வியாழன், 16 ஏப்ரல், 2015

உலகினில் மனுவாய் தோன்றி ஒரு இருபதினாலுக்கப்பால் தலைமுறை வினைகள் போக்கி சடலத்துள் ஊறலோட்டி மலை செந்தூர் அலையினுள்ளே மகரத்துள் இருந்து பெற்று அலைகடல் கரையாம் அய்யா நாராயணர் என புவியில் வந்தார்-அகிலத்திரட்டு அம்மானை

திருஏடு வாசிப்பு
வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்குப்
பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா
பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரி யாய்ப்பறைந்தோர்
கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார்
மலடியு மிக்கதையை மாவிருப்பத் தோடிளகி
தலமளந்தோ னைநாடி தான்கேட்பா ளாமாகில்
என்னாணை பார்வதியாள் எகாபரத்தின் தன்னாணை
உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா
குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பீரால்
திட்டமது சொன்னோம் தீருந் திருவாணை - அகிலத்திரட்டு அம்மானை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக