வெள்ளி, 21 நவம்பர், 2014

சீவாயு மேடை

ஒடுக்கப்பட்ட இன மக்கள் தங்கள் தெய்வங்களுக்குப் பல்வேறு நேர்த்திக் கடன்களுக்காகப் படையல்கள், காணிக்கை போன்றவை அளிப்பது வழக்கம். ஆனால் அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டிலும், அருள் ±லிலும் ¯சை, இறை வணக்கங்கள் போன்றவை கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் ஏனைய மதச் சடங்கு, சம்பிரதாயங்களிலிருந்து  மாறுபட்டு சில வழிபாட்டு முறைகளை அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு அறிமுகப்படுத்தியதை அகிலத்திரட்டிலும், அருள் ±லிலும் காணமுடிகிறது. அவ்வாறு அய்யா வைகுண்டர் கூறியபடி பக்தர்கள் இன்றும் எவ்வித மாற்றமுமின்றி அவ்வாறே பின்பற்றி வருகின்றனர்.
     “ கடவுளுக்குப் படையல்களையும், காணிக்கைகளையும் படைத்துப் பழக்கப்பட்ட மக்கள், அய்யா வைகுண்டரின் புதிய வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டதோடு தங்களது பழைய மரபுகளையும் புறந்தள்ள முடியாமல் திண்டாடினர். அவர்களது அன்பினையும், பரிதவிப்பினையும் கண்ட சுவாமி அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் ஒரு திண்ணையில் தங்கள் படையல்களையும், காணிக்கைகளையும் வைத்துச் செல்லும்படிக் கூறினார். அதன்படியே பக்தர்கள் தங்களது காணிக்கைகளை வைத்து அய்யா வைகுண்டரை வழிபட்டுச் சென்றனர். அம்முறை இன்றும் தலைமைப் பதியில் வழக்கிலுள்ளது. அவ்வாறு பக்தர்கள் வைத்துச் செல்லும் பொருட்களை அய்யா வைகுண்டரே காவல் செய்வதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். காணிக்கைகளை வைத்துச் செல்லும் திண்ணையையே சீவாயு மேடை என அழைக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் தொழில் செய்பவர்களை சீவாயி என அழைப்பர் இதிலிருந்தே சீவாயு மேடை என அழைக்கப்பெற்றது என உணரலாம்4.
     சுவாமித்தோப்புப் பதியின் பள்ளியறைக்கு வலது புறம் இம்மேடை அமைந்துள்ளது. இம்மேடையில் வல்லயம், தொப்பி. வாள் போன்ற காவல் ஆயுதங்களும் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக