அய்யா வைகுண்ட பரம்பொருள் 1008ஆம் ஆண்டு மாசி மாதம் 20வது நாள் திருசெந்தூர் பாற்கடலில் உதயமாகி தெச்சணா பூமி என புகழப்படும் நமது தாமரைகுளத்திற்கு வருகிறார்,
அங்கு பண்டாரமாய் வந்த நம் மணவைபதி நாயகரை மண்ணில் கூட மிதிக்க அனுமதிக்கவில்லை, அய்யாவை அங்கு எதித்தவர்கள் பலர். அப்படி இருந்த சூழ்நிலையிலும் யாதவ குலத்தில் தோன்றிய பூவண்ட கோனார் ஆனவர் தனது தென்னந்தோப்பை அய்யாவுக்கு கொடுத்தார், அய்யாவும் அந்த தென்னந்தோப்பை அன்புடன் ஏற்றுகொண்டார்,
பின்னர் வைகுண்ட பரம்பொருள் அங்கு 6 ஆண்டு தவத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார்,
அதில் 2 ஆண்டு தவம் யுகத்தவசு அதாவது இந்த கலியுகதுக்காக,
அடுத்த 2 ஆண்டு தவம் ஜாதிக்காக அதாவது மக்களை ஜாதி அடிபடையில் பிரித்து வைத்திருந்த கொடுமைகளை அழிப்பதற்காக,
அடுத்த 2 ஆண்டு தவம் பெண்கள் சுதந்திரம் மற்றும் அய்யாவின் வழி பித்துருகளுக்காகவும்,
இதனை அய்யா அகிலத்தின் வாயிலாக சொல்கிறார்,
"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்
நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்
எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே"
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்
நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்
எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே"
பின்னர் அய்யா ஆறு ஆண்டு தவங்களை நிறைவு செய்து அங்கு கூடி இருந்த 18 ஜாதி மக்களுக்கும் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் என்று விரும்பினார், அந்த நேரத்தில் 18 ஜாதி மக்களுக்கும் பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி கிடையாது எனவே அன்று பூவண்டன் தோப்பு என்று அழைக்கப்பட்ட நம்முடைய சாமிதோப்பு திருத்தலத்தில் ஒரு கிணற்றை ஏற்படுத்தினார், அது முத்திரி கிணறு என்று பெயர் பெற்றது, அந்த கிணற்றை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அய்யா அனுமதித்தார், அதுமட்டும் இல்லாமல் இந்த முத்திரி கிணற்றில் பதம் இட்டவர்களுக்கு சஞ்சல நோய்பிணிகள் அனைத்தையும் அய்யா தீர்த்து வைக்கிறார்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக