அய்யா வழியை மக்கள்
ஏற்றுக் கொள்ளக் கரணமாக கீழ்க்கண்ட விஷயங்களைக் கூறலாம்.
1)
பதிகள், தாங்கல்களின் அறிவுரை
2)
அனைவரும் சமம்
3)
ஆண், பெண் இருபாலார் இணைந்த வழிபாடு
4)
சமூக உரிமை
5)
தருமம் செய்யம் உரிமை
6)
புதிய வழிபாட்டு முறை
7)
யாரும் தாங்கல்கள் தொடங்கி அய்யா வைகுண்டரை வழிபடும் உரிமை
8)
கணக்க்க் கூறும் உரிமை என்பனவற்றைக் கூறலாம்.
பெரும்பாலான மதங்கள் மனிதர்களை வெவ்வேறாகத் தரம்
பிரித்து வைத்துள்ளன. உதாரணமாக ¯சாரி என்றும், போதகர் என்றும், கடவுளை வழிபாடு
செய்ய உரிமை பெற்றவர்களாகச் சிலரை நியமித்துள்ளன. இவர்களே ஆண்டவனை வழிபாடு செய்ய முடியம்.
ஏனைய மக்கள் தூரமாக நின்று வணங்க மட்டுமே முடியும்.
ஆனால்
“ அய்யா வழியில்” யார் வேண்டுமானாலும்
தாங்கல்கள் தொடங்கலாம். அய்யா வைகுண்டரைப் ¯சை செய்யலாம். இதில் ஆண், பெண் வேறுபாடுகள்
இல்லை. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை. உயர்த்தப்பட்டவன்,
தாழ்த்தப்பட்டவன் என்ற வேறுபாடில்லை. அய்யா வைகுண்டரின் “ அய்யா வழி இயக்கத்தை ” மக்கள் சாதி வேறுபாடின்றி, மத
வேறுபாடின்றி ஏற்றுக் காள்ள இது முக்கியக் காரணமாகும்.
மேலும் தீராத நோயுடையவர்கள்
பலர் தலைமைப் பதிக்குச் சென்று நோய் நீங்கி நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.
பெரும்பாலும் இவர்களே அய்யா வைகுண்டரின் மகிமையை உணர்ந்து தாங்கல்கள் தொடங்கி
அய்யா வைகுண்டரை வணங்குவதோடு அவரது புகழையும் பரப்பி வருகின்றனர். இதுவும் அய்யா
வைகுண்டரைத் தங்கள் கடவளாக மக்கள் ஏற்றுக் கொள்ளக் காரணமாக அமைகின்றது.
அய்யா வைகுண்டர் மக்களுக்கு வருகின்ற நோய்களைத் தீர்ப்பதாலும்,
அனைத்து மக்களையும் ஒருபோலே கருதி அருள்புரிவதாலும் “ அய்யா வழி இயக்கத்தை ” மக்கள் எளிதில் தங்கள் மதமாகவும், தங்கள் கடவுளாகவும்
ஏற்றுக் கொள்கின்றனர்.
மருத்துவம்
மருத்துவ வசதி என்பது வளர்ச்சியடையாத அந்தக்
காலத்தில் மக்கள் அறியாமையில் மூழ்கி இறை கோபமே நோய்களுக்குக் காரணம் என்றிருந்த
மூட நம்பிக்க்கையை மாற்றி, மக்களின் தீராத பல நோய்களைத் தீர்த்து
வைத்து மருத்துவராகவும் அய்யா
வைகுண்டர விளங்கினார் எனலாம்.
அய்யா
வைகுண்டர் தண்ணீர், மண் இரண்டையும் கொண்டு இயற்கை வைத்தியம் புரிந்தார். இதனை
அகிலத்திரட்டு,
“மருந்தாகத்
தண்ணீர் மண்
வைத்தியங்கள்
செய்ததுவும் ” ( அகிலம். தொகுதி 2 பக். 27 )
என்ற விவரிக்கின்றது.
கொடிய
நோயோடு வருகின்ற வருகின்ற மக்களுக்கு
அய்யா வைகுண்டர் முத்திரிப்பதத்திலிருந்து ஐந்து சிறங்கை அளவு தண்ணீர் கோரி
முகத்தில் தெளித்தும், ஐந்து சிறங்கை அளவு தண்ணீர் குடிக்கவும் கொடுத்துப் பின்னர்
அவர்களது நெற்றியில் திருநாமம் இட்டு மண்ணையும் மருந்தாக உண்ணக் கொடுத்தார்.
இருமல்,
சளி, காச நோய், குன்ம வாயு, கால்மொட்டி, கை மொட்டி, குருடு, செவிடு, ஊமை முதலிய பல
நொய்களை அய்யா வைகுண்டர் தீர்த்து வைத்தார். இன்றும் பல மக்கள் நோயுடன் வந்து
முத்திரிப் பதத்தாலும், திரு மண்ணாலும் தங்கள் நோய்க் குணமாகிச் செல்கின்றனர். அய்யா
வைகுண்டரின் அருளால் நோய் குணமாவதைக் கண்ட மக்களே அதிகமாகத் தாங்கல்களை
ஏற்படுத்தியுள்ளதைப் பார்க்கும்போது முத்திரிப்பதமும், திருமண்ணும் இயற்கை
மருத்துவமாகச் செயல்படுகின்றது என நம்பலாம். இன்றும் ஏராளமான மக்கள் தங்கள் நோயைத்
தீர்த்துக் கொள்ள அய்யா பதியை நாடிச் செல்கின்றனர்.
தலம்
அய்யா வைகுண்டர் உபதேசித்த 32 அறங்களைச் செயல்படுத்தும் இடமாகத் தலங்கள்
திகழ்கின்றன எனலாம். இதில் முதல் தலமாக தலைமைப் பதியில் அமைந்துள்ள அன்புவனம்
திகழ்கின்றது.
1.அன்புவனம்
அனைத்துத் தலங்களுக்கும் தலைமைத் தலமாக அன்புவனமே
திகழ்கின்றது. இங்கு வழிபாடுகள்,
அய்யா வழிக் கொள்கை அறிÆட்டல்கள்,
தெளிவுபடுத்தல், தருமங்கள், தவப் பயிற்சிகள் போன்றவை நடைபெறுகின்றன. தினந்தோறும்
மூன்று வேளை அன்னதானமும் நடைபெறுகின்றது. இதனை “அய்யா வைகுண்டர் நித்திய அன்னத்
தரும சாலை ” என்று அழைக்கின்றனர்.
அணையா
அடுப்பு மூலம் இருபத்து நான்கு மணி நேரமும் தொடர் தருமங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வர் அவர்களால்“ கோதானம் ” செய்யப்பட்ட பசுவுடன்
“கோசாலை ” ஒன்றும் சிறப்பாகச்
செயல்பட்டு வருகின்றது. இயற்கை
வேளாண்மை வளர்ச்சிப் பணிகள், சமூகத் தொண்டு போன்றவையும் இங்கு நடைபெறுகின்றன.
2.அய்யா
வைகுண்டர் தவவனம்
இது இரண்டாவது தலமாக அமைகின்றது. கன்னியாகுமரி
மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே தென்பால் கடற்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.
“தெட்சணா ¯மி”, தவ ¯மி” எனவும் இத்தலம்
அழைக்கப்படுகின்றது.
இங்குத்
தினசரி பணிவிடைகள், தருமங்கள் நடைபெறுகின்றன. ஐப்பசி முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி
பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிப்புத் திருவிழாவும், மாசி 20 ஆம் தேதி அய்யா
அவதரித்த நன்னாளில் கலிவேட்டை என்னும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக
நடைபெறுகின்றது.
அந்நாளில்
ஊஞ்சல் சேவை, அன்னதானம் போன்றவையும் நடைபெறுகின்றது. அய்யா வைகுண்டர் சுகமில்லாமல்
இருந்தபோது அவரை அவரது உறவினர்கள் ஊஞ்சலில் வைத்துத் தூக்கிக் கொண்டு சென்றதன்
நினைவாக ஊஞ்சல் சேவை நடைபெறுகின்றது. ஊஞ்சல் சேவையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான
பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
சித்திரை
மாதம் பௌர்ணமி நன்னாளிலும் மாலை 6.30 மணிக்க்குச் சிறப்பு பணிவிடைகள்
மேற்கொள்ளப்படுகின்றன. அன்று தருமங்கள், வாகனப் பவனி, ஊஞ்சல் சேவை, கலை
நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப் பெறுகின்றன.
இவ்விழாவில்
அய்யா வைகுண்டருக்கு முந்திரி அமுது வழங்கும் அருளினைப் பெற்ற பிள்ளையார்விளை திருநிழல்தாங்கலிலிருந்து
அகிலத்திரட்டு ஆகமம் ஊர்வலமாக்க் கொண்டு வரப்படுகின்றது.
ஒவ்வொரு
தமிழ் மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வாகனப்பவனியுடன் மாதத் திருவிழா
நடைபெறுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உகப்படிப்பும், உச்சிப்படிப்பும்,
தருமங்களும் நடைபெறுகின்றன.
3.அய்யா
வைகுண்டர் அருள்வனம்
திசையன்விளை அருகே உறுமன்குளம்கரையில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டர்
அருள்வனம். இது மூன்றாவது தலமாகும்.
அய்யா
வைகுண்டர் நோய்வாய்ப் பட்டுத் திருச்செந்தூர் செல்லும் வழியில் நாராயணரின்
ஏவுதலின்படி இரு முனிவர்கள் அய்யா வைகுண்டரை இருபுறமும் தாங்கி, திருச்செந்தூர்
நொக்கிக் கொண்டு சென்ற இடம் இவ் உறுமன்களம்கரை என்று கருதப்படுவதால் இங்கு இவ்
அருள்வனம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இங்கு தினசரி பணிவிடைகளும்,
தருமங்களும் நடைபெறுகின்றன. மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முதல் 17 நாட்கள் திரு
ஏடு வாசிப்புத் திருவிழா நடைபெறுகின்றது.
அது
போன்று ஆனி மாதம் பௌர்ணமி தினத்தன்று அகிலத்திரட்டுப் பெருவிழா நடைபெறுகின்றது.
அன்றைய தினம் எருமைகுளம் நிழல்தாங்கலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட இரதத்தில் திரு
ஏடு எழுந்தருளல் பவனியும் நடைபெறுகின்றது.இந்த இரதத்தின் பின்னால் பல வாகனங்கள் வர
மிகப் பெரும் வாகனப் பவனி நடைபெறுகின்றது. இப்பவனி திசையன்விளை நகரைச் சுற்றி
உறுமன்குளமகரையை வந்தடைகின்றது. அன்று பணிவிடைகள், அன்னதானம், கலை நிகழ்ச்சிகளும்
நடத்தப் பெறுகின்றன.
தினமும்
தவணைப்பால் வழங்குவது இத்தலத்தின் சிறப்பாகும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்
உகப்படிப்பு, உச்சிப்படிப்பு, தருமம் போன்றவையும் நடைபெறுகின்றன. இங்கு கோசாலை,
மூலிகை பண்ணை, கட்டணமில்லா தையல் பயிற்சி நிறுவனம், இயற்கை வேளாண் பண்ணை
போன்றவையும் செயல்படுகின்றன.
முதியோர்
இல்லம், கல்வி நிலையங்கள் போன்றவை அமைப்பதற்கான
முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இத்தலத்திலுள்ளவர்கள் கூறுகின்றனர்.
4.அய்யா
வைகுண்டர் அருள் ஞானவனம்
இத்தலம் திண்டுக்கல்
மாவட்டம் பழனிவட்டம் மிடாப்பாடியில் அமைந்துள்ளது. தின வழிபாடுகளும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு வழிபாடும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தமிழ்
மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மாத வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. கோசாலை,
முதியோர் இல்லம் போன்றவை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
5.அய்யா
வைகுண்டர் மதுரவனம்
மதுரை அருகே வழப்பட்டியில் இத்தலம் அமைந்துள்ளது.
தினப் பணிவிடைகள், வாரப் பணிவிடைகள், மாத் பணிவிடைகள் போன்றவை சிறப்பாக
நடைபெறுகின்றன. சமூகப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
6.அய்யா
வைகுண்டர் அமிர்தவனம்
ஆறாவது தலமாக இத்தலம் அமைகின்றது. இத்தலம்
பாளையங்கோட்டை சங்குருண்டானில் அமைந்துள்ளது. இங்கும் தினப் பணிவிடை, வாரப்
பணிவிடை, மாதப் பணிவிடை, சமூகப் பணிகள் போன்றவையும் சிறப்பாக நடத்தப்பெறுகின்றன.
7.அய்யா
வைகுண்டர் சிங்கார வனம்
ஏழாவது தலமான அய்யா வைகுண்டர் சிங்கார வனம் அய்யா
வைகுண்டர் சிறை வைக்கப்பட்ட சிங்காரவனத்தில் அமைந்துள்ளது. இத்தலம்
திருவனந்தபுரத்தில் சிங்காரவனம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
அய்யா
வைகுண்டர் சுசீந்திரத்தில் சிறை வைக்கப்பட்டதன் நினைவாக தருமசாலை ஒன்று
சுசீந்திரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குத் தினந்தோறும் பணிவிடைகள், வாரப
பணிவிடைகள், மாத வழிபாடு, ஆண்டுத் திருவிழா போன்றவைகளும், தருமங்களும், சமூகத்
தொண்டும் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக