வெள்ளி, 21 நவம்பர், 2014

அம்பல பதி (மூலகுண்ட பதி)

அம்பல பதி அய்யா வழி பதிகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த பதி அம்பலபதியாகும்.அம்பல பதி புத்தளம் அருகே கடற்கரையை  ஒட்டி அமைந்துள்ளது.இப்பதிக்கு மூலகுண்ட பதி,பள்ளத்து பதி என்ற பெயர்களும் உண்டு.இந்த அம்பல பதி ஆகாய தத்துவ பதி என்றும் அழைக்கப்படுகிறது.இதற்கு இணையாக எப்பதியையும் ஒப்பிட முடியாத அளவுக்கு பால சிறப்புகளை கொண்டதாகும்.இதை அகிலம் ,
"இப்பதியில் வந்தால் எள்ளளவும் தோஷமில்லை எப்பதியும் இப்பதிக்கு ஒவ்வாது" 
        என்கிறது.1008 மாசியில் கடலின் உள்ளிருந்து கலி அளிக்க வந்த வைகுண்டர் முதலில் இங்கு வந்து சிவலிங்கத்தை நிலை பெற செய்து விட்டு பின்னரே சாமிதோப்பு சென்றதாக கூறப்படுகிறது.பகவதி,பார்வதி,மண்டைக்காட்டால்,வள்ளி,தெய்வானை, ஆகிய தெய்வ சக்திகளை இகனை  திருமணம் செய்த இடமே அம்பல பதி ஆகும்.
பள்ளியறையின் சிறப்பு:
                                  இங்குள்ள பள்ளியறை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.96 தத்துவங்களை உள்ளடக்கிய நிலையை உணர்த்தும் விதமாக இங்கு கூரை அமைக்கப் பட்டுள்ளது.மேலும் தத்துவ கொட்டகையின் கீழ் உள்ள சிவமேடையில் தொட்டில் வைத்து அதன்மேல்  32  அறத்தலான சிம்மாசனத்தில் அய்யா அமர்ந்து ஆட்சி புரிகின்றார்.இங்கு பிரதான வாயில் கிழக்கு நோக்கி உள்ளது.பிரதான மண்டபத்தில் வானுயர்ந்த கொடிமரம் உள்ளது சிவயிமார் மேடையும் ,வடக்கு வாசலும் சிறப்புற அமைந்துள்ளது.

திருவிழா :  
            அம்பல பதியில் ஆண்டு தோறும் தமிழ் மாதம் ஐப்பசி முதல் வெள்ளிக்கிழமை கொடி எட்ட்ரப்பட்டு  தொடர்ந்து 11  நாட்கள் திருவிழா நடைபெறும்.எட்டாம் நாள் திருவிழாவில் அய்யா வெள்ளைக்குதிரையில் ஏறி களிவேட்டையாடி முத்திரிக் கிணற்றில் தனது பக்தர்களின் முன் வினைகளை தீர்ப்பார். ஒவ்வொரு நாலும் அய்யா பல்வேறு வாகனத்தில் ஏறி அருள் பாலிக்கின்றார். திருவிழாவில்  தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகின்றது.

       மேலும் வாரந்தோறும் செவ்வாய்ச்சை  திருவிழா செவ்வாய் கிழமை அன்று கொண்டாப்படுகிறது.அன்றைய தினம் அதிகாலை பணிவிடையும்,உகபடிப்பும்,அன்னபால்தர்மமும்,மதியம் உசிப்படிப்பும்,இரவு வாகன பவனியும் தொடர்ந்து அன்னதர்மமும் நடைபெறும் .அற்புதம் மிக்க முத்திரிகிணறு வடக்கு வாசலில் சிறப்புற அமைந்துள்ளது .திருஏடு வாசிப்பு திருநாளும்,அவதார திருநாளும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக