வெள்ளி, 21 நவம்பர், 2014

குறோணி பாடு

இவ்வகையினாலான உடலமைப்பை உடைய அவன் சிறிது காலம் தூங்கி விழித்த போது அவனுக்கு மிகுந்த பசியாக இருந்தது. அவனது கடும் பசியால் கண்டவை எல்லாவற்றையும் எடுத்து விழுங்க துடித்தான். எதை உண்டாலும் பசி தீராது என உணர்ந்த அவன், கடலின் நீர் அனைத்தையும் வாரிக் குடித்தான். கடலின் அனைத்து நீரும் குடித்த பிறகும் அவனின் கடைவாய் கூட நனையவில்லை. அவனது குடல் எல்லாம் கொதித்ததால், உலகத்தை எடுத்து விழுங்க ஆர்ப்பரித்து நின்றபோது, கயிலையை கண்ட அவனுக்கு அதன் மேல் ஆவல் பிறக்க, கயிலையை எடுத்து விழுங்கும் போது, மாயன் அதிலிருந்து தாவி குதித்து தப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக