பின்னர் பூலோகம் வந்து சிவபெருமானை
நினைத்து தவம் இருந்தார். இத்தவத்தைக் காண சன்னியாசி வேஷம் பூண்டு வந்த
சிவன், மாயனைப் பார்த்து "நீ யார்?, இவ்வனத்தில் வந்து என்னை நினைத்து தவம்
செய்யக் காரணமென்ன?" என்று கேட்டார். அதற்கு திருமால் நடந்தவைகளைக் கூறி
இக்கொடிய குறோணி தனை ஆறு துண்டுகளாக வெட்டி அழித்து தொல் புவியில் இட்டிட
வரம் தர வேண்டும் என கூறினார். இதைக் கேட்ட சிவனார் விஷ்ணுவைப் பார்த்து,
நீர் கூறியதுபோல் இவனை அழித்தால் அந்த ஆறு துண்டுகளும் பின் தொடர்ந்து
வரும் ஆறு யுகங்களிலும், யுகத்துக்கு ஒரு துண்டு வீதம், உமக்கு மாற்றானாய்
பிறக்கும். அதனால் யுகத்துக்குகம் உத்தமனாய் நீர் பிறந்து அவ்வொவ்வொரு
துண்டுகளையும் அழைத்து, பின் இவன் உயிரை நடுக் கேட்டு, நரகக் குழியில்
அடைக்க வேண்டும் என கூறி, திருமாலுக்கு அதற்கான விடையைக் கொடுத்தார்.
விடை வேண்டியத் திருமால் கோபத்தால் வெகுண்டெழுந்து குறோணி தனை ஆறு
பெரிய துண்டுகளாய் வெட்டிப் பிளந்தார். அவர் வெட்டிப் போட்ட துண்டுகளை
தேவர்கள், எடுத்துச் சென்று உலகத்தில் போட்டனர். அவனது உதிரங்களை, குளம்
போன்ற பெரிய குழிகளை வெட்டி அதன்மேல் உயர்ந்த பீடமும் போட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக