சுவாமித்தோப்புப்
பதியில் நண்பகல் பணிவிடை மதியம் சுமார் 12 – மணியளவில் தொடங்குகின்றது. அப்போது
கிழக்கு வாசலின் முன்பாகச் சங்கொலி முழங்க, மணியோசையை எழுப்பி, உச்சிப்படிப்பு
என்னும் வழிபாட்டுப் பாடலைப் படித்து அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர்.
அதன் பின்னர்
அன்பர்களுக்குத் திருநாமம் இடுதல், சந்தனப்பால், இனிமம் போன்றவை வழங்கப்படுகின்றன.
அதன் பின்னர் வடக்கு வாசலில் மணியோசையை எழுப்பியவாறு தவணைப்பால் தருமம்
வழங்கப்படுகின்றது.
ஏனைய பதிகளிலும்
12 – மணியளவிலேயே நண்பகல் பணிவிடை தொடங்குகிறது. சங்கொலி மற்றும் மணியோசையை
எழுப்பியவாறு உச்சிப்படிப்பு வழிபாட்டுப் பாடலைப் பாடி வழிபாடு நடத்துகின்றனர். பக்தர்களுக்குத்
தவணைப்பால் தருமமும் வழங்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக