தேவருரை யதனைமிகக் கேட்டு மாயன்
திருமனது மகிழ்ந்துவாய் திறந்து சொல்வார்
மூவருரை மாறம லெனக்கு முன்னே
மொழிந்ததெய்வ மாதர்களை முகூர்த்தஞ் செய்ய
நாவதுரை வருணனொடு வாயு தானும்
நளினமலர் தூவியது குளிர வீச
தேவருரை செய்துமிக நில்லு மென்று
தெய்வமட வார்வரவே சிந்தத் தாரே
திருமனது மகிழ்ந்துவாய் திறந்து சொல்வார்
மூவருரை மாறம லெனக்கு முன்னே
மொழிந்ததெய்வ மாதர்களை முகூர்த்தஞ் செய்ய
நாவதுரை வருணனொடு வாயு தானும்
நளினமலர் தூவியது குளிர வீச
தேவருரை செய்துமிக நில்லு மென்று
தெய்வமட வார்வரவே சிந்தத் தாரே
விளக்கம்:
========
தேவர்கள் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டுத் திருமால் மகிழ்ந்து, மனம் திறந்து கூறலானார். ஏற்கெனவே மூவர்களின் வாக்கும் மாறாதவண்ணம் எனக்கு முன் அமைத்த கன்னிகளைத் திருமணம் செய்ய வேண்டிய விதி இருக்கிறது. அதற்காகச் சோதிமயமான சிவன் சொல்லுக்குக் கீழ்படிந்து செயல்படும் வருணனும், வாயுவும் நளினமாக மலர்களைத் தூவியும், குளுமையான காற்றை வீசியும், தேவர்கள் வாழ்த்துரைகளைக் கூறியும் நில்லுங்கள் என உத்தரவிட்டு, வைகுண்டர் தெய்வக் கன்னிகள் அங்கே வர வேண்டும் என சிந்திக்கலானார்.

அகிலம்:
========
மீண்டும் கன்னியர் வருகையும், சீதனம் பரிசும் கேட்டலும்:
=======================================================

கன்னியர்:
=========
சிந்தித்த வுடனே யுந்தத் தேன்மொழி மாத ரெல்லாம்
வந்தவ ரடியைப் போற்றி வணங்கியே நாங்கள் பெற்ற
சந்ததி யேழு பேரும் தன்னுட கிளைக ளொக்கத்
தந்துநற் புவியை யாளத் தருவீரென் தலைவா என்றார்

இவ்வாறு சிந்தித்தவுடன் தேன்போன்று இனிமையான மொழிகளைப் பேசுகின்ற கன்னிகள் எல்லாரும் அங்கு வந்து வைகுண்டரின் பாதங்களைப் போற்றித் துதித்து வணங்கி, எங்களுடைய தலைவா, நாங்கள் பெற்ற எங்கள் சந்ததிகள் ஆகிய குழந்தைகள் ஏழு பேரையும், அவர்களுடைய சந்ததிகளையும் சேர்த்து தந்து தரும பூமியை ஆள அருள் தருவீராக என்று கூறினார்.

வைகுண்டர்:
============
========
வைகுண்டர்:
============
தருவீரென மொழிந்தகுல மாதே பெண்ணே
தலைவருங்கள் மக்களையுந் தருக வுங்கள்
மருவினியக் கருவதிலே யுதிக்க ஈன்ற
மனுவழியை யென்முன்னே வருகச் செய்தால்
தருமினிய சொத்தாஸ்தி பொன்னுங் காசு
தாறதுவுங் கொடுப்பதுவுங் சபையிற் பேசி
பெருகவுங்கள் தம்மை மணஞ் செய்துநீங்கள்
பெற்றபிள்ளை தந்துபுவி யாள வைப்பேன்
தலைவருங்கள் மக்களையுந் தருக வுங்கள்
மருவினியக் கருவதிலே யுதிக்க ஈன்ற
மனுவழியை யென்முன்னே வருகச் செய்தால்
தருமினிய சொத்தாஸ்தி பொன்னுங் காசு
தாறதுவுங் கொடுப்பதுவுங் சபையிற் பேசி
பெருகவுங்கள் தம்மை மணஞ் செய்துநீங்கள்
பெற்றபிள்ளை தந்துபுவி யாள வைப்பேன்
விளக்கம்:
=========
குழந்தைகளைத் தருவீராக என்று சொன்ன நல்ல குலமாதே, பெண்ணே, தலைவராகிய நான் உங்கள் மக்களைத் தருகிறேன். அதற்கு முன்னால் அடைவதற்கு அரிய உங்கள் கருவில் சேர்ந்து உதித்த குழந்தை வழி சந்ததிகளை என் முன்னே வரச் செய்தால் எனக்குத் தரப் போகிற அதிகமான சொத்து, பொருள், பொன், காசு ஆகிய சீதனங்களை நீங்கள் தருவது பற்றியும், நான் பரிசும் கொடுப்பது பற்றியும், இந்தச் சபைக் கூட்டத்தில் பேசி உங்களைத் திருமணம் செய்து நீங்கள் பெற்ற பிள்ளைகளை உங்களுக்குத் தந்து மேலும் பல சந்ததிகள் பெருகச் செய்து தருமபூமியை ஆள வைப்பேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக