கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் இனத்தவர்களே அதிகமான தாங்கல்களை
நிறுவியுள்ளனர். ±ற்றுக்கு தொண்ணூறு
சதவிகித தாங்கல்கள் இம்மக்களாலேயே நிறுவப்பட்டுள்ளன ( 2823 ( 90 %).
நாயர்
இவ்வின மக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம்,
விளவங்கோடு தாலுகாக்களில் அதிகமான தாங்கல்களை நிறுவி அய்யா வைகுண்டரை
வழிபடுகின்றனர். ஏனைய தாலுகாக்களில் அதிகளவு தாங்கல்கள் காணப்படவில்லை. நாடார் இன
மக்களுக்கு அடுத்தபடியாக இவ்வின மக்களே அதிகமான தாங்கல்களை நிறுவியுள்ளனர்.
மொத்தம் 68 ( 2.04% )
தாங்கல்கள் காணப்படுகின்றன.
ஆசாரி
நாயர்
இனத்தவர்களக்கு அடுத்தபடியாக ஆசாரி இனத்தவர்கள் அதிகமான தாங்கல்களை
நிறுவியுள்ளனர். மொத்தம் 63 ( 1.89 %) தாங்கல்கள்
காணப்படுகின்றன.
கோனார்,
நாவிதர், பறையர்கள்
இவ்வின மக்களின் தாங்கல்கள் 41 ( 1.23 % ) காணப்படுகின்றன. நாவிதர்கள் 37 (1.11 %) தாங்கல்களும், பணிக்கர்
இனத்தவர்கள் 19 (.57 % ) தாங்கல்களும், பறையர் இன மக்கள் 16 (.48 % ) தாங்கல்களும், வெள்ளாளர்கள் 8 (.24 % ) தாங்கல்களும், செட்டியார்கள் 6 (.18 % ) தாங்கல்களும், தேவர் 5 ( .15 % ) தாங்கல்களும், குரூப் ( கிருஷ்ணன் வகை ), இன மக்கள் 3 ( .3 % ) தாங்கல்களும், அளவர்
இனத்தவர்கள் 3 (.3%) தாங்கல்களும்
நிறுவி அய்யா வைகுண்டரை வழிபட்டு வருகின்றனர்.
தாங்கல்களும்
பிற தெய்வ வழிபாடுகளும்
தாங்கல்களில் இந்து மத தெய்வங்களையும் வழிபடும் மரபு
காணப்படுகின்றது. நாடார் இனத்தைத் தவிர்த்த பெரும்பாலான மக்கள் அய்யா வைகுண்டரின்
வழிபாட்டோடு பிற தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். அய்யா வைகுண்டரின்
அவதாரத்திற்கு முன்னரே தாங்கள் குடும்பத்தினர் பிற தெய்வ வழிபாட்டை மேற்கொண்டு
வருவதால் அவ்வழிபாட்டைத் தாங்களும் மேற்கொள்வதாகக் கூறுகின்றனர். அய்யா வைகுண்டர்
உலகிலுள்ள அனைத்துக் கடவுளின் அம்சம் என்று
அகிலத்திரட்டில் கூறியிருப்பதாலும் பிற தெய்வ வழிபாட்டை தாங்கல்களில்
மேற்கொள்வதாகக் கூறுகின்றனர். இவர்களது பிற தெய்வ வழிபாட்டில் பிற மத தெய்வங்களின் வழிபாடு காணப்படவில்லை என்பது
கவனிக்கத்தக்கது. இந்து மதத் தெய்வங்களின் வழிபாடு மட்டுமே காணப்படுகின்றது.
என்றாலும் பிற மத துவேசம் இம்மக்களிடம் காணப்படவில்லை. எல்லா மதக் கடவுளரும் அய்யா
வைகுண்டரின் அம்சமே. இதில் பிற மதக்
கடவுளர்கள் மீதும் அக்கடவுளர்களைப் பின்பற்றும் மக்கள் மீதும் எதற்குத் துவேசம்
கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.
இத்தகைய
ஒரு மத நல்லிணக்கக் கோட்பாட்டை நாம் பிற மத வழிபாடுகளில் காண்பது என்பது அரிது.
இது அய்யா வழி வழிபாட்டில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது எனலாம். இது அய்யா
வைகுண்டரின் கொள்கைகள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அம்மக்களை
நல்வழிப்படுத்தியுள்ளதைத் தெளிவுபடுத்துகின்றது. அனைத்து மத தெய்வங்களும் என்
அம்சமே என அய்யா வைகுண்டர் கூறியதையே இம்மக்கள் அடியொற்றி மத நல்லிணக்கத்தோடு
வாழ்கிறார்கள் எனலாம்.
நாடார் இன மக்கள் அய்யா
வைகுண்டரின் வழிபாட்டோடு பிற தெய்வ வழிபாட்டை மேற்கொள்வதில்லை. ஆனால் பிற தெய்வக்
கோயில்களுக்குச் செல்வது, ஊர் மக்களோடு சேர்ந்து வரி செலுத்திப் பிற தெய்வ
வழிபாட்டில் கலந்து கொள்வது போன்ற செயல்களை மேற்கொள்வதைக் காணமுடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக