மறை வேத மாமணியாகிய திருமால் மகிழ்ச்சியுடன் எடுத்துரைத்தார்.
உடனே ஈசர், "அச்சுதரே. இந்த அபயக் குரலை நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன், அறிவாயாக. கஞ்சனை முதலில் அழிப்பதற்குரிய வழிகளைப் பார்" என்று முன்பகுதிகளை நினைவுபடுத்தினார்.

விடை வேண்டித் தேவர் மேதினியில் தாம்போக்க
படைவீரரான பச்சைமால் தாம் எழுந்து
ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து
சோதிமணி நாதன் சொல்லுவார் அம்மானை

இவ்வாறு தேவர்கள் எல்லாரும் திருமாலிடம் விடை பெற்றுப் பூலோகத்திற்குச் செல்லவும், எல்லாப் படைகளுக்கும் தலைமை வீரரான பச்சைமால் தமது பள்ளி கொள்ளும் இடத்திலிருந்து எழும்பி ஆதி கயிலையில் வாசம் செய்யும் சிவனிடத்தில் வந்தார். அவரிடம் சோதிமணி நாதனாகிய திருமால் தேவர்கள்தேவியர் ஆகியோரின் அபய மொழிகளைக் கூறலுற்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக