தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
அகிலம்:
சாமி யுமதருளால் தொல்புவியி லுள்ளோர்க்குத்
தண்ணீரா லெத்த சர்வ வியாதிமுதல்
மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்ததர்ம மாகவேதான்
நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன்
வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன்
தாழ்வடைந் தோர்க்குத் தாழ்வை விலக்கிவைத்தேன்
பிள்ளை யில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன்
கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தைவைத்தேன்
தண்ணீரா லெத்த சர்வ வியாதிமுதல்
மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்ததர்ம மாகவேதான்
நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன்
வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன்
தாழ்வடைந் தோர்க்குத் தாழ்வை விலக்கிவைத்தேன்
பிள்ளை யில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன்
கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தைவைத்தேன்
விளக்கம்:
சுவாமியின் அருளால் மக்களுக்குத் தண்ணீரால் எல்லா வியாதிகளையும் எனக்கு வாய்த்த அறமாக கொண்டு நீக்கி வந்தேன். அப்படி அல்லாமல் நான் எனக்காக எந்தவிதப் பொருளைச் சேர்ப்பதிலும் கருத்துக் கொள்ளவில்லை. அப்படித் தேடிய ஒரு காசைக்கூட நான் அறியவில்லை. வாழ்வு இல்லா மக்களுக்குச் சிறந்த வாழ்வு செய்து கொடுத்தேன். வாழ்வில் தாழ்வு அடைந்த அன்பர்களுக்குத் தாழ்வை நீக்கி வைத்தேன். பிள்ளை இல்லா பெண்களுக்குப் பிள்ளை உருவாக அருளைக் கொடுத்தேன். கள்ளத் தனமான எண்ணத்தை எல்லாம் மாறச் செய்து பேய்களிடம் இருந்த வரங்களை என்னிடம் ஒப்படைக்கச் செய்தேன்.
அகிலம்:
வரம்வேண்டி நம்மிடத்தில் வைத்தந்தப் பேய்களையும்
குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன்
ஆயிரத் தெட்டு ஆன திருப்பதியில்
வாயிதமாய் வாழும் வாய்த்ததே வர்தமக்கு
ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி
குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன்
ஆயிரத் தெட்டு ஆன திருப்பதியில்
வாயிதமாய் வாழும் வாய்த்ததே வர்தமக்கு
ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி
விளக்கம்:
மேலும் வாழுவதற்காக என்னிடம் வரம் வேண்டி வந்த பேய்களை எல்லாம் சேர்த்து மலையில் அனுப்பி ஓலம் இடும்படி எரிந்து அழியச் செய்தேன். ஆயிரத்து எட்டாம் ஆண்டு திருச்செந்தூர்க் கடலில் விஞ்சை பெற்று வைகுண்டராகி தாமரைப்பதியில் இதமான வாழ்வைப் பெற்ற வைகுண்ட சுவாமிக்கு இனிமேல் பூசை, நல்ல ஆடு, கிடா, போன்ற உயிர்பலி தீபாராதனை போன்றவை தேவை இல்லை.
அகிலம் :
தேயமதி லுங்களுக்குத் தேரோட்டமு முதலாய்
ஏற்கப் படாதினிமேல் இராச்சியத்தி லுள்ளவர்தாம்
மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால்
பூசை படைப்புப் பெலிதீப மேராமல்
வாச முடனே மறைந்திருங்கோ நீங்களெனச்
சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற் பூண்டுவரை
ஏற்கப் படாதினிமேல் இராச்சியத்தி லுள்ளவர்தாம்
மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால்
பூசை படைப்புப் பெலிதீப மேராமல்
வாச முடனே மறைந்திருங்கோ நீங்களெனச்
சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற் பூண்டுவரை
விளக்கம்:
எனவே, இத்தேசத்தில் உள்ள தெய்வங்களும், தேரோட்டம் முதல் பூசைகளும், பலிகளும் ஏற்கக்கூடாது. இனிமேல் இவ்வுலகில் உள்ளவர்களும் சான்றோருக்கு என ஒரு நல்ல வழியைப் ஏற்படுத்த வலிமை பொருந்திய வைகுண்டர் பிறந்து வந்ததனால், பூசை, படைப்புகள், பலி, தீபாராதனை போன்ற காரியங்களை ஏற்றுக் கொள்ளாமல் புகழோடு மறைந்திருந்து வாழ்ந்து வாருங்கள் என்று சிறப்பான சட்டங்களைக் கொடுத்து வந்தேன்.
அகிலம்:
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
வையகத்தை யாளும் மாநீச னுமறிய
மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன்
இத்தனை சட்டம் இட்டவர்த்த மானமெல்லாம்
மத்திய மாய்வைத்த மாமுனியோ டேகேளும்
வையகத்தை யாளும் மாநீச னுமறிய
மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன்
இத்தனை சட்டம் இட்டவர்த்த மானமெல்லாம்
மத்திய மாய்வைத்த மாமுனியோ டேகேளும்
விளக்கம்:
இவ்வுலகில் இச்சட்டங்களைப் புல் பூண்டுவரையும் மட்டை மருந்து இலைகளும் மலை கடல், வாசுகிப் பாம்பு போன்றவையும் கலியுகத்தை ஆளுகின்ற பெரிய நீசனும் அறியும்படி உண்மையாகத் தெளிவுடன் சொல்லி விரைவாகச் சட்டங்கள் செய்து வைத்தேன். இவ்வாறாக நான் இட்ட சட்டங்களைப் பற்றி நம் இருவருக்கும் நடு நாயகச் சாட்சியாய் நிற்கும் முனிகள் மூலம் கேட்டுப் பார்ப்பீராக.
அகிலம்:
அல்லாமற் பூமிதனில் அவர்களறி யாதபடி
வல்லாமை யாய்க்காசி வழங்குமிலை பாக்குவரை
நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை
வானாசை யுள்ள மாமுனியோ டேகேளும்
வல்லாமை யாய்க்காசி வழங்குமிலை பாக்குவரை
நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை
வானாசை யுள்ள மாமுனியோ டேகேளும்
விளக்கம்:
அதுமட்டுமல்லாது இவ்வுலகில் மக்கள் எல்லாரும் அறியாதபடி என்னுடைய சிறந்த திறமைக்காக வழங்கிய காசு, பணம் போன்றவற்றையும், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் கூட நான் ஆசைகொண்டு அவர்களிடம் வாங்கியது உண்டா? என்பதைப் பற்றியும் வேத லோகத்தின் மேல் ஆசையுள்ள அந்த மாமுனிவர்களிடம் கேட்பீராக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக