வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா துணை.

சாட்டு நீட்டோலை:
==================
கிழமுனி தானுமிப்போ முடிப்புப் பகர்ந்துக்
கிழித்து முடியலாச்சே சிவனே அய்யா
விளக்கம்:
--------------
கிழ முனியாகிய நான் ஏற்கெனவே முடிந்து வைக்கப்பட்டிருந்த துணியை இப்போது திரும்பவும் பிரித்துக் கிழித்து முடிந்து ஊடுக்க்க் கூடிய காலமாச்சே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
மெத்தவும் நாளாச்சே பொத்தியே கையைச்சேர்த்து
விரித்த சடையனானேன் சிவனே அய்யா
விளக்கம்:
--------------
உன்னை நினைத்து நினைத்து மூடிய கையோடிருந்து எத்தனையோ காலங்களாச்சே இதனால் நான் தலை விரித்த சடையன் ஆகி விட்டேனே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
ஆண்டாருடையபிள்ளை பசித்துமுகம் வாடுகின்ற
அம்முகம் பார்த்திரங்காய் சிவனே அய்யா
விளக்கம்:
--------------
இந்த உலகத்தை ஆளுகின்றவருடைய பிள்ளையாகிய நான் பசித்து முகம் வாடுகின்றேனே, அந்த முகத்தை நீ பார்த்து இரங்க மாட்டாயோ சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
உற்றமுனி உரைக்க சக்தியுடனே நாடி
ஊமைபோலிருந்தேன் சிவனே அய்யா
விளக்கம்:
-------------
கலியனை அழிப்பதற்கு மிகுந்த சக்தி பெற்றுத் தேவையான உபதேசத்தை உரைக்கப் போகும் நாள் வரைக்கும் நான் ஊமையனைப் போல் அமைதியாய் இருக்கின்றேனே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
திடமுடனே வெளியில் நடமாடும் காலதனைக்
சம்ளம் கூட்டினேனே சிவனே அய்யா
விளக்கம்:
--------------
மிகுந்த சக்தியோடு வெளியுலகு சுற்றுகின்ற என் கால்களைச் சம்மணம் கூட்டி ஒரே இடத்தில் இருக்கிறேனே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
விரித்த தலையுடனே யெரித்த கண்ணோடிருந்து
வேகுதே மேனியெல்லாம் சிவனே அய்யா
விளக்கம்:
--------------
தலைவிரி கோலமாகவும், உடம்பின் சூட்டினால் எரியும் கண்ணோடும் இருந்து என் உடம்பெல்லாம் வேதனை அடைகிறதே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
அரணும் விடைதந்தாயே கலியன் குறும்படக்க
ஐயையோ யென்னசெய்வேன் சிவனே அய்யா
விளக்கம்:
--------------
கலியனது குறும்புகளை எல்லாம் அடக்கி வெற்றி பெற அரனாகிய(சிவனாகிய) நீ விடை தந்தாயே சிவனே அய்யா.
வெளியே சென்று கொண்டிருந்த சுவாசத்தை ஒடுக்கிச் சுடர்விடும் சுழிமுனையில் நின்று குண்டலினி சக்தியை எழுப்பி என் உடல் ஒளியுடலானது. எனவே என்னைக் கலியழிக்கத் தகுதியாக்கினார் சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
தெற்கும் வடக்கமாகச் சந்திரனும் சூரியனும்
திசைமாறி உதிக்கலாச்சே சிவனே அய்யா
விளக்கம்:
--------------
கிழக்கும் மேற்குமாய் உதிக்கின்ற சந்திரனும் சூரியனும் தெற்கும் வடக்குமாய் திசைமாறி உதிக்கின்ற கலக்கமான நிலை என்னுள் ஆச்சே சிவனே அய்யா.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் சந்திரகலை (இடது நாசி, இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும்) யும், ஞாயிறு, செவ்வாய், சனி, வியாழன் ஆகிய நாள்களில் சூரியகலையும் (வலது நாசி வலது பக்க மூக்கு) யும் நமக்காமல் மாறி மாறி கலைகள் நடக்கலாச்சே சிவனே அய்யா.
தொடரும் …… அய்யா உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக