தத்துவ முறையாக, தேவர்கள் மனதில் உருவான ஆணவ அழுக்கே குறோணி என உருவகிக்கப் பட்டிருப்பதாகவும் கருத்து உள்ளது.
இக்கூற்றின்
படி கயிலை என்பது இதயம் எனவும், குறோணி என்பது பருப்பொருள் அல்ல என்றும்,
மனதில் எழும் அஞ்ஞானத்தின் சூக்கும வெளிப்பாடே அது எனவும், பசியால் அவன்
அருந்தும் கடல் நீர் என்பது சம்சார சாகரம் எனவும், வெட்டப்படும் ஆறு
துண்டுகளும் காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அகப்
பகைகள் எனவும் பொருள் கொள்ளப்படுகின்றன. இப்பார்வைக்கு பரவலாக அய்யாவழி
சமூகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கின்றபோதும், அய்யாவழி ஆய்வலர்கள் சமய
ஆய்வின் போது பரவலாக இதில் பெரும்பான்மைப் பகுதிகளை கருத்தில்
கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக