தலைமைப் பதியான
சுவாமித்தோப்புப் பதியில் பதினொன்றாம் நாள் திருவிழா முடிந்து, பன்னிரண்டாம் நாள்
திருவிழாவின் போது கூறும் போதிப்பை “முக்கியப் போதிப்பு ” என்று கூறுகின்றனர்.
இப்போதிப்பை
வருடத்திற்கு ஒரு முறை கூறி அய்யாவிடம் விடை
பெறுவது அய்யா வழி மக்களின் மரபாகக் காணப்படுகின்றது. இப் போதிப்பின் மூலம் வருடம் முழுவதும் தங்களை ஒரு கவசம் போல அய்யா
வைகுண்டர் பாதுகாப்பார் என்பதும் அய்யா
வழி மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது6.
தினப்
போதிப்பைக் கூறிய பின்னர் முக்கியப் போதிப்பைக் கூறுகின்றனர்.
“
அய்யா எங்களுக்கும்
கூரையிலிருக்கும் நருள்களுக்கும்
------------------------------
------------------------------
நொம்பலமும் தீர்க்கணும்
அய்யா தாங்கலுக்கும்
அய்யா கூரைக்கு ” ( அருள். பக். 9
)
எனக்
கூறிவிட்டுத் தரையில் விழுந்து வணங்கி அய்யாவிடம் விடை பெற்று வீட்டிற்குச்
செல்கின்றனர். இந்த முக்கியப் போதிப்புத் தலைமைப் பதியில் மட்டுமெட நடை பெறும்
என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக