கைப்பிடித்துத் தாருமென வுரைத்தீ ரையா
கணவரல்லோ முன்னவர்க்குக் கருணை மாலே
மெய்ப்பிடித்த மெல்லியருந் தேவி யல்லோ
மேதினிக ளறியஅவ தாரஞ் செய்தீர்
எப்படித்தா னாங்கள்கையைப் பிடித்து ஈய
இவ்வுலகி லவதார இகனை தானோ
எப்படியோ அறியோங்கா ணென்று சொல்லி
ஏந்திழைமார் கைப்பிடித்தங் கீய லுற்றார்
கணவரல்லோ முன்னவர்க்குக் கருணை மாலே
மெய்ப்பிடித்த மெல்லியருந் தேவி யல்லோ
மேதினிக ளறியஅவ தாரஞ் செய்தீர்
எப்படித்தா னாங்கள்கையைப் பிடித்து ஈய
இவ்வுலகி லவதார இகனை தானோ
எப்படியோ அறியோங்கா ணென்று சொல்லி
ஏந்திழைமார் கைப்பிடித்தங் கீய லுற்றார்
விளக்கம்:
அய்யா எங்களைப் பார்த்து கன்னிகளின் கைகளைப் பிடித்துத் தரச் சொல்லி விட்டீரே, கருணைத் திருமாலே, தாங்கள் முன்பு அவர்களுக்குக் கணவராக இருந்தீர் அல்லவா? உமது உடம்பைப் பிடித்து விட்ட மென்மையான தேவியர் இவர்கள் அல்லவா? இப்போது இவ்வுலகம் அறிவதற்காக இவ்வுலகில் தாங்கள் அவதாரம் எடுத்தீர். எனவே, நாங்கள் எப்படி அக்கன்னியரின் கைகளைப் பிடித்து தருவது? இது தான் இவ்வுலகில் எடுத்த அவதாரத்தின் முன் விதியோ? எப்படியோ? நாங்கள் அறியோம் என்பதை நீர் அறிந்து கொள்வீராக. என்று சொல்லி விட்டு சுவாமி திருமணம் செய்து கொள்வதற்காக அந்தக் கன்னிகளின் கைகளைப் பிடித்து கொடுத்தார்கள்.
அகிலம்:
திருமுகூர்த்தம்:
===================
===================
ஈந்திடவே மாயவருந் தங்கத் தாலே
இரத்தின வொளி போல்வீசுந் தாலிதன்னை
மாய்ந்துமிகப் போகாமல் தாலி வாழ
மகாதர்ம யுகம்வாழ மாதும் வாழ
ஏந்துபுவி தர்மமது தழைத்து வாழ
ஈசர்முத லெல்லோரு மிருந்து வாழ
சாந்தகுலச் சான்றோர்கள் தழைத்து வாழ
தாலிமிக வாழவென்று தரித்தார் தாலி
இரத்தின வொளி போல்வீசுந் தாலிதன்னை
மாய்ந்துமிகப் போகாமல் தாலி வாழ
மகாதர்ம யுகம்வாழ மாதும் வாழ
ஏந்துபுவி தர்மமது தழைத்து வாழ
ஈசர்முத லெல்லோரு மிருந்து வாழ
சாந்தகுலச் சான்றோர்கள் தழைத்து வாழ
தாலிமிக வாழவென்று தரித்தார் தாலி
விளக்கம்:
சான்றோர்கள் கன்னிகளின் கைகளைப் பிடித்துக் கொடுத்ததும், வைகுண்டர் இரத்தின ஒளியைப் போன்று ஒளி வீசும் தாலியைக் கையில் எடுத்து, இந்த தாலி அழிந்து போகாமல் என்றும் வாழட்டும், உயர்வான தருமயுகத்திலும் இது வாழட்டும். இந்தக் கன்னிகளும் வாழ்ந்து வரட்டும். தருமபூமியும் செழித்து வாழட்டும். ஈசர்முதல் எல்லாருடைய ஆசியும் பெற்று இவர்கள் இவ்வுலகில் இருந்து வாழட்டும். பொறுமைக் குல சான்றோர்கள் செழிப்புடன் வாழட்டும். இந்தத் தாலி நிலைத்து வாழட்டும் என்று கூறியபடி தமது கையில் இருந்த திருத்தாலியைக் கன்னிகளின் கழுத்தில் கட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக