தலைமைப்பதியான சுவாமித்தோப்புப்பதி
நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் பதினான்கு கிலோமீட்டர்
தொலைவில் அமைந்துள்ளது.
அய்யா
வைகுண்டரின் மறைவுக்குப் பின்னர் அவரது புகழுடலை அடக்கம் செய்யப்பட்ட
சுவாமித்தோப்புப் பதி, அய்யா வழி மக்களின் புனிதத் தலமாகவும், தலைமைப்பதியாகவும்,
முக்கிய வழிபாட்டுத்தலமாகவும் திகழ்கின்றது. அகிலத்திரட்டு அம்மானை அய்யாவின் உடல்
அடக்கம் செய்யப்பட்டதை
“ பொன்மேனிக் கூட்டைப் பொதிந்த
மணிக்கோவில் வைத்து
தென்மேனி
சான்றோர்திருநாள் நடத்தி”
(
அகி. தொ. 2 பக். )
என விவரிக்கின்றது.
அய்யா
வைகுண்டரைத் தெய்வமாக வழிபடும் மக்கள் தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறார்கள்
என எல்.எம்.எஸ். ஆண்டறிக்கை கூறுகின்றது3.
இன்று
வழக்கிலிருக்கும் ஏழு பதிகளில் சுவாமித்தோப்புப் பதியையே தலைமைப்பதியாகக்
பக்தர்கள் கூறுகின்றனர். இதற்கு மாறாக தாமரைகுளம் பதியைச் சேர்ந்த அய்யா வழியினர்
தாமரைகுளம் பதியே தலைமைப் பதி என்று கூறுகின்றனர். அகிலத்திரட்டு அம்மானை தாமரைகுளம்
பதியிலேயே வைத்து அரிகோபால சீடரால்
எழுதப்பட்டதைக் கருத்தில் கொண்டு தாமரைகுளம் பதியைத் தலைமைப்பதி என்று
கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக