கெளடனின் சோதனைகள்:
ஆதிக்க சாதிகளின்
அதிகாரம் மிகுந்த அந்த காலகட்டத்தில் ,அவர்களின் அதிகாரத்தை எதிர்த்து
,சமத்துவத்தை போதித்த வைகுண்டரை,ஆதிக்க சாதியினர், "மக்களை தூண்டி வீண்
கலவரங்களை உண்டாக்குகிறான்,மேலும் தாந்தான் விஷ்ணுவின் அவதாரமெனவும் கூறி
உலகை ஆளப்போவதாக கூறுகின்றான்',அவனை அடக்கி தண்டிக்க வேண்டுமென கலி நீச
மன்னனிடம் வசை பாடினர்.இதனால் வைகுண்டரின் மீது கோபங்கொண்ட ஆதிக்க
சாதியினரின் அன்பிற்குரிய மன்னன் வைகுண்டரை சிறை பிடிக்க தன் தளபதியான
கெளடனிடம் உத்தரவு பிறப்பித்தான்.
உத்தரவை பெற்ற கெளடன் அதிக
கோபத்துடன் வைகுண்டரை பிடிக்க பெரும்படைதனை திரட்டி வந்து
கொண்டிருந்தான்.பின் நடக்கப் போகும் வினைகளை தன் தந்தையாகிய நாரயணரின்
மூலம் அறிந்த வைகுண்டர் கலியனின் வரவுக்காக காத்திருந்தார்.கெளடன்
வைகுண்டரை பிடிக்க வருவதை அறிந்து கொண்ட அன்புகொடி மக்கள் ,கலியர்களை
எதிர்க்க வைகுண்டரிடம் உத்தரவு வேண்டினர்.கோபங்கொண்ட சான்றோரை
அமைதிபடுத்திய வைகுண்டர்,பொறுமையை போதித்து ,இதுவெல்லாம்,விதிப்படி
நடக்கும் நிகழ்வுகள்.இவை நடந்தால் தான் கலியை அழிக்க முடியும் என்று கூறி
அவர்களை அமைதி படுத்தினார்.
இதை
பயன்படுத்திக் கொண்ட கெளடனின் படைகள் வைகுண்டரை தாக்கி குதிரையில் கட்டி
இழுத்து சென்றனர்.அய்யா வைகுண்டர் சிறிதும் எதிர்க்காமல் அமைதியாக அடங்கி
இருந்தார்.இதனை தன் அருள் நூலில் "அடித்த அடியையெல்லாம் ஆபரனமாலையாக அகத்தில் அணிந்து கொண்டேன்" என கூறுகிறார்.இவ்வாறு இழுத்து செல்லப்பட்ட வைகுண்டர் சுசீந்திரத்தில் கலினீச மன்னன் முன் நிறுத்தப்பட்டார்.
மன்னனின் சோதனை:
தன் முன்னால்
நிறுத்தப் பட்ட வைகுண்டரை எளனமாய் பார்த்த மன்னன்,சரி சாமி என்கிறானே
நாமும் ஒரு சோதனை செய்து பார்ப்போம் என எண்ணிய மன்னன்,தனது கை விரலில்
இருந்த மோதிரத்தை யாருக்கும் தெரியாமல் கழற்றி தன் கையில் வைத்து
கொண்டான்.பின் வைகுண்டரை நோக்கி 'நீ உண்மையான சாமி என்றால் என் கையில்
இருப்பதை கூறடா"என்றான். எல்லாம் அறிந்த வைகுண்டர் "தாழ்ந்துயிரு என்மகனே சட்டைக்குள்ளே தான்பதுங்கி"
என்ற தனது தந்தையாகிய நாரயணரின் உபதேசத்துக்கு ஏற்ப தன் சக்திகளை
வெளிக்காட்டாமல் இருந்தார். மேலும் "இப்போது இவனிடம் இதை உரைத்தால் நம்மை
அறிந்து அவர்களுடன் நம்மையும் சேர்க்க பார்ப்பான்.ஆகவே நாம் நினைத்த
காரியம் நிறைவேறாமல் போகும்"என்று எண்ணி அமைதியாக இருந்தார்.பின் மன்னனை
நோக்கி "இறைவனின் எண்ணப்படி எது இருக்குமோ அது இருக்கும்" என்று உரைத்தார்.
சரடனின் சோதனை:
கோபங்கொண்ட மன்னன் "இவனா
சாமி?இவன் கள்ளச் சாமி, இவனை கொடுமையான சரடனிடம் அழைத்து செல்லுங்கள்" என
உத்தரவிட்டான்.பின்னர் வைகுண்டர் கொடிய சரடன் முன் கொண்டு
நிறுத்தப்பட்டார்.கொடிய சரடன் தன்னிடமிருந்த சாரயத்தில் ஐந்து கொடிய
விஷங்களை கலந்து ,நல்ல பால் எனக் கூறி வைகுண்டரை
குடிக்கச்சொன்னான்.விஷமென்பதை அறிந்த நாராயணர் சிரிதும் அச்சமின்றி
முழுவதும் பருகினார்.அந்த விஷமானது வைகுண்டரை வெகு நேரமாகியும் ஒன்றும்
செய்யவில்லை.விஷத்தால் பாதிக்க படாத வைகுண்டர் எவ்வாறு விஷத்தின்
கொடுமையிலிருந்து தப்பினார் என்று எண்ணாத சரடன்,மேலும் ஒரு சோதனை செய்வோம்
நினைத்தான்....
அய்யா உண்டு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக