பாற்கடலை கடைந்து பெறப்பட்ட அமிர்தத்தை உண்டதால் தமக்கு அழிவில்லை என்று எண்ணிய தேவர்களின் அகந்தை தான் கொடூரமான குறோணி போன்ற அரக்கர்களின் பிறப்புக்கு காரணம்.
குரோணியை ஆறு துண்டங்களாக வெட்டியதும் ஆறு துண்டங்களும் தனி தனி உயிரினமாக வளர தொடங்கின. இங்கே குறோணி தற்காலிகமாக கொல்லப்பட்டானே ஒழிய முழுமையாக கொல்லப்படவில்லை என்று கொள்ளலாம். இது ஒருவகையான இனபெருக்கம் ( Asexual Reproduction) ஆகும். உதாரணமாக ஒரு முருங்கை மரத்தை ஆறு துண்டாக வெட்டி போட்டால் ஆறும் தனி மரங்களாக வளர்ந்து விடும் அல்லவா? அது போலத்தான் இதுவும் நிகழ்ந்தது. வெட்டப்பட்டதால் குறோணி என்ற அசுரனின் கொடூரம் உடனடியாக தணிந்தது அவ்வளவுதான். ஆறு துண்டங்களும் தொடர்ந்து வளர ஆரம்பித்தன.அவற்றை இறைவன் அடுத்த ஆறு யுகங்களில் அவதரித்து அழித்தார். கடைசியாக வந்த கலியன் முன்பிறந்துவந்த ஆறு அசுரர்களிலும் கொடியவனாய் , வல்லவனாய், அறிவில் சிறந்தவனாய், மூளை அதிகம் பெற்றவனாய் தோன்றினான். எனவே தான் அவனது தலை வெளியில் வர முடியாமல் கலங்கியது. எப்போது இயற்கையான பிறப்பு இல்லாமல் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க தொடங்கியதோ அன்றே பூலோகத்தில் கலியுகம் தோன்றிவிட்டது. அறிவியலார் இதனை திடீர் மாற்றம் (Mutation)என்று சொல்வார்கள்.

சிரமா னதுவெளியில் செல்லவர மாட்டாமல்
பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல்
சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு
என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே
அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று
தம்மாலே யாகும் தந்து தெளிந்தெடுத்துக்
கம்மாளன் வேலையினால் கவ்வையொன் றுண்டாக்கி
குத்திப் புறத்தே கோதிவையு மென்றுசொல்லி
எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து
வேண்டியந்த நந்தி விரைவா யவர்நடந்து
ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வை யால்கோதி
வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம்
பளிரெனவே வந்து பொருந்தியதே யம்மானை
-அகிலத்திரட்டு அம்மானை

ஒரு ஆணிலிருந்துதான் ஆணும் பெண்ணும் தோன்றுகின்றனர் .ஒரு ஆணிடம் X Y என இரண்டு வகையான குரோமோசோம்கள் இருக்கின்றன. ஒரு பெண்ணிடம் X X என இரண்டு குரோமோசோம்கள் இருக்கின்றன. கலவியின் போது ஆணின் X மற்றும் Y குரோமோசோம்கள் இரண்டாக பிரிகின்றன. பெண்ணிடம் உள்ள குரோமோசோம்கள் X மற்றும் X என்று பிரிகின்றன. கலவியின் போது ஆணின் X குரோமோசோம் உடன் பெண்ணின் X குரோமோசோம் இணைந்தால் பிறப்பது பெண் குழந்தையாகும். ஆணின் Y குரோமோசோம் உடன் பெண்ணின் X குரோமோசோம் இணைந்தால் பிறப்பது ஆண் குழந்தையாகும். இங்கே நாம் அறிந்து கொள்ள வேண்டியது பிறக்க இருப்பது ஆனா அல்லது பெண்ணா என்பதை ஆணின் குரோமோசோம் தான் நிர்ணயிக்கின்றன. அகிலத்திரட்டில் சொல்லப்பட்டுள்ள கீழ்க்கண்ட வரிகள் இதனை மறைமுகமாக விளக்குகின்றன.
பாதியாய் நீசனையும் வகுந்தேயவனுடம்பில்
விதியாயிடது விலாவி லொருயெலும்பைத்
தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி
திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவு மீசுரரே
என்று உமையாள் இப்படியே சொன்னவுடன்
அன்றுஅந்த நீசனுட அரையிலோ ராக்கையிட்டு
இருக்கக் கீழ்கட்டி எழுந்திருநீ யென்றவுடன்
பொருக்கென வேயிடது புறத்தி லொருயெலும்பைத்
தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து
வெறிகொண்ட நீசன் விலாவிலொடித்ததினால்
நீசன் பலத்தில் நேர்பாதி யாகுமென்று
வாசமட வாய்வரவே மதனன் தனைநினைத்தார்
மதனை யரன்நினைக்க மாநீசன் தன்னெலும்பு
வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை

ஒவ்வொருமுறை அசுரர்கள் கொல்லப்பட்டதும் , அடுத்த பிறவியில் அவர்களின் பலம் முந்தைய பிறவியை காட்டிலும் அதிகமாகவும், தன்னை வென்ற இறை அவதாரத்தின் திறமையை விட அதிக வல்லமை உடையதாகவும் பிறந்து வந்ததை நாம் கண் கூடாக காண்கிறோம். இது ஒரு திருடன் போலீஸ் போராட்டம் போலத்தான் இருக்கிறது. போலீஸ் துறை எவ்வளவு நவீனமாக வளர்ந்தாலும் திருடன் அதனை காட்டிலும் ஒரு படி அதிகமாகவே தொழில் நுட்பத்தில் வளர்ந்து அவர்களுக்கு கண்ணாம்பூச்சி காட்டுகிறான். வீட்டை உடைத்து பொருளையும் பணத்தையும் திருடிய திருடர்கள் இன்று ATM , CREDIT CARD என Online திருட்டுகளிலும் தங்கள் கைவரிசைகளை தொடர்ந்து காட்டியவண்ணம் இருக்கிறார்கள்.
நோய்களும் மருத்துவமும் போல இரண்டும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன. முடிவில்லா போராட்டம் தான். நோய்களிலிருந்து தற்காலிக விடுதலை தான் சாத்தியமாகிறது. அதுவும் வசதி படைத்தவர்களுக்கு தான். ஒருமுறை ஒரு நோயை குனபடுத்திய மருந்தால் அடுத்து வரும் நிலைகளில் குணப்படுத்தமுடியாமல் போகிறது. நோயின் வேகம் அதிகமாகிறது.நாம் மருந்தின் வேகத்தை அதிகபடுத்த கட்டாயபடுத்தப்படுகிறோம்.
அதர்மம் வளரும் போது அதனை வெல்வதற்கு தர்மமும் தன்னை வளர்த்து கொள்ளும் கட்டாயம் ஏற்படுகிறது. எனவே தான் 32 அறங்களையும் வளர்க்கும் பொறுப்பு சக்தியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றோர்களை வளர்க்கும் பொறுப்பும் சக்தியின் வடிவமான மாகாளியிடம் கொடுக்கப்பட்டது. அந்த அஷ்டமாகாளியால் கூட இரண்டு சான்றோர்களை கலிய( சோழமன்னன் )னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை.
ஆனால் நம்மை கலியனிடமிருந்து ( மாய்கை எண்ணங்கள்) காப்பாற்ற நமக்கு கைவசம் அய்யா நாராயணர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை உள்ளது. நம்பிக்கையோடு அதனை படிப்போம். உள்ளத்தில் மலிந்து கிடக்கும் அகந்தையை ஒழிப்போகலியை அடியோடு கருவறுப்போம்.
அய்யாவின் அருள் நமக்கு என்றும் உண்டு .
அய்யா உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக