வெள்ளி, 21 நவம்பர், 2014

"என்னை அறியாமல் ஏதும் வகை உலகில் இல்லை தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே கண்ணாலே மணக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான் என்னை அறிந்தவருக்கு ஈசன்வழி சொல்லுகிறேன்"

"என்னை அறியாமல் ஏதும் வகை உலகில் இல்லை" என்ற வரிகள்,அழியாத சக்தியாகிய இறைவனை அறியாமல் இந்த உலகத்தில் எந்தவொரு காரியமும் நிறைவடையாது என்பதை உணர்த்துவதை  காணுங்கள்.அத்தகைய இறைவனை அறிய நாம் என்ன செய்ய வேண்டும்.பதில் அடுத்த வரியிலேயே அய்யா நமக்கு தருகிறார்.
      
  "தன்னை அறிந்ததுண்டால் தலைவனை நீ அறிவாய் மகனே".ஆம் முதலில் தான் யார், நாம் என்ன நிலையில் வாழ்கிறோம்,நமக்குள் மிகுந்திருப்பது நல்ல எண்ணங்களா?,கெட்ட எண்ணங்களா? என ஆராய்ந்து கெட்ட எண்ணங்களை அழிக்க முயல வேண்டும்.

            நம்முள் இருக்கும் இறைவனை நம் மனதில் மூலமாக தியானித்து அறிய முயல வேண்டும்.இதனையே அய்யா "கண்ணாலே மணக்கண்ணாலே காணுமப்பா வழியதுதான்" என உரைக்கின்றார்.நம் மனதில் இருக்கும் அகந்தை,அதிகாரம்,வஞ்சம்,பொறாமை,காமம் இன்னும் பல கலி எண்ணங்கள் அகல அகல நம் மனம் இறைவனை தன்னுள் தாங்கி நமக்கு காட்டுகிறது.தூய ஒளியானது நம்முள் நிறைகிறது.

அடுத்த வரியை பாருங்கள், "என்னை அறிந்தவருக்கு ஈசன்வழி சொல்லுகிறேன்".
        அவ்வாறு என்னை மனதில் உணர்ந்தவர்களுக்கு பரம்பொருளை அடைந்து பிறவி இல்லாத தர்மயுக வாழ்வை பெறும் வழியை நான் காட்டித் தருவேன்,என்கிறார்.இங்கு ஈசன் வழி என்பது கலியற்ற நிலையான தர்மயுக வாழ்வைக் காட்டுகிறது.எனவே கலி எண்ணங்களை அழித்து தருமயுக வாழ்வு பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக