இந்து மதத்தினர்
மாதத்தின் கடைசி செவ்வாய் அல்லது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளைச் சிறப்பான நாளாகக்
கருதி சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். பதிகளில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு
மேற்கொள்ளப்படுகின்றது.
தமிழ் மாதத்தின்
முதல் ஞாயிறு அன்று தினவழிபாடு போன்று அதிகாலையில் திருநடை திறப்பு சங்கொலி,
வெண்கல மணி அடித்தல், வாகனப்பவனி, போன்ற
சடங்குகள் நடைபெறுகின்றன. அன்று அன்னப்பால் வைபவம் ( பால் வைப்பு ) சிறப்பாக
நடைபெறுகின்றது.
அய்யா வைகுண்டர்
அவதாரம் எடுத்த தினம் என்பதால் வார, மாத
ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சுவாமித்தோப்புப்
பதியில் மட்டுமல்லாது ஏனைய பதிகளிலும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையைச்
சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.
சுவாமித்தோப்புப் பதியில் மட்டுமல்லாது ஏனைய பதிகளிலும்
அன்பர்கள் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறன்று ஏராளமாகக் கூடுகின்றனர்.
அம்பலப்பதியில்
ஒவ்வ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையைச் சிறப்பான நாளாகக்
கொண்டாடுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக