வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா வழி என்பது உருவ வழிபாடு அற்றது . கண்ணாடி தத்துவம் தான் நம் வழிபாட்டின் சாராம்சம் என சொல்கிறோம். இந்த தத்துவத்தை யோகா வகுப்புகளில் கூட ஒரு பாடமாக கற்றுக்கொடுக்கிறார்கள். அப்படி இருக்க நாம் ஏன் அய்யாவை சேடித்து வழிபடுகிறோம்?

பதில் : நாம் இன்னும் நமது வழிப்பாட்டை பூரணமாக அனுபவிக்க தொடங்கவில்லை என்பதே உண்மை. அது தவறில்லை. ஏன் எனில் நாம் இருப்பது கலி
எனும் மாயைிக்குள் . எனினும் நாம் அய்யா சொன்னஅந்நிலையை
அடைய முயற்சி செய்ய வேண்டும்.
விளக்கம் :
"சரியையில் ஈசன் ஜடவடிவானான்
கிரியையில் ஈசன் மந்திரத்தில் சிக்குண்டான்
யோகத்தில் ஈசன் உள்ளொளியானான்
ஞானத்தில் ஈசன் தானானானானே."
1. சரியை - அங்க சுத்தி , ஆலய சுத்தி - புற சுத்தம், ஆலய
வணக்கம்
பக்தியில் முதல் படி - இறைவனும் பக்தனும் ஆயானும் மாணவனும்போல
2. கிரியை - மந்திரம் மூலம் சேவித்தல் - தந்தயும் மகனும்
போல
3. யோகம் - நம்முள் இறைவனை தியானிப்பது - நண்பனும் நண்பனும் போல
4. ஞானம் - முதல் 3 படிகளும் தாண்டி விட்டால்
ஞானம் தன்னாலே கிட்டி விடும்.- இறைவனோடு நாம் சேர்வது....கணவனும் மனைவியும் போல. .
"சிவ சிவ தானானோம் சிவ சிவ தானானோம்
தானானோம் தானானோம்"
நம்
உள்ளத்தை இறைவனோடு அயிக்கிய
படுத்த உதவுவது ஆலய வழிபாடு மற்றும் உடல் தூய்மை என்பது மறுக்க முடியாத உண்மை.
இருப்பினும்.... நாம் இன்றளவும் முதல் படிக்கட்டிலே
நின்று கொண்டிருக்கிறோம். இறைவனை அலங்கரிப்பது வழிபடுவது ஆனந்தம் என்றாலும் முதல் படிக் கட்டிலே( last class)
நில்லாமல்
"உடற்குள் குறியாக ஒத்து மிக வாழுங்கள் " எனும் அய்யா வழி வாழ்ந்து இறைவனின் பாதார விந்தத்தை அடைந்து (first class) பரமானந்தத்தை
எய்துவோமே..................
..... அய்யா உண்டு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக