அகிலம்:
சொந்தத் திருமால் சேர்ந்தா ரவரிடமே
ஆதி மகாமால் அவர்பங்கி லில்லாட்டால்
ஓதி யுணவருந்த ஒன்றுந்தெரி யாதிவர்க்கு
பேற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலை
மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண்
ஆதி மகாமால் அவர்பங்கி லில்லாட்டால்
ஓதி யுணவருந்த ஒன்றுந்தெரி யாதிவர்க்கு
பேற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலை
மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண்
விளக்கம்:
சான்றோர்கள் சிறப்பான வாழ்வு வாழ்ந்திடுவதற்காக அவர்கள் சொந்த இனத்தைச் சார்ந்த திருமால் அவர்களிடம் சேர்ந்து கொண்டாரோ? அப்படி அவருடைய சேர்க்கை இங்கு இல்லாவிட்டால் இவ்வாறு துதிப் பாடல்களை ஓதி உணவு உண்ண ஏதுவும் இவர்களுக்குத் தெரியாது. போற்றி, நம்பூரி, பிராமணர்கள் ஆகிறோர் அழுக்கை மாற்றித் துவைத்த துணி, இந்த சான்றோர்களின் துணியைவிடப் பிரகாசமற்றதாகக் காணப்படுகிறது.
அகிலம்:
இந்தசா ணார்சீலை எரிசூரி யன்போலே
பந்த வொளிபோலே பழபழெனத் தோணுதுகாண்
பிராமணர் சூத்திரர்கள் பேணி யிவர்தமக்கு
நிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ் சுமக்கிறார்கள்
பந்த வொளிபோலே பழபழெனத் தோணுதுகாண்
பிராமணர் சூத்திரர்கள் பேணி யிவர்தமக்கு
நிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ் சுமக்கிறார்கள்
விளக்கம்:
இந்த சாணார்களின் துணி ஒப்பற்ற மாறாத சூரிய ஒளியைப் போன்றும், பந்தத்தின் ஒளியைப் போன்றும், பளபள என மின்னிப் பிரகாசிக்கின்றது. பிராமணர்களும், சூத்திரர்களும் இவர்களுக்காக வெயில் படாத நல்ல சுத்தமான காய்களையும், கனிகளையும், தினந்தோறும் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
அகிலம்:
பாக்கியங்கள் வந்துதென்று பனையேறுஞ் சாணார்க்கு
நோக்கமது வந்துதென்று நீணலத் துள்ளோர்கள்
எச்சாதியும் புகழ்ந்து இருந்தார்கா ணம்மானை
அச்சாதி யெல்லாம் அப்படியே சொல்லிமிகச்
சாதிமற்றோ ரெல்லாம் தலைகவிழ்ந் திருக்கையிலே
நோக்கமது வந்துதென்று நீணலத் துள்ளோர்கள்
எச்சாதியும் புகழ்ந்து இருந்தார்கா ணம்மானை
அச்சாதி யெல்லாம் அப்படியே சொல்லிமிகச்
சாதிமற்றோ ரெல்லாம் தலைகவிழ்ந் திருக்கையிலே
விளக்கம்:
தவம் செய்தவுடனே, சான்றோர்களுக்குப் பாக்கியங்கள் உண்டாகி விட்டன, என்றும், பனை ஏறும் சாணார்கள் நோக்கம் நிறைவேறி விட்டது என்றும் உலக மக்களும், எல்லாச் சாதியினரும் புகழ்ந்தனர். இப்படியாக எல்லாச் சாதியினரும், சான்றோரைப் புகழ்ந்து சொல்லுவதைக் கேட்ட நீசக் குலத் சாதியினர் வெட்கித் தலை குனிந்தனர்.
விளக்கம்:
நாதித் திருமால் நாடுகின்ற சான்றோரை
இவர்க்கருளு மாண்டு இலக்குத் திகைந்துதல்லோ
அவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்று
தோணித்தா ரவர்மனதில் சொர்ப்பனம்போ லெம்பெருமாள்
மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்து
இவர்க்கருளு மாண்டு இலக்குத் திகைந்துதல்லோ
அவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்று
தோணித்தா ரவர்மனதில் சொர்ப்பனம்போ லெம்பெருமாள்
மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்து
விளக்கம்:
இப்படி இருக்கின்ற வேளையிலே, சான்றோரை நாடுகின்ற சான்றோருக்கு உறவான வைகுண்டர் சான்றோர்கள் இறை அருள் பெறும் தவசுக்குரிய ஓர் ஆண்டு முடிந்து விட்டது அல்லவா? எனவே, அவர்களை அவரவர் வீட்டுக்கு இனி அனுப்பிவிடலாம் என்று எண்ணினார். அந்த எண்ணத்தைச் சான்றோர்களுக்குக் கனவு மூலமாக அவர் தெரிய செய்தார்.
அகிலம்:
இனிநாம ளிப்போ இருந்த தலமும்விட்டுத்
தனியானோம் நாமளங்கே சார்ந்தோமெ யானாக்கால்
நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோ
எம்முடைய தவமும் இல்லையென்று போயிடுங்காண்
முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல்
தன்னிருந்த சொத்தும் தலத்தை யிழந்தவந்தோம்
தனியானோம் நாமளங்கே சார்ந்தோமெ யானாக்கால்
நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோ
எம்முடைய தவமும் இல்லையென்று போயிடுங்காண்
முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல்
தன்னிருந்த சொத்தும் தலத்தை யிழந்தவந்தோம்
விளக்கம்:
கனவு மூலமாக வைகுண்டரின் எண்ணத்தை அறிந்த சான்றோர்கள் இனி நாம் இப்பொழுது இந்த முட்டப்பதியை விட்டு நம் இடத்திற்குச் திரும்பிச் சென்றால் தனி ஆளாக ஆகி விடுவோமே? நமது இன மக்களும் நம்மை இழிவாகப் பேசுவார்கள் அல்லவா? நாம் செய்து வந்த தவமும் தடைப்பட்டு நின்றுவிடும் அல்லவா? ஏற்கெனவே, நமக்கு இருந்த வீட்டையும், அங்கே வைக்கப்பட்டு இருந்த பொருள்களையும், சொத்துக்களையும், விற்று விட்டு நாம் இங்கு வந்து விட்டோம்.
அகிலம்:
இனியங்கே போனால் இருக்க இடமுமில்லை
இனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலே
விழுந்தோமே யானால் மேலும் பதவியுண்டு
அழுந்த லுடன்நினைத்து எல்லோரு மேயிருந்தார்
இனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலே
விழுந்தோமே யானால் மேலும் பதவியுண்டு
அழுந்த லுடன்நினைத்து எல்லோரு மேயிருந்தார்
விளக்கம்:
இனி நாம் அங்கே திரும்பிச் சென்றால் நமக்குக் குடி இருக்க இடம் ஒன்றும் இல்லையே? எனவே, இனி நாம் அங்கே செல்லுவதைவிட இந்தக் கடல் நீரிலே விழுந்து இறந்தால் சிறந்த பதவியாவது கிடைத்துவிடும் இப்படியாக மிகுந்த மன வேதனையுடன் எல்லாரும் சிந்தித்துக் கொண்டு மீண்டும் அங்கேயே வாழ்ந்து வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக