கன்னிகள் ஈசுரரைத் துதித்தல்*****
அன்றே மடவார் ஆதிதனை நோக்கி
ஆதியே அனாதி ஆனந்த மெய்ப்பொருளே
சோதியே அனாதி சொரூபத் திருவிளக்கே
அல்லாய்ப் பகலாய் ஆரிருளாய் நிற்போனே
வல்லாய் புவியை வார்த்தை ஒன்றால் படைத்த
ஆதி பொருளே அனாதி திருவுளமே
சோதி பொருளே சொல்லொணாத ஓவியமே
எட்டாப் பொருளே எளியோர்க்கு எளியோனே
முட்டாத செல்வ முதலே முழுமணியே
கண்ணுள் மணியே கருத்தினுள் ஆனவனே
பெண்ணும் ஆணாகிப் பிறப்பில்லாது நின்றோனே
இறப்பு பிறப்பு இல்லாத எளியார்க்கு எளியோனே
பிறப்பு இறப்பு இல்லாத பேச முடியாதவனே
கருவி தொண்ணூற்று ஆறும் காவல் ஐந்துபேருடனே
உருவு பிடித்து உயிர்ப் பிறவி செய்வோனே
மூவரும் உன்றன் முடி காண மாட்டாமல்
தேவரும் தேடித் திரிந்து அலைய வைத்தோனே
மவ்வும் அவ்வாகி வருந்தி அவ்வும் ஒவ்வாகி
சிவ் அவ்வாய் நின்ற சிவனே சிவமணியே

---------
உரை
---------
அப்பொழுது, அந்தப் பெண்கள் ஆதி நாதனாகிய ஈசுரரை நோக்கி, "ஆதியே, அனாதியே, அனந்த உண்மைப் பொருளே, சோதியே, அனாதியான சொரூபத் திருவிளக்கே, பகலாய் கடும் இரவாய் நிற்போனே. வல்லமைப் பொருத்தியவனே, இவ்வுலகத்தை வார்த்தை ஒன்றால் படைத்த ஆதி பொருளே, அனாதி திருவுளமே, சோதிப் பொருளே, விளக்க முடியாத ஓவியமே, எளிதில் எட்டாத பொருளே, எளியோர்க்கு எளிதாய்க் கிட்டுவோனே, எப்பொழுதும் நிறைந்து விளங்கும் செல்வத்துக்கு முதற்பொருளே, முழுமணியே, கண்ணுள் கருமணியாய் இருப்பவனே, எல்லார் எண்ணத்திலும் கலந்து இருப்பவனே, பெண்ணும் ஆணுமாகிப் பிறப்பு இறப்பு இல்லாத உன் தண்மையைச் சொல்லி விளக்க முடியாதவனே, தத்துவக் கருவி தொண்ணூற்று ஆறுக்கும் காவலாக ஐம்பொறியுடன் உருவத்தை உருவாக்கி உயிரூட்டிப் பிறவி செய்வோனே, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் காண முடியாத உன்னுடைய முடியைத் தேவர்களும் தேடித் திரிந்தலைய வைத்தவனே, 'ம' வும், 'அ' வும் கடின முயற்சி மூலம் அகரம் உகரத்தோடு ஓங்காரமாகி, அதன் மூலம் அடைகின்ற 'சி' ஆகிய பேசா மந்திர நிலையும், 'அ' ஆகிய மூலக் கருத்தாயும் நின்ற சிவமே, சிவமணியே.

---------------------
கன்னிகள் ஈசுரரைத் துதித்தல்*****
பிறவி அதுதான் செய்யவென்று பெரியோன் உரைக்கப் பெண்ணார்
அறவி அழுது முகம்வாடி அரனார் அடியை மிகப்போற்றித்
திறவி முதலே திரவியமே சிவமே உமது செயலை விட்டு
இறவியானால் எங்களுக்கு இனிமேல் பிறவி வேண்டாமே
வேண்டாம் எனவே மெல்லியர் விமலன் அடியை மிகப்போற்றி
மாண்டார் எலும்பை மார்பணியும் மறையோன் பின்னும் மகிழ்ந்துரைப்பார்
தூண்டாச் சுடரோன் திருமாலைச் சேய்என்று எடுத்த செய்கையினால்
ஆண்டார் உமக்கு மகனாகி அதன்மேல் பதவி உங்களுக்கே
மெல்லியரே உங்களுட மெய்வரம்பு தப்பினதால்
செல்லுவீர் துவாரகைச் சீமையிலே அம்மானை
என்றே அரனார் இரு கன்னியரோடு உரைக்க

பிறவி செய்யப் போவதாக ஈசுரர் உரைக்கவும், அதைக் கேட்ட பெண்கள் மனமுடைந்து அழுது முகம்வாடி ஈசரின் பாதங்களைத் துதித்தனர். "எல்லா வழிகளுக்கும் முதல் பொருளாய் நிற்கும் திரவியப் பொருளே, சிவமே, உமக்குத் தொண்டு செய்யும் தொழிலை விட்டு, நாங்கள் அழிந்து போனால் எங்களுக்கு இனி மேலும் பிறவி தர வேண்டாம், ஈசுரரே".
ஈசுரரின் பாதங்களை மிகவும் துதித்துப் போற்றிப் "பிறவி வேண்டாம்" என்று உரைத்த பெண்களைப் பார்த்து, இறந்தவர்களுடைய எலும்பை மார்பில் மாலையாக அணியும் ஈசர் மகிழ்ந்து உரைத்தார், "பெண்களே, தூண்டாமலேயே சுடர் விட்டுக் கொண்டிருக்கும் திருமாலை ஆண் குழந்தை என்று எண்ணி ஆசையோடு எடுத்த காரணத்தால் அந்த மாயன் உங்களுக்கு மகனாகப் பிறப்பான். அதன் மூலம் உங்களுக்கு உயர்ந்த பதவி கிடைக்கும்.
எனவே, மென்மையான பெண்களே, நீங்கள் உங்கள் கன்னிப்பருவம் வாய்ந்த உடம்பைக் காக்கும் ஒழுக்கத்தை மீறி நடந்ததால் நீங்கள் பூவுலகத்துக்குச் சென்று பிறவி எடுப்பீராக" என ஈசுரர் கூறினார்.

விருத்தம்*****
(இரு கன்னிகளையும் ஈசர் சபித்துப் பிறவி செய்தல்)
வாடியே மடவார் தாமும் மார்பதில் துகிலை மூடிக்
கோடியே அயர்ந்து ஏங்கிக் குருவதைப் பாராவண்ணம்
நாடியே தாழ்ந்து பெண்கள் நாணியே நின்றதன்மை
தேடியே மாயன் செய்த செயல் என அறிந்தார் ஈசர்
அறிந்தார் மாயன் சேயாகி அழுதே இரங்கும் குரலதனால்
செறிந்தார் குழலார் இவர்கள் சென்று சேர்த்தே எடுத்து அணைத்ததுவும்
பறிந்தே இவர்கள் நாணினதுவும் பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும்
அறிந்தே கன்னி இருவரையும் அழித்தே பிறவி செய்வாராம்

வாட்டமுற்ற கன்னிப் பெண்கள் இருவரும் ஏற்கெனவே தங்கள் மார்பின் மேல் அணிந்திருந்த சேலையின் மேல் மீண்டும் முந்தானைத் துணியால் மூடி, வெட்கப்பட்டு அயர்ந்து, மனம் ஏங்கித் தவித்து, குருவான சிவனாரைப் பார்க்காதவாறு முகம் தாழ்ந்து, நாணமுற்று நின்ற தன்மையினைக் கண்டு, தமது ஞானசக்தியால் உண்மையைத் தேடி அறிந்து, "இது மாயன் செய்த செயல்" என்று ஈசர் அறிந்து கொண்டார்.
மாயன் குழந்தை வடிவாகி அழுததையும், குழந்தையின் குரலைக் கேட்டு இரக்கப்பட்டு அழகு பொருந்திய குழலையுடைய அப்பெண்கள் சென்று அக்குழந்தையை எடுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கற்பழிந்ததையும், இவர்கள் நாணமுற்றுத் தனங்களில் பால் சுரந்ததையும் ஈசர் அறிந்து கன்னிகள் இருவரையும் அழித்துப் பிறவி செய்யப் போவதாகக் கூறினார்.

தெய்வகியும் ரோகிணியும் கற்பழிதல்*****
கயிலையது ஏகி கறைக்கண்டர் பாதமதில்
மயிலனைய மாமயிலார் வந்தார்காண் அம்மானை
வந்த மடவார் மார்பில் அமுது இளகி
அந்தப் பரமேசுரனார் அவரறிந்து
கன்னியரே உங்கள் கற்பு அகன்றதென்ன
மின்னித் தனங்கள் மெல்லி உடல் ஆனதென்ன
பிச்சை நிறமேனி பால்வீச்சு வீசுதென்ன
அச்சம் இல்லாக் கொங்கை அயர்ந்து உடல் வாடினதேன்
ஏதெனவே சொல்லும் என்று ஈசுரனார்தாம் கேட்க
சூதகமாய் நின்ற தோகைபோல் வாடி நின்றார்

அங்கு (கயிலையில்) ஈசுரரின் பாதங்களை மயில் போன்ற நடையையுடைய அந்த அழகிய பெண்கள் வணங்கினர்.
கன்னிகளின் மார்பிலிருந்து பால் அமுதம் பெருகி வந்ததைப் பரமேசுவரன் அறிந்து, அவர்களை நோக்கி, "கன்னியரே, உங்கள் கற்பு உங்களை விட்டு அழிந்த காரணம் என்ன? கன்னித் தன்மையுள்ள உங்கள் பிஞ்சு உடம்பில் குழந்தை அருந்தும் தாய்ப்பால் மனம் வீசும் காரணம் என்ன? இதுவரையும் அச்சம் இல்லாது நின்ற கொங்கைகள் இப்போது வாடியிருப்பது ஏன்?" என்று கேட்டார். கன்னியர் இருவரும் பூப்பெய்தித் தீட்டுப்பட்ட பெண்ணைப் போன்று தலை கவிழ்ந்து வாட்டமுடன் நின்றார்கள்.
---------------------
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக