சுவாமித்தோப்புப் பதியில் அதிகாலை மூன்று
மணிக்கு சங்கொலிமுழங்க திருநடை திறக்கப்படுகின்றது. அதன் பின்னர் ஒருவர் சங்கினை
ஊதிய வண்ணம், வெண்கல மணியை அடித்தபடி தலைமைப் பதி அமைந்துள்ள தெருக்களில் வலம்
வருகின்றார்.
அதன் பின்னரே
பணிவிடையும், உகப்பாட்டுப் படித்தலும் ( பள்ளியறையியன் முன்புள்ள
மண்டபத்தில் ), விளக்கு மணி ஒலித்தலும், வாகனப் பவனி நிகழ்த்துதலும்
நடைபெறுகின்றது. பவனி வருகின்ற வாகனம் வடக்கு வாசலில் வந்ததும் அங்கு மணியை
ஒலித்தபடி அன்னப்பால் ( தவணைப் பால்
) தருமம் நடைபெறுகின்றது.
வாகனப் பவனி
நிறைவுற்றதும் சங்கொலி முழங்க பால் மணி அடித்து அன்னப்பால் ( நித்தியப்பால் )
தரும்மும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. இத்தோடு காலைப் பணிவிடை நிறைவடைகிறது.
அம்பலப்பதி, முட்டப்பதி, தாமரைகுளம் பதி, ¯ப்பதி, வாகை பதி, துவாரகா பதி போன்ற பதிகளில்
அதிகாலை ஐந்து மணிக்கு திருநடை திறக்கப்படுகிறது. வாசல் திறக்கப்பட்டவுடன்
பணிவிடைகாரர் சங்கொலி எழுப்பிய வண்ணம், வெண்கல மணியை அடிக்கிறார். அதன் பின்னர்
பணிவிடையும், உகப்பாட்டுப் படித்தலும் நடைபெறுகிறது.
இப்பதிகளில் வாகனப் பவனி நடைபெறுவதில்லை.
அம்பலப்பதி, முட்டப்பதி, துவாரகா பதி, தாமரைகுளம் பதிகளில் பால் மணி அடித்து
அன்னப்பால் வழங்கப்படுகிறது. அன்னப்பால் வழங்கும்போது சங்கொலி எழுப்பி, மணியை
அடிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக