*நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...வாருதி நீரை வாரி விழுங்கினன்காண்
கடல் நீர் அவ்வளவும் கடைவாய் நனையாமல்
குடல் எல்லாம் மெத்தக் கொதிக்குது என வெகுண்டு
அகிலம் விழுங்க ஆர்ப்பரித்து நிற்ப அளவில்
கயிலைதனைக் கண்டு கண்கள் மிகக்கொண்டாடி
ஆவி எடுத்து அவன் விழுங்கும் அப்போது
தாவிக் குதித்துக் தப்பினார் மாயவரும்
மாயவரும் ஓடி மண்ணுலோகம் புகுந்து
தூயவரும் இங்கே சிவனை மிகநினைத்துத்
தவசு இருந்தார்காண் தாமோதரனாரும்...

---------
உரை
---------
...கடல் கொண்டிருந்த நீரை முழுவதும் வாரி விழுங்கினான்.
ஆனால் அவன் கடைவாய்க்கூட நனையவில்லை. எனவே, குறோணி "அய்யோ, வயிறு முழுவதும் நன்றாகக் கொதிக்குதே!" என்று கூறிக் கோபக்கனல் வீச, வைகுண்டத்தை விழுங்கும் திட்டத்துடன் நின்றான். கயிலையைக் கண்டு அவன் கண்கள் மகிழ்ச்சிக் கூத்தாடின. எனவே, குறோணி வைகுண்டத்தை விட்டுவிட்டுக் கயிலையை வாரியெடுத்து விழுங்கினான். அத்தருணத்தில் வைகுண்டத்தில் இருந்த மாயவர் அங்கிருந்து தப்பித்துப் பூலோகம் அடைந்தார்.
பூலோகம் வந்த மாயன் ஈசரை நினைத்துத் தவம் புரிந்தார்...
---------------------

**நீடிய யுகம் (குறோணி பாடு)*****
...நகக்கரங்கள் கோடி கால்கள் ஒருகோடி
தவங்கள் அறியாச் சண்டித் தடிமோடன்
குறோணி அவன் உயரம் கோடி நாலு முழமாய்
கயிலை கிடுகிடு என்கும் கால்மாறி வைக்கயிலே
அகிலம் கிடுகிடு என்கும் அவன் எழுந்தால் அம்மானை
இப்படியே குறோணி என்னும் ஓர் அசுரன்
முப்படியே நீடிய யுகத்தில் இருந்தான்காண்
இருந்து சிலநாள் இவன் தூங்கிதான் விழித்து
அருந்தும் பசியால் அவன் எழுந்து பார்ப்ப அளவில்
பாருகம் காணான் பலபேர் உடல் காணான்...

...நகத்தையுடைய கரங்கள் ஒரு கோடி; கால்கள் ஒரு கோடி; தவம் அறியாத அந்தச் சண்டித்தனம் உள்ள தடிமோடன் ஆகிய குறோணியின் உயரம் நான்கு கோடி முழங்களாம். அவன் நடக்கும்போது ஓர் அடி எடுத்து வைத்தால் கயிலை 'கிடுகிடு' என ஆடும். அவன் திடீரென எழுந்தால் வைகுண்டலோகம் 'கிடுகிடு' என அசையும். இலட்சுமிதேவியே கேட்பாயாக.
முன்னால் கூறப்பட்ட நீடிய யுகத்தில் இத்தன்மையான குறோணி என்னும் ஓர் அசுரன் இருந்தான். அவன் சில நாள்கள் நன்றாகத் தூங்கி விட்டு விழித்ததும் கண்டவை எல்லாவற்றையும் உண்ணத் துடிக்கும் கடும் பசியால் துடித்தான். பிறகு அவன் தலையைத் தூக்கிப் பார்க்கின்ற தருணத்தில், இந்தப் பூவுலகையும் அங்குள்ள மக்களின் உடலையும் உண்டால் பசி அடங்காது என்று விட்டு விட்டு,...
---------------------
அய்யா உண்டு

நீடிய யுகம் (குறோணி பாடு)*****
அவ்வுகத்தை ஈசன் ஆர்ப்பரித்த காலமதில்
இவ்வுகத்துக்கு ஆரை இருத்துவோம் என்று சொல்லி
எல்லோரும் கூடி இதமித்தார் அம்மானை
தில்லையார் ஈசன் திருவேள்விதான் வளர்க்க
நல்லையா வேள்வி நன்றாய் வளர்ந்திடவே
பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே
அறந்தான் அறியா அநியாய கேடனுமாய்
பிண்டம் நிறையும் பொல்லாதான் தன்னுடம்பு
அண்டம் அமைய அவன் பிறந்தான் அம்மானை
முகம் கண்கள் எல்லாம் முதுகுப்புறம் மேல் ஆட...

அந்த யுகத்தை ஈசர் ஆரம்பித்த காலத்தில், இந்த யுகத்துக்கு யாரை எதிரியாக உருவாக்க வேண்டும்? என்று கூறி எல்லோரும் சேர்ந்து ஆலோசனை செய்தனர். முடிவில் தில்லையில் நடனமாடும் ஈசர் அன்று வேள்வி ஒன்றை வளர்த்தார். அந்த வேள்வி வெற்றிகரமாக வளர்ந்து, அதன் மூலம், பெரிய மலை போன்று குறோணி பிறந்தான்.
அப்பொல்லாதவன் அறத்தை அறியாத அநியாய கேடனாகவும், உடம்பில் சதை நிறைந்து அண்டத்தைப் போன்று பெரியவனாகவும் பிறந்தான்.
அவன் முகம், கண்கள் எல்லாம் அவனது முதுகுப் புறத்தின் மேல் ஆடிக் கொண்டிருந்தன...

*நாராயணர் பதிலுரைத்தல்*****
...அவ்வுகத்தை கண்டு ஆதிபிரமா மகிழ்ந்து
இவ்வுகத்து நாமம் என்ன இடுவோம் என்று
மாலும் பிரமாவும் மாயாது இருப்போனும்
ஆலோசித்து ஆகமத்தை தாம்பார்த்து
நீடியுகம் எனவே நியமித்து உறுதி கொண்டு
தேடிய முப்பொருளும் செப்பினார்கான் அம்மானை.

அந்த யுகத்தை (இராச்சியத்தை) கண்டு ஆதி பிரம்மா மகிழ்ந்தார். அந்த யுகத்துக்கு என்ன பெயர் சூட்ட வேண்டும்? என்னும் கேள்வி எழுந்தது.
உடனே, திருமால், பிரம்மா, சிவன் ஆகிய முப்பொருளும் ஆகமங்களை ஆராய்ந்து, அந்த யுகத்துக்கு, நீடியயுகம் என்று உறுதி செய்து பெயரிட்டனர்.
இலட்சுமிதேவியே, நீ கேட்பாயாக.

**நாராயணர் பதிலுரைத்தல்*****
நன்றுநன்று என்று நாராயணர் உரைப்பார்
சத்தி சிவமும் தாம் உதித்த காலமதில்
எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும்
ருத்திரம் மயேசுரரும் உதித்த நாளதிலும்
பக்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும்
வானோர் தெய்வார் மறைவேத சாத்திரமும்
ஈனமாய்ச் சண்டன் இவன் பிறந்த நாளதிலும்
ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின்
ஈது உதித்த காலம் இராச்சியம் ஒன்று உண்டு கண்டாய்...

உடனே, நாராயணர் அவள் கருத்தை ஆமோதித்து "நல்லது சொன்னாய்" என்று கூறி இலட்சுமிக்குப் பதில் கூறலுற்றார்.
சக்தியும், சிவமும் தோன்றிய பிறகு எல்லாத் திசைகளிலும் நாம் இருவரும் அவதாரம் எடுத்தோம், பிறகு, உருத்திரர், மயேசுரர், பக்தியுள்ள தேவர்கள், பரநாதர் ஆகியோர் தோன்றினர். வானோர்களும், தெய்வங்களும், நான்கு வேதங்களும், சாத்திரங்களும் தோன்றின; பிறகு, சூரியன், வாயு, அண்டங்கள், உயிரினங்கள் எல்லாம் தோன்றின; தீயகுணங்களுடைய சண்டன் ஆகிய இவன் (கலியன்) அங்குப் பிறப்பதற்கு முன்னால் அவன் பிறக்க இராச்சியம் ஒன்று இருந்தது.

அகில (வைகுண்ட) வளமை*****
...தேவாதிக்கு எல்லாம் திருமுதலாய் நின்றோனே
மூவாதிக்கு எல்லாம் முதன்மையாய் நின்றோனே
உமக்கும் எதிரி உலகமதில் உண்டோகாண்
தமக்கும் எதிரி வந்த தன்மை மிகஉரையும்
யுகத்துக்கு யுகம் பிறந்து உலகிடத்திலே இருக்க
அகத்து வந்த ஞாயம் அருளுவீர் எம்பெருமாள்
என்று திருவும் ஈதுரைக்க மாயவரும்.

தேவர்கள் எல்லாருக்கும் முதல்வனாக நின்றவனே, உமக்கும் எதிரி இந்த உலகத்தில் இருக்கின்றார்களா? ஆச்சரியமாய் இருக்கின்றதே! சுவாமி, அப்படி எதிரிகள் உள்ளனர் என்றால், அந்த எதிரிகள் உண்டான தன்மை பற்றித் தெளிவாக உரைப்பீராக. நீவிர் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து உலகத்தின் மக்களிடையே வாழ்ந்து வர வேண்டி, ஒரே மனத்தோடு நின்றவனின் சுழிமுனை சுவாசத்தில் நின்று, அவர் அகத்தில் புகுந்து, இவ்வுலகத்தில் பிறந்து வந்த முறையினை எனக்குப் புரியும்படி உரைப்பீராக." என்று இலட்சுமிதேவி பணிவுடன் வேண்டினாள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக