*IV. கிரேதா யுகம் (சூரபத்மன் சிங்கமுகவாகனன் பாடு)*****
... இறந்து பிறந்தவற்கும் இளையோன் அவன்தனக்கும்
சிறந்த புகழ் ஈசர் செப்புவார் அப்பொழுது
சூரரே உங்களுக்குத் தோற்றமுள்ள போர்வரங்கள்
வீரரே கேளும் என்று வேதன் இவை உரைக்க
அந்நாளில் சூரன் அகம் மகிழ்ந்து கொண்டாடி
உம்மாலும் அஞ்சு முகம் உள்ளவர் ஆனாலும்
உலகமதில் பண்ணி வைத்த உற்ற ஆயுதத்தாலும்
இலகு மன்னராலும் இந்திரனார் தம்மாலும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும் ...

---------
உரை
---------
... இவ்வாறு இறந்து பிறந்த சூரபத்மனிடமும், சிங்கமுக வாகனிடமும் சிறந்த புகழுடைய வேதத்துக்குத் தலைவனான ஈசர், "சூரர்களே, உங்களுக்குத் தேவையான சக்தி வாய்ந்த வரங்களைக் கேளுங்கள், தருகிறேன்" என்றார்.
சூரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, "ஈசுரரே, உம்மாலும், ஐந்து முகம் பெற்றவர்களாலும், உலகத்தில் உள்ள ஆயுதங்களாலும், மன்னர்களாலும், இந்திரனாலும் கொல்ல முடியாத சக்தி வாய்ந்த வரம் ஒன்று தர வேண்டும். ...
---------------------
உரை
---------
... இவ்வாறு இறந்து பிறந்த சூரபத்மனிடமும், சிங்கமுக வாகனிடமும் சிறந்த புகழுடைய வேதத்துக்குத் தலைவனான ஈசர், "சூரர்களே, உங்களுக்குத் தேவையான சக்தி வாய்ந்த வரங்களைக் கேளுங்கள், தருகிறேன்" என்றார்.
சூரர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, "ஈசுரரே, உம்மாலும், ஐந்து முகம் பெற்றவர்களாலும், உலகத்தில் உள்ள ஆயுதங்களாலும், மன்னர்களாலும், இந்திரனாலும் கொல்ல முடியாத சக்தி வாய்ந்த வரம் ஒன்று தர வேண்டும். ...
---------------------
*IV. கிரேதா யுகம் (சூரபத்மன் சிங்கமுகவாகனன் பாடு)*****
... ஆனதால் ஈசுரரும் அம்மை உமையாளும் இரங்கி
ஈனமாம் சூரனுக்கு ஏதுவரம் வேணும் என்றார்
ஈசர் உரைக்க ஏற்ற அந்தச் சூரனுந்தான்
பாசமுடன் செத்த பற்பன் என்னும் சூரனையும்
எழுப்பித் தரவேணும் யாங்கள் மிகக்கேட்ட வரம்
மழுப்பில்லா வண்ணம் வரம் அருள்வீர் என்றுரைத்தான்
சூரன் இவன் கேட்க சிவனார் அகம் மகிழ்ந்து
பாரமுள்ள ஓமபற்பம் அதைத் தாம் பிடித்து
சிவஞான வேதம் சிந்தித்தார் அப்பொழுது
பவமான சூரபற்பன் பிறந்தனானாம் ...

... அசுரர்கள் தவம் பூரணமாகியும் திருமால் காட்சி அளிக்காததால் ஈசுரரும் சக்திதேவியும் மனம் இரங்கி அற்பமான தன்மையுள்ள சூரனுக்குக் காட்சியளித்து, "சிங்கமுகவாகனனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்" என்று கேட்டார்.
ஈசர் உரைத்ததைக் கேட்ட சிங்கமுகவாகனன், "இறைவா, என் மேல் அதிக பாசமுள்ள இறந்து விட்ட சூரபத்மனை முதலில் உயிர்ப்பித்துத் தர வேண்டும். பிறகு நாங்கள் கேட்ட வரத்தைத் தவறாவண்ணம் தந்தருள வேண்டும்" என்று உரைத்தான்.
சிங்கமுகவாகனன் இவ்வாறு கேட்டதும் ஈசர் மனம் மகிழ்வு கொண்டு, சக்தி வாய்ந்த ஓமத்தில் கிடந்த சாம்பலைக் கையில் வாரி உருட்டிப் பிடித்துச் சிவஞான வேதப்படி தியானித்தார்.
உடனே, பாவத்தன்மை வாய்ந்த சூரபத்மன் பிறந்தான். ...
---------------------
உரை
---------
... அசுரர்கள் தவம் பூரணமாகியும் திருமால் காட்சி அளிக்காததால் ஈசுரரும் சக்திதேவியும் மனம் இரங்கி அற்பமான தன்மையுள்ள சூரனுக்குக் காட்சியளித்து, "சிங்கமுகவாகனனே, உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்" என்று கேட்டார்.
ஈசர் உரைத்ததைக் கேட்ட சிங்கமுகவாகனன், "இறைவா, என் மேல் அதிக பாசமுள்ள இறந்து விட்ட சூரபத்மனை முதலில் உயிர்ப்பித்துத் தர வேண்டும். பிறகு நாங்கள் கேட்ட வரத்தைத் தவறாவண்ணம் தந்தருள வேண்டும்" என்று உரைத்தான்.
சிங்கமுகவாகனன் இவ்வாறு கேட்டதும் ஈசர் மனம் மகிழ்வு கொண்டு, சக்தி வாய்ந்த ஓமத்தில் கிடந்த சாம்பலைக் கையில் வாரி உருட்டிப் பிடித்துச் சிவஞான வேதப்படி தியானித்தார்.
உடனே, பாவத்தன்மை வாய்ந்த சூரபத்மன் பிறந்தான். ...
---------------------
*IV. கிரேதா யுகம் (சூரபத்மன் சிங்கமுகவாகனன் பாடு)*****
... திடமாகப் பூமி செலுத்தி அரசு ஆளுகையில்
வரம் வேண்டும் என்று மலரோன் ஆதி வணங்கி
திரமான ஓமமிட்டுச் செப்புக்குடம் நிறுத்தி
நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல்
அன்று அந்தச் சூரன் அக்கினியில் விழுந்தான்
சூரபற்பன் விழவே சிங்கமுக வாகனனும்
பாரமுள்ள தன் சிரசைப் பறித்து எறிந்தான் அக்கினியில் ...

... அவர்களோடு திறமை பொருந்தியவராக ஆட்சி புரிந்து வந்தனர். அப்பொழுது தமக்கு வேண்டிய வரங்கள் பெற வேண்டும் என்று எண்ணிப் பிரம்மனை வணங்கி, நிலையான ஓமம் செய்து, செப்புக் குடத்தை அதன் பக்கத்தில் நிலை நிறுத்தி, திருமாலை நோக்கித் தவத்தில் இருந்தனர்.
திருமால் காட்சி அளிக்கவில்லை. மிகவும் வருந்திச் சூரபத்மன் ஓமத்தீயில் குதித்து இறந்தான்.
இதைக் கண்ட சிங்கமுகவாகனன் மிகவும் பலம் வாய்ந்த தன் தலையினை அறுத்து ஓமத்தீயில் எறிந்தான். ...

IV. கிரேதா யுகம் (சூரபத்மன் சிங்கமுகவாகனன் பாடு)*****
... மருக்கிதழ் வாயான் மனம் மகிழ்ந்து கொண்டாடி
துண்டம் ஒன்றை இரண்டாய்த் தூயவனார்தாம் வகிர்ந்து
மண்டலங்கள் மெய்க்க வாழ்நாள் கொடுத்தருளி
சிங்கமுகாச் சூரன் என்றும் திறல் சூரபற்பன் என்றும்
வங்கணமாய்ப் பிண்டம் வகுத்தனர்காண் அம்மானை
சூரனுட சிரசு தொளாயிரத்து நூறு அதுவும்
கோரக்கால் கைகள் பொறுப்பு எடுக்கும் மாபெலமும்
சூரன் சுரோணிதத்தைச் சுக்கிலங்கள்தாம் ஆக்கி
ஊரே நீ போ எனவே உற்ற விடை தாம்கொடுக்க
விடை வேண்டிச் சூரன் வேண்டும் படையோடே ...

... கொழுந்து வாசனை பொருந்திய உதடுகள் அமைந்த வாயையுடைய மாயன் இன்னும் மனம் மகிழ்ந்து கொண்டாடி, எஞ்சியுள்ள நான்கு துண்டங்களில் ஒன்றை இரண்டாய் வகிர்ந்து, எல்லா மண்டலங்களும் ஆச்சரியப்பட அந்த இரு துண்டங்களுக்கும் உயிர் கொடுத்து ஆயுளும் கொடுத்தார்.
பிறகு அப்பிண்டங்களுக்குச் சூரபத்மன் என்றும், சிங்கமுகச்சூரண் என்றும் பெயரிட்டு, இருவரையும் சகோதிரப்பாசம் உள்ளவர்களாகச் செய்தார்.
இவ்வாறு பிறந்த சூரர்கள் ஆயிரம் தலைகளும், கோரமான கால்களும் கைகளும், மலைகளைப் பிடுங்கி எடுக்கும் அதிக பலமும் பொருந்தியவர்களாக இருந்தனர், மாயன் குறோணியின் ஒரு பங்கு இரத்தத்தை இச்சூரர்கள் உடம்பில் செலுத்தி இந்திரியம் ஊரச் செய்தார். பிறகு அவர்கள் ஊருக்குப் போக விடை கொடுத்து அனுப்பினார்.
மாயனிடம் விடை பெற்ற சூரர்கள், தங்களிடம் ஊரும் இந்திரியத்தின் உதவியினால் வேண்டும் அளவு படைகளை உருவாக்கி, ...

இன்னம் ஒரு யுகத்தை இப்போது படைக்க என்று
மன்னதிய திருமால் மனம் மகிழ்ந்து
சொன்னவுடன் ஈசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து
முன்னே குறோணி முடிந்த துண்டம் ஆறதிலே
ஓரிரண்டு துண்டம் யுகமாய்ப் பிறந்து அழிந்து
ஈரிரண்டு துண்டம் இருக்குதுகாண் மாயவனே
நூல் முறையைப் பார்க்கில் நெடியுகம் கழிந்தால்
மேலுகந்தான் இங்கே மிகுந்த கிரேதா யுகந்தான்
இருக்குதுகான் என்று ஈசர் உரைத்திடவே ...

"ஈசுரரே , இன்னும் ஒரு யுகத்தை இப்போது படைக்க வேண்டும்" என்றார். மனம் மகிழ்வுடன் இவ்வாறு திருமால் கூறியவுடன், ஈசர் பழமையான வேத நூல்களை ஆய்ந்து தெளிந்து, "மாயவனே, முன்பு குறோணியை ஆறு துண்டுகளாக்கி அழித்ததில் இரண்டு துண்டங்கள் இரண்டு யுகத்தில் பிறந்து அழிந்தன. இன்னும் நான்கு துண்டங்கள் மீதி இருக்கின்றன.
மேலும், நூல்முறைப்படி பார்த்தால், நெடியயுகம் கழிந்தவுடன் அடுத்து இருப்பது கிரேதாயுகம்தான் என்பதை அறிவாயாக" என்று ஈசர் உரைத்தார். ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக