பதிகளில்
நடைபெறும் ஆண்டுத் திருவிழாக்களை ஐந்தாக வகைப்படுத்தலாம். அவை
1 ) ஆவணித்
திருவிழா
2) தை திருவிழா
3) வைகாசித்
திருவிழா
4) அவதாரத்
தினவிழா
5)
ஏடுவாசிப்புத் திருவிழா என்பனவாகும்.
சுவாமித்தோப்புப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் முதல்
வெள்ளிக்கிழமையும், தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையும், வைகாசி மாதம் இரண்டாவது
வெள்ளிக்கிழமையும் என ஆண்டிற்கு மூன்று முறை
பதினோரு நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்படுகின்றன. இவ அல்லாமல்
கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஏடு வாசிப்புத் திருவிழா பதினேழு
நாட்களும், மாசி பத்தொன்பதில் அவதாரத் தினவிழாவும் ( மார்ச் 3 )
கொண்டாடப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக