பெயர் காரணம்
தந்தையின் பாதை -
இச்சமயம் தோன்றிய சுவாமிதோப்பு பகுதியின் தமிழ் பேச்சு
மொழியில், அய்யா (தந்தை) + வழி (பாதை). எனில், தந்தையை மிகவும் நேசத்தோடு
அழைக்கும் 'ஐயா' என்னும் பதத்தை இறைவனை அழைக்க பயன்படுத்தி, 'அன்புத்
தந்தையின் பாதை' என்று பொருள்கொள்ளப்படுகிறது.
தலைவனின்
ஒப்புயர்வற்ற வாய்மை - அய்யா (தலைவன்) + வழி (ஒப்புயர்வற்ற வாய்மை) என
இப்பதங்களின் இலக்கியப் பயன்பாடுகளிலிருந்து பொருள்கொள்ளப்படுகிறது.
குருவின் வழிபாடு - அய்யா (குரு) + வழி (வழிபாடு) என கொள்ளப்படுகிறது.
இறைவனின் பாதத்தை சேரும் வழி - அய்யா என்பது (இறைவன்) + வழி என்பது (சேரும் வழி) எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.
மேலும்
அய்யா என்னும் பதம் தமிழில், தந்தை, குரு, உயர்ந்தவர், சிறந்தவர்,
மதிக்கத்தக்கவர், தலைவர், அரசர், போதகர் என்றெல்லாம் பொருள்படுவதாலும், வழி
என்னும் பதம் தமிழ் மொழியில், பாதை, விதம், முறை, செயல்வகை, கருத்து,
இலக்கு, நோக்கம், என்றெல்லாம் பலவாறாக பொருள்படுவதாலும் இப்பதங்களின்
பயன்பாடு இங்கே வரையறைக்குட்பட்டதல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக