வெள்ளி, 21 நவம்பர், 2014

வைகுண்டர் வென்ற சோதனைகள்

டாணா புழுக்குழி சோதனை:

        விசத்தை உண்ட வைகுண்டர் மாளாமல் இருப்பதை உணர்ந்த சறடன்,வைகுண்டரை மேலும் ஒரு சோதனை செய்ய எண்ணினான்.அதன் படி வைகுண்டரை கொடிய டாணா சிறையில் வைக்க சேவகர்களுக்கு உத்தரவிட்டான்.மிகவும் துர்னாற்றம் வீசக்கூடிய அந்த சிறையில் வைகுண்டர் சற்று அதிகமான கொடுமைகளை தாங்கி கொண்டார்.மனிதர்களின் கழிவுகளும்,மிருகங்களின் கழிவுகளுமே அங்கு மிகுதியாக காணப்பட்டன.
பல்வேறு விஷ பூச்சிகளும்,அட்டைகளும்,பல்வேறு வகையான புழுக்களும் கொட்டிக் கிடந்தன.பெரும்பாலான பூச்சிகளும்,புழுக்களும் அய்யாவின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தன.கொடிய நரகத்தை போன்ற அக்குழியில் வைகுண்டர் தனக்கு நேர்ந்த அனைத்து சோதனைகளையும்,சான்றோருக்காய் பொருத்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.

             வைகுண்டரின் அமைதியை கண்ட நீசமன்னன் அவரை மேலும் பல்வேறு சோதனைகள் செய்ய திருவனந்தபுரம் சிங்காரதோப்பு சிறைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டான்.அதன்படி வைகுண்டர் டாணா சிறையிலிருந்து கோட்டாறு, தக்கலை வழியே இழுத்து செல்லப்பட்டார்.வைகுண்டரை நம்பாத மக்களெல்லாம் அவரை கட்டிகளைக் கொண்டு எரிந்து கண்டவிதமாக பேசி தீர்த்தனர்.வைகுண்டரை நம்பி வாழ்ந்த சான்றோர்கள் அவர் தங்களுக்காக படும் பாட்டை எண்ணி வருந்தி அழுதனர்.

கடுவாய் சோதனை:

        வைகுண்டரை மேலும் சோதிக்க எண்ணிய சறடன் மன்னனின் யோசனைப் படி கடுவாய்க் கூண்டு ஒன்றில் வைகுண்டரை அடைத்து அவரை கடுவாய்க்கு இரையாக்க எண்ணினான்.அதன்படியே தனது சேவகர்களுக்கு ஒரு கடுவாயை பிடித்து வர உத்தரவிட்டான்.நாள் முழுவதும் கடுவாயை தேடிய படை வீரர்களுக்கு ஒரு கடுவாய் கூட கண்ணில் படவில்லை.இதனை சறடனிடமுறைக்க கோபங்கொண்ட சறடன் இன்று ஏழு மணிக்குள் கடுவாயை கொண்டு வராவிட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என் எச்சரித்தான்.பயங்கொண்ட வீரர்கள் வைகுண்டரை அணுகி அவரிடம் தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.உடனே வைகுண்டர் இந்தமுறை கடுவாய் கிடைக்கும் என கூறி அனுப்பினார்.அதன்படியே ஒரு கடுவாய் கிடைத்தது.அதனை மூன்று நாட்கள் பட்டினி போட்டு பின்னர் வைகுண்டரையும் ,கொடிய கடுவாயையும் ஒரே கூண்டில் அடைத்தனர்.

       வைகுண்டர் கூண்டில் இருப்பதை உணர்ந்த கடுவாய் அவரை தாக்காமல்,மாறாக அவரை சரணடைந்து அமைதியாக இருந்தது.சேவகர்கள் கடுவாயை துன்பப்படுத்தியும் அது வைகுண்டருக்கு எந்தவித கஷ்டமும் கொடுக்கவில்லை.இவ்வாறாக கடுவாய் சோதனையை வைகுண்டர் வெற்றிக்கொண்டார்.மேலும் பல்வேறு சோதனைகளை வென்றதாக வைகுண்டர் அருள்னூலில் கூறியுள்ளார்.அதன்படி தீயில் எறிக்கப் பட்டும்,வத்தல் அறையில் வைத்து கொளுத்தப் பட்டும்,சுண்ணாம்புகல்லில் நீத்தபட்டும் வைகுண்டர் பாதிப்பின்றி திரும்பி வந்தார்.அதன் பின்னர் சுமார் 120 நாட்கள் சிங்கார தோப்பு சிறையை வென்று தான் நிச்சயித்த ஒரு நாளில் தெற்றணம் திரும்பினார்.  
                                                             அய்யா உண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக