நித்தியப்பால் (வெண்பொங்கல்
படைப்பதையே நித்தியப்பால் என்கின்றனர் ) படைக்கும் தர்மத்திற்கு முன்னர்
அடிக்கப்படும் மணியை “ பால்மணி ” என்று அழைக்கின்றனர். அப்போது மணியோசையோடு நாதசுரமும்
இசைக்கின்றனர். வாணவேடி க்கைகளும் நடைபெறுகின்றன. சங்கொலி முழங்க, மணி அடித்து
பணிவிடை முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் தரையில் வீழ்ந்து வணங்குகின்றனர்.
அதன் பின்னர் போதிப்பு, திருநாம்ம் இடுதல், சந்தனம் கொடுத்தல், தருமங்கள் செய்தல்
போன்ற சடங்குகள் நடைபெறுகின்றன.
அய்யா
வைகுண்டர் மக்களிடம் தக்குக் காணிக்கை, ¯சைகள், கைகூலி, காவடி, தீபம், #பம் போன்றவை தேவையில்லை என்று தடுத்ததை
அகிலத்திரட்டின் மூலம் அறியலாம் ( அகி. தொ. 2. பக். 134 ). எனவே பதிகளிலும்,
தாங்கல்களிலும் பணிவிடைகள் மிக எளிமையாகவே நடைபெறுகின்றன.
பணிவடை
நிகழ்வின்போது வெற்றிலை, பாக்கு, பழ வகைகள், பிச்சிப் ¯ போன்ற பொருட்களை அய்யாவுக்குப் படைக்கின்றனர். இதனை
நேமித்தல் என்று கூறுகின்றனர். அரளிப் ¯, தெத்திப் ¯, குங்குமம், மஞ்சணை, சூடம் போன்றவை
பயன்படுத்தப்படுவதில்லை. தேங்காயை உடைப்பதோ, தீப #பம் காட்டுவதோ கூடாது.
நாமவேல் அலங்காரம், ¯மாலைகளைத் தொங்க விடுதல் போன்ற பணிகள்
நிறைவடைந்த பின்னரே மேலே கூறியவாறு ¯சைப் பொருட்கள் வைக்கப்படுகின்றன. அதன் பின்னர்
வெண்சாமரம் வீசுகின்றனர். அப்பொழுது சங்கொலி முழங்க, வெண்கல மணியோசை
அடிக்கப்படுகின்றது. சரவிளக்குகளை எரியச் செய்து அடிக்கும் மணியை விளக்குமணி என்று
அழைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக