வியாழன், 16 ஏப்ரல், 2015

நாராயண பரம்பொருள் கலிநீச மன்னனுக்கு சொன்ன புத்திகளும் சட்டங்களும்...

நாராயண பரம்பொருள் நம் சான்றோர் குலமக்கள் படும் துயரம்கண்டு அந்த கலிநீச மன்னனிடம் பலபுத்திகளை சொல்லிபார்க்கிறார் ஆனால் அவனுக்கு அந்த சிந்தை இடம்கொடுக்கவில்லை, இறுதியில் நாராயணரின் புத்தி கேட்காமல் நாராயணரை இனி ஒரு நொடியும் இங்கு இருக்க வேண்டாம் போடா என்று மரியாதை இல்லாமல் சொன்னான், பின் எம்பெருமான் சொல்கிறார் போறேன் நான் உன்னுடைய அனந்தபுரத்தை விட்டு, திரும்ப வருவேன் உன்னை அளிப்பதற்கு ஒரு வேசமிட்டு திருசெந்தூரில் இருந்து... என்று எம்பெருமான் சொல்லிவிட்டு,
நாராயணராய் நான் ஒரு நல்லதோர் அவதாரம் எடுத்து சீரான புத்தியை செப்பிவிட்டேன். சாதி தனிலுயர்ந்த சான்றோர்களுக்கு, பத்திரமாகாளி வளர்த்த கண்மணிகளுக்கு ஊழியம் செய்து உலகாள வைத்தால் நீயும் உன் கிளைகளும் உனது பெற்றோர்களும் இந்த தரணியில் வாழலாம், அல்லாது சான்றோரை நீ அநியாயமாய் அடித்தால் பொல்லாத நீசனே நீ புழுக்குழிக் குள்ளாவாய், கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால் அப்படியே உன்னுடைய கோட்டை அழிந்து பொடி ஆகிவிடும், கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச் சாபமிட்டால் வானம் அழியும் உன்னுடைய வம்சங்களும் மடிந்து போகும், உன்னுடைய கோட்டை கோத்திரங்கள் மடியும், நாட்டை அழித்துவிடும் நல்ல சாணாத்தி கற்பு,மனதில் உறுதி கொண்ட சாணாத்தி உன்னை முறைத்தால் உன்னுடைய முப்படைகளும் அழியும், செல்வங்களும் அழியும், கடல் வந்து உன்னுடைய கோட்டையை கட்டாயம் அழிக்குமடா, ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று சொன்னால் அரசாள மாட்டாய் நீ என எம்பெருமான் அந்த நீசனுக்கு சட்டங்கள் உரைத்துவிட்டு நாராயணர் புரபடுகிறார் அடுத்த அவதாரம் எடுக்க....
"சாணாத்தி யுன்னைச் சாங்கமுடன் சபித்தால்
வாணாளழியு முன்றன் வம்மிசங்கள் தாமுடியும்
தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த
பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துநிந் தித்துண்டால்
கோட்டை யிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும்
நாட்டை முடிக்குமடா நல்லசா ணாத்திகற்பு
சேனை யழியுமடாவுன் செல்வமது குன்றுமடா
வான மிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா
திடம்பெரிய சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
கடல்வந்துன் சீமைதனை கட்டா யழிக்குமடா
ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்க ளில்லையென்று
ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய
அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ
நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து
இறைகூலி தானம் இட்டுக் கொடுத்தவர்க்குத்
தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால்
குஞ்சரமு முன்னுடைய கொத்தளமுந் தானிடித்து
வஞ்சகமா யுன்றனக்கு வலியகர்மஞ் சுற்றுமடா
கர்ம வியாதிகளாய்க் கண்டமா லையுடனே
வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு
தெய்வச் சாணாத்தி தினமுனைநிந் தித்ததுண்டால்
பொய்வகையால் கர்ம போகத்தால் நீமடிவாய்"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக