வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா வைகுண்டர்

ஏகம் ஒரு பரமானது. இங்கு அங்கு என்றிலாதபடி எங்கும் நிறைந்து ஏகமயமானது.எல்லாம் வல்லது. அதுவே அண்டசராசரங்களையும் படைத்து , காத்து , அழிக்கும் மஹா சக்தியாக நிலைத்து நிற்கிறது. மாற்றங்களுக்கெல்லாம் மூல காரணமாக விளங்கும் இந்த சக்தி என்றும் மாறாததாக இருக்கிறது. சுழற்சிகளுக்கெல்லாம் சூத்திரமாக நின்று தான் சுழலாமல் நிற்பது. தனக்கென தனி உருவம் கொள்ளாதது.
பிரபஞ்சத்தில் அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் அவதரித்து தர்மத்தை நிலை நாட்டுவது மாபெரும் இந்த சக்திதான். இறைவன், ஆண்டவன்,கடவுள்,தெய்வம் என்று பல நாமங்களில் அழைக்கப்பட்டாலும் பொருள் ஒன்றுதான். யுகங்கள் தோறும் தர்மம் காத்த ஆண்டவன் கலியுகத்தில் அவதரித்தபோது வைகுண்டர் என்று நாமம் கொண்டார்.
தேவலோகத்தில் இருந்த சம்பூரண தேவன் , எமலோகத்தில் இருந்த பெண் மீது கொண்ட தகாத காதலால் பெற்ற தண்டனை தான் முத்துக்குட்டி என்னும் மனித பிறவியாகும். முத்துக்குட்டி நோய்வாய்ப்பட்டு துயரங்களை அனுபவித்ததன் மூலம் தண்டனைக்காலம் முடிந்தபின்னால் அவனது உடலும் ஜீவனும் திருசெந்தூர் கடலுள் அழிக்கப்படுகிறது. அதே நேரம் துவாபர யுகத்தில் மஹா விஷ்ணு கொண்டிருந்த சடலத்தில் இருந்து முப்பொருளும் ஒரு பொருளாய் அய்யா வைகுண்டர் அவதரிக்கிறார்.
முத்துகுட்டியும் அய்யா வைகுண்டரும் ஒன்றல்ல. முத்து குட்டி மானிட பிறவி. அய்யா வைகுண்டர் கர்த்தாதி கர்த்தன், கலியுக தீர்வை.
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக