வெள்ளி, 21 நவம்பர், 2014

பதிகளின் அமைப்பு

இந்துக் கோயில்களில் காணப்படுவது போன்று அழகிய வேலைப்பாடுகள் நிரம்பிய சிற்பங்கள், சிலைகள் போன்றவை பதிகளில் காணப்படவில்லை. பதிகளின் சுவர்களில் காவி வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. அக்காவி வண்ணங்களின் இடையிடையே வெள்ளை வண்ணம் நேர்க்கோடாக தீட்டப்பட்டுள்ளது. இது நாட்டுப்புறத் தெய்வக் கோயில்களில் தீட்டப்பட்டுள்ள வண்ணங்களை ஒத்துள்ளது.
     பதிகளின் பள்ளியறையில் கண்ணாடி ஒன்றும், அதன் இருபுறமும் குத்துவிளக்குகளும் வைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே கண்ணாடி வழிபாடு என்பது அய்யா வைகுண்டர் பதிகளில் மட்டுமே  நடைபெறுகின்றது எனலாம்.
     கண்ணாடியின் முன்பு காவி நிறம் கொண்ட குடை ஒன்றும் விரித்து வைத்தவாறு தொங்கவிடப்பட்டுள்ளது. பள்ளியறை மேடையிலும் காவி வண்ணம் கொண்ட துணி விரிக்கப்பட்டுள்ளது. இத்துணியில் நாமவேல்       ( சிவலிங்கச்சுடர் ) போன்ற அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. இந்த நாம வேல் முருகனின் கையிலுள்ள வேலை ஒத்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் அறிவைப் பெற வேண்டும் என்பதன் குறியீடாக வேல் குறியீடு அமைந்துள்ளது எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக