அன்பான அய்யா வழி மக்களுக்கு பணிவான வணக்கங்கள்,இங்கு பெரும்பத்து ஸ்ரீமன் நாராயண சுவாமி அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல்
பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் காண்போம்.முதலில் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிக் காண்போம்.
வருடந்தோறும் நடைபெறும் சிறப்புகள்:
புரட்டாசி மாதம் கொடி ஏறி நான்கு நாட்கள் திருவிழா வெகு சிறப்பாக
நடைபெறும். சித்திரை மாதம் திரு ஏடு வாசிப்பு இரண்டாவது வெள்ளி கிழமை
தொடங்கி பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். மாதம் தோறும் கடைசி ஞாயிறு
திருவிளக்கு பணிவிடை நடைபெறும். வாரத்தில் அனைத்து ஞாயிற்றுகிழமையும்
மதியம் உச்சி படிப்பு நிறைவடைந்து பால் இனிமம் வழங்குதல் நடைபெறும்.மற்றும்
இரவு அன்னதர்மம் நடைபெறும்.
திருவிழாவின் சிறப்புகள்:
வருடம்தோறும் புரட்டாசி முதல் வெள்ளி கிழமை கொடி
ஏற்றத்துடன் திருவிழா இனிதே ஆரம்பமாகி திங்கள் இரவு 2 மணிக்கு(செவ்வாய்
அதிகாலை 2 மணிக்கு) கொடிஇறக்கி தர்மம்(மலையாள கஞ்சி)கொடுத்து திருவிழா
நிறைவுபெறும்.
வெள்ளி:
காலை: கொடியேற்றம் முடிந்தவுடன் பால்,பாயாசம்,தேங்காய்,பழம் தர்மம் நடைபெறும்.
மதியம்: உச்சிப்படிப்பு
இரவு: உகப்படிப்பு முடிந்தவுடன் அன்னதானம்
சனி:
காலை: உகப்படிப்பு
மதியம்: உச்சிப்படிப்பு முடிந்தவுடன் பால்,பாயாசம்,தேங்காய்,பழம் தர்மம்
நடைபெறும்.
இரவு: உகப்படிப்பு முடிந்தவுடன் அன்னதானம்
இரவு 10மணிக்கு "அய்யாவழி இன்னிசை புலவன் செந்தில்குமார்"
அய்யாவழி கச்சேரி நடைபெறும்
ஞாயிறு:
காலை: உகப்படிப்பு
மதியம்:உச்ச்சிபடிப்பு முடிந்தவுடன் கடுகு பிச்சை கொடுக்கப்படும்
இரவு: உகப்படிப்பு முடிந்தவுடன் அன்னதானம்
திங்கள்:
காலை:4மணிக்கு அய்யா கருட வாகனத்தில் ஊர் முழுவதும் பவனி வருதல்
மதியம்:உச்சிப்படிப்பு
இரவு:உகப்படிப்பு முடிந்தவுடன் அய்யா பள்ளி கணக்கர் மற்றும்
சிவாயி(அய்யாவின் காவல் தெய்வம்) மற்றும் அனுமான் கருட ஆழ்வார்
தெய்வங்களுடன் பெரும்பத்து ஊர் முழுவதும் வீடு வீடாக சென்று
மக்களுக்கு அருள்பாளிப்பார்கள்.ஊர் முழுவதும் அய்யா மற்றும் காவல்
தெய்வங்கள் சுற்றி முடிந்தவுடன் பதியின் முன்புறத்தில் வேம்படியின் கீழ்
சாமியாட்டம் சிறிது நேரம் நடக்கும்.பின் சாமியாட்டம் முடிந்தவுடன்
செவ்வாய் அதிகாலை 2மணிக்கு கொடிஇறக்கி தர்மங்கள் கொடுத்து
திருவிழா இனிதே நிறைவுபெறும்.
ஏடு வாசிப்பு:
வருடந்தோறும் சித்திரை மாதம் இரண்டாம் வெள்ளி முதல் திரு ஏடு வாசிப்பு
10நாட்கள் நடைபெறும்.10நாட்களும் அன்ன தர்மம் நடைபெறும். 8ஆம் நாள்
திருஏடு வாசிப்பில் அய்யா வைகுண்டர் ஏழு அம்மைமாரையும் கல்யாணம் செய்யும்
நிகழ்ச்சி திருகல்யாணம் ஆகும்.
10வது நாள் திருஏடு வாசிப்பில் அய்யா வைகுண்டர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி
நடைபெறு.இரவு 10மணிக்கு அய்யா பூ வாகனத்தில் ஊர் முழுவதும் பவனி வருவார்.
அற்புதங்கள்:
பெரும்பத்து ஊரில் கருட வாகனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.மிகமிக
நன்றாக இருக்கும்.புரட்டாசி மாதம் திருவிழாவில் போதும் கருடன் மூன்று முறை
கொடி மரத்தை 30நிமிடத்தில் சுற்றி வரும். திருவிழாவில் வீதி உலா வரும்போது அனுமான் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
அய்யா வைகுண்டர் கேட்ட வரத்தை கொடுப்பார் என்று அனைவரும் நம்பி செல்லலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக