உகப்படிப்பு :
===========
===========
தொழுத மதலையைக் கண்டு
தொழுது பணிந்து நடந்தவா;க்கு
நாடு நமக்கென்றுயெடுத்துக்கொடுத்து ஆளவருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
தொழுது பணிந்து நடந்தவா;க்கு
நாடு நமக்கென்றுயெடுத்துக்கொடுத்து ஆளவருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
=========
எல்லாம் வல்ல நாராயண பரம்பொருள் ஆகிய அய்யாவைத் தொழுது விஞ்சை பெற்று வந்த குழந்தை வைகுண்டர் ஆவார். அவரைத் தொழுது தம்மை அவருக்கு அர்ப்பணித்தவர்களுக்கு இந்த நாட்டினை அவர்களுக்குரியது என்று கொடுத்து ஆட்சி புரிய வருவது எங்கள் அய்யாவே, பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
===========
===========
கும்பிட்டு தவம் செய்வதற்குக்
கோட்டைதலம் காட்டிக்கொடுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
கோட்டைதலம் காட்டிக்கொடுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
=========
தம்மை ஒரு நினைவில் நிறுத்தி வணங்கித் தவம் செய்கின்றவர்களுக்குத் தருமபதியாகிய சக்கராரதளத்துக்குரிய பாதையைக் காட்டித் தருவதற்கு வருகிறார் எங்கள் அய்யா, பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
============
============
அருள்கொண்டு முடிசூடியிருள் கொண்டு
படையறுக்க வருகிறார் எங்கள்
அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
படையறுக்க வருகிறார் எங்கள்
அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
=========
அய்யாவின் அருளைப் பெற்றுத் தீமையான துக்கத்தை அழித்து, வெற்றித் திருமுடி சூடிய வண்ணம் கலியன் படைகளை அறுத்து அழிக்க வருகிறார் எங்கள் அய்யா. பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
============
============
ஆயிரனாட்டுக் கொடுமுடியையும் உடைத்து
துவரையம்பதி உதித்து
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
துவரையம்பதி உதித்து
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
ஆயிரம் தாமரை இதழ் கொண்ட சககரார (தலையின் உச்சி பகுதியினை) ஆட்சியினைக் கைப்பற்றி அங்குத் துவரயம்பதியைத் தோன்றச் செய்து, அரசாட்சி செய்வதும் எங்கள் அய்யாவே. பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
============
============
வர்ணமுனி மாலைசூடி மாயக்கலியறுக்க வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
=========
பல வண்ணங்களால் உருவாக்கப்பட்ட வெற்றி மாலையைச் சூடிக் கொண்டு மாயத் தன்மை பொருந்திய கலியனை அழித்து ஒழிக்க எங்கள் அய்யா வருகிறார். பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
===========
===========
நாட்டுமுடியிறக்கி நாராயணர் பதியாள வருகிறார்
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
எங்கள் அய்யா சிவசிவா சிவசிவ அரகர அரகரா
விளக்கம்:
=========
=========
இந்த நாட்டின் முடியாட்சியை இறக்கிவிட்டு வைகுண்டராகிய எங்கள் அய்யா ஆட்சி புரிய வருகிறார். பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, அருள் சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் (ஆணவம், கன்மம், மாயை) பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவைச் சுத்தப்படுத்தி சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடையச் செய்து அவரோடு இணையச் செய்வீராக.
உகப்படிப்பு :
============
============
அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளருக்கும்
தெய்வாரிடுவது முறையோம் முறையோம் முறையோம்
தெய்வாரிடுவது முறையோம் முறையோம் முறையோம்
விளக்கம்:
=========
=========
அய்யா நாராயணருக்கும், அம்மை உமையாளுக்கும், தெய்வத் தன்மை வாய்ந்த சான்றோர்கள் தம்மைச் சரணாகதியாக
அர்ப்பணித்துக் கூறுவது அபயம் ஆகும்.
அர்ப்பணித்துக் கூறுவது அபயம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக