அய்யா கலியுக சோதனையில் "அன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம், பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன்" என்று மக்களுக்கு பல சட்டங்களை சொல்லி பொறுமையை மக்கள் மனதில் ஏற்படுத்தி கொண்டு இருந்த வேளையில், அந்த மாபாவி திருவதான்கூர் மன்னன் அய்யாவை கைது செய்ய சொல்லி சிப்பாய்களை அனுப்பியதை தொடர்ந்து அந்த கலி நீசர்கள் அய்யாவை கைது செய்கிறார்கள் அப்போது அய்யாவின் மீது அன்பை பக்தியாக கொண்டிருந்த மக்கள் "ஏழைக்கா யிரங்கி எங்கள்குல மீதில்வந்தீர், கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானே" என்று சொல்லி கண்ணீரோடு அழுகிறார்கள், அதற்க்கு அய்யா சொல்கிறார்,
"மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரே
அலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணை
இப்பூமி தன்னில்வந்து இத்தனை நாள்வரைக்கும்
கைப்பொருளுக் கிச்சை கருத்தில் மிகநினைத்துக்
கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தே னானாக்கால்
இக்குவ லயத்தில் இனிவரேன் கண்டிருங்கோ
தருமமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால்
நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில் " என்று அய்யா சொல்கிறார், மக்களே கவலை படாதீர்கள், நான் இந்த பூமியில் வந்து இருந்த நாள் முதல் ஏதேனும் பொருள் கைகூலிக்காக ஆசை பட்டு இருந்தால் நான் இனி வரமாட்டேன், ஆனால் தருமமது நிச்சத்துத் தாரணியில் வந்துண்டால், நன்மைக் கடைப்பிடித்து நம்பிகையுடன் இருங்கள் மக்களே நான் நிச்சயமாக இந்த நானிலத்தில் வருகிறேன், என்று சொல்கிறார்,
பின்னர் அய்யாவை கைது செய்து, துன்புறுத்தி சுசீந்திரதிர்க்கு இழுத்து வருகிறார்கள், அங்கே அந்த கலிநீச மன்னன் செய்த பல சோதனைகளை சந்தித்து விட்டு, பின்னர் அய்யாவை நடத்தி இழுத்து அந்த சறடன் ஆனவன் அய்யாவை கடத்தி வருகிறான், பின்னர்
"தடதடென எழுந்து சாராய மானதிலே
அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி
நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்
பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து", என அய்யாவிற்கு சாராயத்திலே ஐந்து வகையான நஞ்சை கலந்து, இது நல்ல பால் என்று அய்யாவிற்கு கொடுக்கிறான், அதை அறிந்த அய்யா ஒன்றும் தெரியாதது போல அந்த நஞ்சை வாங்கி அருந்திவிட்டு பொன்னர் மயக்கம் பெரிய மயக்கம் போல அய்யா பாசாங்கு செய்கிறார்,
அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி
நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்
பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து", என அய்யாவிற்கு சாராயத்திலே ஐந்து வகையான நஞ்சை கலந்து, இது நல்ல பால் என்று அய்யாவிற்கு கொடுக்கிறான், அதை அறிந்த அய்யா ஒன்றும் தெரியாதது போல அந்த நஞ்சை வாங்கி அருந்திவிட்டு பொன்னர் மயக்கம் பெரிய மயக்கம் போல அய்யா பாசாங்கு செய்கிறார்,
எந்த ஒரு விஷத்தாலும் அய்யாவை ஒன்றும் செய்ய முடியவில்லை என்று, தொடர்ந்து அய்யாவை பல சோதனைகள் செய்து இறுதியில்தான் அய்யா மனிதர் இல்லை கடவுள் என அந்த கலிநீச மன்னன் உணர்கிறான், பின்னர் அய்யா மக்களை எல்லாம் ஒன்று சேர்த்து பல சட்டங்களை பல விஞ்சை உபதேசங்களை எல்லாம் அருளிவிட்டு பின்னர் தேவர்கள் கொண்டு வந்த தேரில் அய்யா புறப்பட்டு செல்கிறார், அய்யா புறப்பட்டு எங்கயோ சென்றுவிட்டார் என்று என்ன வேண்டாம், நம்முடன்தான் நம் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார், அதனால்தான் நாம் கண்ணாடியை பார்த்து வணங்குகிறோம், நம்மில் இருக்கிறார் அய்யா.... அந்த ஆதியான பரம்பொருளை அனுதினமும் அவர் நாம் சொல்லி வணங்குவோம், வாழ்வோம்,
ஆதியாம் வைந்த ராசர் அருள்செங்கோ லேந்தித் தர்ம
சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி
நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள
சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார்
சோதியி னொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி
நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந் தரசே யாள
சாதியா முயர்ந்த சான்றோர் தம்மையே வருத்திச் சொல்வார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக