சுவாமித்தோப்புப்
பதியில் மாலை ஆறு மணிக்கு மாலை நேர பணிவிடை ஆரம்பமாகிறது. வடக்கு வாசலில்
உகப்படிப்பு, வாழப்படிப்பு போன்ற வழிபாடுகள் நடைபெறுகின்றன. இவை நிறைவு பெற்ற
பின்னர் அன்ன தருமம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ் அன்ன தருமத்தை உம்பான்
என்றும் கூட்டாஞ் சோறு என்றும் கூறுகின்றனர். அரிசி சோறு, பலவகை காய்கறிகள்,
மற்றும் மசால் கலந்து இவ்வுணவு தயாரிக்கப்படுகிறது. தலைமைப் பதியில் மட்டுமே
தினந்தோறும் இவ்வுணவு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது காலை, நண்பகல், இரவு
என மூன்று வேளையும் அன்பர்களுக்கு உணவு வழங்கப்படுகின்றது.
அன்ன
தருமத்திற்கு அன்பர்கள் வழங்கும் அரிசி, காய்கறிகள், மசாலாப் பொருட்கள் போன்றவையே
பயன்படுத்தப்படுகின்றன.
மாலை
வழிபாட்டின் பின்னர் அன்ன தருமம் வழங்கி முடிந்தவுடன் கிழக்கு வாசலில் விளக்கு மணி
ஒலித்து வாகனப்பவனி நடைபெறுகின்றது. வாகனப் பவனி நிறைவுற்ற பின்னர் சந்தனப்பால்
வழங்கி உகப்படிப்புச் சடங்கு நிகழ்த்தப்படுகின்றது.
ஏனைய பதிகளில்
அன்னதானம் வழங்கப்படுவதில்லை. உகப்படிப்பு, வாழப்படிப்பு போன்ற வழிபாடுகள்
நடைபெறுகின்றன. பின்னர் அன்பர்களுக்குத் திருநாமம் இட்டுச் சந்தனப்பால்
வழங்கப்படுகின்றது. வழிபாடு நிறைவுற்ற பின்னர் திருநடை சாத்தப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக