ஒவ்வொரு மதங்களும் கடவுளை வழிபடும் முறைகளை
வெவ்வேறு பெயர்களில் குறிப்பிடுகின்றன. இந்துக்கள் ¯சை என்றும், கிறித்துவர்கள் திருப்பலி, ஆராதனை என்றும் இசுலாமியர்கள் தொழுகை
என்றும் குறிப்பிடுகின்றனர்.அய்யா வழி மரபில் பணிவிடை என்னும் சொல்லைப்
பயன்படுத்துகின்றனர்.
அன்று
வழக்கிலிருந்த மதங்களுக்கு மாற்றாகவே பணிவிடை என்ற புதிய நடைமுறையை, புதிய
சொல்லாடலை அய்யா வைகுணடர் பயன்படுத்தினார். இந்துக் கோயில்களில் கடவுளுக்குப் ¯சை செய்ய தகுதி படைத்தவர்கள் நம்¯திரி பிராமணர்களே என்ற கொள்கை நிலவி வந்த
காலகட்டத்தில் அனைத்து இன மக்களும் இறைவனுக்குப் பணிவிடை செய்யலாம் என்ற உயரிய
கொள்கையை அய்யா வைகுண்டர் கொண்டு வந்தார். இதை
“ பிராமண வேசம்
போடப் பக்தன்மாரே நீங்கள் உண்டு”
( அருள். பக். 124 )
என்னும் வரிகளின் மூலம் உணரலாம்.
பணிவிடையில்
திருவிளக்கு ஏற்றுவது என்பது முக்கிய இடம் பெறுகிறது. திருவிளக்கு ஏற்றுவதற்கு
தேங்காய் எண்ணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எண்ணைகளைப் பயன்படுத்தக்
கூடாது. இந்து மதத்தில் விளக்கு எண்ணையைப் பயன்படுத்துவதற்கு மாற்றாகவே அய்யா
பதிகளிலும், தாங்கல்ளிலும் தேங்காய் எண்ணையைப் பயன்படுத்துகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக