ஒடுக்கப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களிடையே
ஒற்றுமை உணர்ச்சியை ஏற்படுத்திடவும், தன்னுடைய சமய போதனைகளைப் பரப்பிடவும் அய்யா
வைகுண்டரால் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனங்கள் பதி என்றும், அதன் வளர்ச்சியாகத்
தோன்றியவை நிழல் தாங்கல்கள் அல்லது இணைத் தாங்கல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இதனை அகிலம் “ நான்வந்
தென்பேரால் நாட்டுமிணைத் தாங்கல்களைத்
தான்
வந்து பார்க்க சந்தோசமாயிருக்கும் ” ( அகிலம். தொகு.2 பக்.456 )
என்று கூறுகின்றது.
அய்யா வழி அன்பர்கள் அய்யா வைகுண்டரின் அருளைப் பெற்றுப்
புதியதொரு வாழ்வைப் பெற்றிட வேண்டும் என்பதனையே “ தாங்கல் ” என்னும் சொல் குறிக்கிறது எனத் திருநாவுக்கரசு
கூறுகின்றார்13 .
இதனை அடியொற்றியே அய்யா வைகுண்டர்
1)
செட்டிக்குடியிருப்பு
2)
அகஸ்தீஸ்வரம்
3)
பாலÆர் ( பாÙர் )
4)
சுண்டவிளை
5)
வடலிவிளை
6)
கடம்பன்குளம்
7)
உன்பரக்கொடி போன்ற ஊர்களில் தாங்கல்களைத் தொடங்கினார்
எனலாம். இவ்Æர்களில் அய்யா வைகுண்டர்
தாங்கல்கள் தொடங்கியது பற்றி அருள்±லும் குறிப்பிடுகின்றது ( அருள்.
116 ).
மேலும் திருநெல்வேலி,
பாம்பன்குளம், பாஞ்சாலங்குறிச்சி போன்ற பல இடங்களிலும் அய்யா வைகுண்டர்
திருநிழல்தாங்கல்களை நிறுவியதை அன்பர்கள் மூலம் அறியமுடிகின்றது
அய்யா வைகுண்டர் தொடங்கி
வைத்த தாங்கல்களைத் தொடர்ந்துஆயிரக்கணக்கான திருநிழல்தாங்கல்களை அய்யா வைகுண்டரின்
அன்பர்கள் தொடங்கினர். இவை அய்யா வைகுண்டர் கூறியபடி மக்களின் வழிபாட்டுத்
தலங்களாகவும், தருமச்சாலைகளாகவும், கணக்குச் சொல்லும் இடங்களாகவும் ( வருங்கால
நிகழ்வுகளைக் கூறுமிடம்), கல்வி போதிக்கும் இடங்களாகவும் செயல்பட்டன. இன்றும்
அவ்வாறே செயல்பட்டும் வருகின்றன.
தாங்கல்களின்
செயல்பாடுகள்
தாங்கல்கள் அனைத்தும் தலைமைப் பதியான
சுவாமித்தோப்புப் பதியைப் பின்பற்றியே செயல்படுகின்றன. தாங்கல்களில்
பணிவிடைகளை மேற்கொள்பவர்கள் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ தலைமைப் பதிக்குச்
சென்று வருகின்றனர். அவதார தின விழா மற்றும் ஏனைய மூன்று திருவிழாக்களின்போதும்
தவறாமல் தலைமைப் பதிக்குச் சென்ற அய்யா வைகுண்டரை வழிபட்டு வருவதை வழக்கமாகக்
கொண்டுள்ளனர்.
தாங்கல்கள்
அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் பரப்பும் இடங்களாகவும், தர்மச் சாலைகளாகவும், மத
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இடங்களாகவும், சாதி, இனம் கடந்து மனித நேயத்தை
வளர்க்கும் இடங்களாகவும் செயல்படுகின்றன. பல தாங்கல்கள் கணக்குச் சொல்லும்
இடங்களாகவும் திகழ்கின்றன. சில தாங்கல்களில் கணக்குக் கூறுவதில்லை.
தாங்கல்களில்
நடைபெறும் வழிபாடுகளை நான்காக வகை செய்யலாம். அவை,
1)
தினப் பணிவிடை
2)
வாரப் பணிவிடை
3)
மாதப் பணிவிடை
4)
ஆண்டுப் பணிவிடை ( திருவிழா ) என்பனவாகும்.
1)
தினப் பணிவிடை
பதிகளைப் போன்றே அனைத்துத் தாங்கல்களிலும் தின
வழிபாடு நடைபெறுகின்றது. சில தாங்கல்களில் அவற்றின் வசதிக்கேற்ப தின வழிபாடு காலை,
நண்பகல், மாலை என மூன்று வேளையும், சில தாங்கல்களில் காலை, மாலை என இரண்டு
வேளையும் நடைபெறுகின்றன. பல தாங்கல்களில் காலை அல்லது மாலை என அவர்களின் வசதியைப்
பொறுத்து ஒரு வேளை மட்டுமே தின வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. .வ்வாறு ஒரு வேளை
மட்டுமே தின வழிபாடு நடைபெறும் தாங்கல்களில் தனியாகப் பணிவிடைக்காரர்கள்
இருப்பதில்லை. அங்கு தாங்கல்கள் நிறுவிய அன்பர்களே பணிவிடைக்காரர்களாகச்
செயல்படுகின்றனர். இவர்களில் பலர் கூலி வேலை பார்ப்பவர்களாக இருப்பதால் அவர்களால்
மூன்று வேளை பணிவிடை சாத்தியமில்லாமல் போகின்றது.
பெரிய
தாங்கல்கள் அனைத்திலும் மூன்று வேளை பணிவிடை நடைபெறுகின்றது. தங்கள் பொருளாதார
வசதிகளுக்கேற்ப தாங்கல்களில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். வசதியான தாங்கல்களில்
நித்தியப்பால், தவணைப்பால் போன்றவை வழங்கப்படுகின்றன.
பொருளாதார
வசதி குறைவான தாங்கல்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தாங்கலைச் சுத்தம்
செய்து கண்ணாடி முன்பு திருவிளக்கை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். அனைத்துத் தாங்கல்களிலும்
காலை, மாலை வேளைகளில் தாங்கல்களைச் சுத்தம் செய்து கண்ணாடி முன்பு திருவிளக்கு
ஏற்றி வழிபடும் வழிபாடு தவறாமல் நடைபெறுகின்றது.
தனியாகத்
தாங்கல்கள் வைக்காமல் வீடுகளில் வைக்கப்படும் தாங்கல்கள் வீட்டின் ஒரு தனி அறையில்
கண்ணாடியும், திருவிளக்கும் வைத்து அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். இது தனியான
தாங்கல்வழிபாடுகளை விட அதிகமாக இருக்கிறதைப் பாரக்க முடிகின்றது. இங்கும் தினம்
அதிகாலை , நண்பகல், மாலை என மூன்று வேளையும் வழிபாடாக இல்லாமல் திருவிளக்கு ஏற்றி
வீட்டிலுள்ளவர்கள் அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர்.
எந்த
வேலையைத் தெரடங்குவதற்கு முன்னரும் அய்யா வைகுண்டரை வழிபட்டு விட்டே இவர்கள்
தங்கள் வேலையைத் தொடங்குகின்றனர். தனியாக அறை இல்லாதவர்கள் வசதியான ஒரு இடத்தில்
குறிப்பாகத் தென் மேற்கு மூலையில் அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். இதற்கான
காரணத்தை அவர்களால் கூற இயலவில்லை.
2)
வாரப் பணிவிடை
வாரத்தின்
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையை அனைத்துத் தாங்கல்களிலும் சிறப்பு நாளாகக் கருதி
கொண்டாடுகின்றனர். பல தாங்கல்களில் காலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும்
சிறப்பாகப் பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது.
பெரிய தாங்கல்களில் அய்யா வைகுண்டரின்
கொள்கைகள் குறித்துச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை
மட்டுமல்லாது கணக்குக் கூறும் நாட்களான செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும்
சிறப்புப் பணிவிடைகள் நடைபெறுகின்றன. கணக்குக் கூறும் தாங்கல்களில் செவ்வாய்,
வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் சிறப்பாகப் பணிவிடைகள்
மேற்கொள்ளப்படுகின்றன. பல தாங்கல்களில் அதிகாலை ஐந்து மணிக்கே திருநடை
திறக்கப்பட்டு பணிவிடைகள் நடைபெறுகின்றன. பிரசாதமாக நித்தியப்பால்
வழங்கப்படுகின்றது.
மாதப்
பணிவிடை
ஒவ்வொரு தாங்கல்களும் தமிழ் மாதத்தின் முதல்
ஞாயிற்றுக்கிழமையை சிறப்பு நாளாகக் கருதுகின்றனர். ஆகவே அன்றைய தினம் சிறப்புப்
பணிவிடைகளை மேற்கொள்கின்றனர். சில தாங்கல்களில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும்,
நான்காவது ஞாயிற்றுக்கிழமையையும் சிறப்பான நாளாக்க் கருதிப் பணிவிடைகளை
மேற்கொள்கின்றனர். இதற்கான காரணத்தை
அவர்களிடம் கேட்டபோது அவர்களுக்குப் பதில் தெரியவில்லை. எங்கள் முன்னோர்கள்
அவ்வாறு மூன்றாவது அல்லது நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் பணிவிடை மேற்கொண்டனர்.
அதைப் பின்பற்றியே நாங்களும் மேற்கொள்கிறோம் என்று கூறுகின்றனர்.
அன்று
பெரும்பாலான தாங்கல்களில் அன்னதானம் வழங்கப்படுகின்றது. அன்னதானம் வழங்க இயலாத
தாங்கல்கள் நித்தியப்பால் தருமம் வழங்குகின்றன.
ஆண்டுத்
திருவிழா
தாங்கல்கள்
அனைத்தும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை ஆண்டு விழாவாகக் கொண்டாடுகின்றன.
பெரும்பாலும் தாங்கல்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆண்டுத் திருவிழாவைக்
கொண்டாடுகின்றன.
திருவிழாவின்போது
அன்னதானம், ஊர்வலம் போன்றவை நடைபெறுகின்றன. தாங்கல்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரு
நாள் திருவிழாவையோ, இரு நாள் திருவிழாவையோ, ஐந்து நாள் திருவிழாவையோ, பத்து நாள்
திருவிழாவையோ கொண்டாடுகின்றன.
சில
தாங்கல்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.
இன்னும் சில தாங்கல்களில் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை ஒரு
நாள் மட்டுமே ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.
பதிகளைப்
போன்றே தாங்கல்களிலும் பிச்சை எடுத்து செய்யம் அன்னதானம் நடைபெறுகின்றது. சில
தாங்கல்கள் அவதார தினத்துடன் ஏடு வாசிப்பையும் ஆண்டுத் திருவிழாவாக நடத்தி
வருகின்றன.
ஆண்டுத்
திருவிழாக்கள் பதிகளில் நடைபெறுவது போன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கி
நடைபெறுகின்றன. கொடி மரமில்லாத தாங்கல்களில் கொடி ஏற்றம் இல்லாமலேயே திருவிழாக்கள்
நடைபெறுகின்றன. பல தாங்கல்களில் பத்தாம் திருவிழா அன்றும், சில தாங்கல்களில்
பத்துத் தினங்களும் அன்னதானம் நடைபெறுகின்றன.
தாங்கல்களின்
வளர்ச்சி
தாங்கல்களின் வளர்ச்சி என்பது என்பது தென்னிந்தியா
முழுவதும் அதிகமாகக் காணப்படுகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு மட்டும் 1500
தாங்கல்களுக்குப் பிடிமண் பாலபிரஜாபதி அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக தருமு இரஜினி
அவர்கள் குறிப்பிடுகின்றார்14.
அய்யா
வைகுண்டர் தன்னுடைய காலத்திலேயே அதிகமான திருநிழல்தாங்கல்களை ஏற்படுத்தி
எண்ணினார். இயன்றவரை ஏற்படுத்தவும் செய்தார். தனது சீடர்களைப் பல்வேறு இடங்களுக்கு
அனுப்பி பல்வேறு தாங்கல்கள் ஏற்பட்டிடவும் வழிவகை செய்தார்.
அய்யா
வைகுண்டரே பல ஊர்களுக்கும் சென்று திருநிழல்தாங்கல்களை ஏற்படுத்தினார். அய்யா
வைகுண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாங்கல்கள் இணைத்தாங்கல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆரம்ப
காலங்களில் தாங்கல்கள் சிறு குடிசைகளில் அமைக்கப்பட்டிருந்தன. இன்று குடிசைகளில்
அமைந்த தாங்கல்களைக் காணமுடிவதில்லை. அனைத்துத் தாங்கல்களும் காங்கிரீட்
கட்டிடங்களாகவே காட்சியளிக்கின்றன.
c. தேசிய விநாயகம்பிள்ளை
அவர்கள் “ தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமன்றி உயர் வகுப்பாரும் ஏற்றத்த்தாழ்வு
என்பது இல்லாது இத்தாங்கல்களுக்கு வந்து வழிபடுவதாகக்” கூறுகின்றார்15.
தென்
தமிழகத்தில் எட்டாயிரத்துக்கும் அதிகமான தாங்கல்கள் காணப்படுவதாக த. கிருஸஷ்ணநாதன்
கூறுகின்றார்16.
இன்று
தமிழ்நாட்டில் மட்டுமன்றி கேரளம், கர்னாடகா, மஹபராஸ்ட்டிரம், ஆந்திரா போன்ற
மாநிலங்களிலும் அதிகமான தாங்கல்கள் காணப்படுகின்றன. தற்போது தமிழர்கள் (
பெரும்பாலும் நாடார் இன மக்கள் ) எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம்
தாங்கல்களை ஏற்படுத்தித் தாங்கள் வாழும் இடங்களிலும் அய்யா வைகுண்டரின்
கொள்கைகளைப் பரப்புவதோடு அய்யா வைகுண்டரையும் வழிபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி
மாவட்டத்தில் தாங்கல்களின் வளர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 3123
தாங்கல்கள் காணப்படுகின்றன. வருங்காலங்களில் இத்தாங்கல்களின் எண்ணிக்கை
கூடக்கூடும்.
அய்யா வைகுண்டர் தோன்றிய நாடார் இன மக்கள்
மட்டுமன்றி வெள்ளாளர், நாயர், செட்டியார், வண்ணார், நாவிதர், பறையர், பள்ளர்,
அளவர், தச்சர் ( ஆசாரி ), பணிக்கர், குரூப் ( கிருஷ்ணவகை) தேவர், காணிக்கார்ர்கள்
போன்றோரும் தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர்.
சில
தாங்கல்களில் அய்யா வைகுண்டர் போதித்த கண்ணாடி, திருவிளக்கு வழிபாட்டோடு பிற தெய்வ
வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். இது போன்ற பிற தெய்வ வழிபாட்டையும், அய்யா
வைகுண்டர் வழிபாட்டையும் மேற்கொள்பவர்கள் நாடார் இனத்தைச் சாராத பிற இனத்தவர்களே.
அய்யா
வைகுண்டரின் வழிபாட்டோடு கிருஷ்ணன் வழிபாடு (நாயர்கள்), முருக வழிபாடு, காளி
வழிபாடு, அம்மன் வழிபாடு ( பள்ளர், பறையர், தேவர், அளவர், வண்ணார், குரூப், ஆசாரி,
செட்டியார்) போன்ற வழிபாட்டையும்
மேற்கொள்கின்றனர். சில நாடார் இன மக்கள் அய்யா வழிபாட்டோடு காளி வழிபாட்டையும்
மேற்கொள்கின்றனர். ஊர்ப்பொது வழிபாடு என்று வருகின்றபோது பிறத் தய்வக் கோயில்களுக்கு வரி செலுத்தி அத்தெய்வ
வழிபாட்டிலும் கலந்து கொள்கின்றனர். அய்யப்ப சுவாமி கோயிலுக்கு மாலை இட்டும்
செல்கின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் எல்லா தெய்வங்களும் அய்யா வைகுண்டரின்
அவதாரங்களே என்பதாகும்.
இன்று
தமிழகம் முழுவதும் 12000 த்துக்கும் திகமான தாங்கல்கள் காணப்படவதாக
அறியமுடிகின்றது. அய்யா வைகுண்டரின் சீர்திருத்தச் சிந்தனைகளாலும், முற்போக்கு
வழிபாட்டு முறைகளாலும், சாதி சமய வேறுபாடுகளற்ற வழிபாட்டு முறைகளாலும்
தாங்கல்களின் வளர்ச்சி அபரிமிதமாகக் காணப்படுகின்றன.
சென்னை,
கோயம்புத்#ர், மும்பை போன்ற பெரு
நகரங்களில் அய்யா வைகுண்டருக்கு மிகப்பெரிய தாங்கல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது
போன்று தாங்கல்கள் மிகப் பெரிய அளவில் அய்யா வைகுண்டரின் முற்போக்குச் சிந்தனைகளை
மக்களிடம் கொண்டு செல்கின்றன எனலாம்.
கரம்பவிளை ( குரூப் ), சுந்தரபுரம் ( பறையர் ). நரிக்குளம்
( பணிக்கர் ), கொட்டாரம் ( பறையர் ), வாரிRர் ( ஆசாரி), மணலோடை ( ஆசாரி ),
மூக்கரைக்கல் ( வெள்ளாளர் ). இடையன்விளை ( நாயர் ), அகஸ்தீஸ்வரம் ( ஆசாரி),
லீபுரம் ( வண்ணார்), பேச்சிப்பாறை ( காணிக்காரர்), பஞ்சலிங்கபுரம் வண்ணார்),
சுண்டன்பரப்பு (கோனார்), குண்டல் ( பறையர்), முகிலன்குடியிருப்பு ( ஆசாரி),
சந்தையடி ( பள்ளர்), பெரியவிளை ( பறையர்), கல்விளை ( சக்கிலியர்), பாலப்பள்ளம் (
குரூப்), புத்தளம் ( செட்டியார்), இலாயம் ( பறையர் ), ஆரல்வாய்மொழி ( பறையர்),
வீயன்னூர் ( நாயர்), கூட்டுங்கால்விளைவீடு (வாவறை - நாயர்), துண்டத்துவிளை (ஆறுதேசம் - காணிக்காரர்),
தச்சமலை ( காணிக்காரர்), தாமரைகுளம்பதி ( ஆசாரி), கரிக்கத்திவிளை ( கூரியகோடு -
நாயர்), போன்ற ஊர்களில் நாடார் அல்லாத மக்கள் தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை
வழிபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி
மாவட்டத்தில் தாங்கல்களின் எண்ணிக்கை
தமிழகத்தில் அதிகமான தாங்கல்கள் அமைந்துள்ள
மாவட்டங்களில் அய்யா வைகுண்டர் பிறந்த கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று.
இம்மாவட்டத்தின் பெரும்பாலான ஊர்களில் மூன்றுக்கும் மேற்பட்ட தாங்கல்கள்
காணப்படுகின்றன. அதிகபட்சமாக ஏழு தாங்கல்கள்
வரை காணப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக