சாட்டு நீட்டோலை:
==================
==================
ஆசுமதூரம் சித்திரம் விஸ்தாரம்மென்ற சொல்லை
அளிக்க விடைதந்தாயே சிவனே அய்யா
அளிக்க விடைதந்தாயே சிவனே அய்யா
விளக்கம்:
--------------
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி ஆகிய பட்டங்களை என் முன்னால் பயனற்றதாக்கி அழிக்க விடை தந்தாயே சிவனே அய்யா.
--------------
ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி ஆகிய பட்டங்களை என் முன்னால் பயனற்றதாக்கி அழிக்க விடை தந்தாயே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
==================
கிறேதா திறேதா துவாரம்பகையை அழக்க
விடைதந்தாயே சிவனே அய்யா
விடைதந்தாயே சிவனே அய்யா
விளக்கம்:
--------------
கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் இவற்றை எல்லாம் அழிக்க அன்று விடை தந்தாயே சிவனே அய்யா.
--------------
கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் இவற்றை எல்லாம் அழிக்க அன்று விடை தந்தாயே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
சரியைகிரியை யோகம்ஞானமென்ற சொல்
தாண்டிய கலியாச்சே சிவனே அய்யா
==================
சரியைகிரியை யோகம்ஞானமென்ற சொல்
தாண்டிய கலியாச்சே சிவனே அய்யா
விளக்கம்:
--------------
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகளினால் அடக்கமுடியாது தாண்டி நிற்பது இக்கலியாச்சே சிவனே அய்யா.
--------------
சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய வழிகளினால் அடக்கமுடியாது தாண்டி நிற்பது இக்கலியாச்சே சிவனே அய்யா.
சரியை :
=======
அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.
=======
அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.
ஆலயங்களில் இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், பூசைத் திரவியம் கொடுத்தல், பூசைக்குரிய பொருட்களைத் துலக்கிச்சுத்தம் செய்தல், தீவர்த்தி, குடை, கொடி, ஆலவட்டம் பிடித்தல், வாகனம் துடைத்தல், கழுவுதல், இறைவன் புகழ் பாடுதல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவை சரியைத் தொண்டுகளாகும்
கிரியை :
========
========
கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியைநெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும்.
திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.
யோகம்:
========
========
பொதுவாக யோக சாஸ்திரங்களில் சிவபெருமான் பரம்பொருளின் உருவ வடிவமாகக் கருதப்படுகிறார். சிவனின் சக்தியாக அன்னை உமையன்னை பேரறிவிற்கும், மனத்தின் ஆற்றலுக்கும், செயலில் ஆற்றலுக்கும் அடையாளமாகக் கருதப்படுகிறார்.
இந்தச் சக்தி உடலில் குண்டலினி சக்தி என்றும் அறியப்படுகிறது. இதே சக்திதான் அண்ட சராசரங்களை இயக்கும் பிரபஞ்ச சக்தியாகவும் அவற்றிலுள்ள அனைத்து சேதன, அசேதனப் பொருள்களிலும் உறையும் சக்தியாகக் கருதப் படுகிறது. உமையன்னை இந்த பிரபஞ்சத்தின் தாயாகக் கருதப்படுகிறார். ஒவ்வொரு ஜீவனிலும் உறையும் இந்தச் சக்தி அதன் எல்லைகளால் தூங்கும் அரவமாய்ச் செயலற்றுக் கிடக்கிறது. உமையன்னை தன் சேயின்பால் கொண்ட அன்பால், ஜீவனது தளைகளைக் களையும் அறிவாக போதித்த நுட்பங்கள் தான் யோக சாத்திரங்கள் என சொல்லப்படுகிறது.
யோக சாத்திரங்களில் மனமானது கவனத்தினை ஒருமுகப் படுத்திடும் இடங்களாக "சக்கர"ங்கள் சொல்லப்படுகின்றன. சக்கரம் என்ற சொல் வட்டமான வடிவத்தினை குறித்தாலும், யோகாவில் அதற்கு பொருத்தமான சொல்லாக "சுழல் மையம்" என்று சொல்லலாம். ஆற்று நீரில் பார்க்கும் சுழல் போல - உடல் பகுதிகளில் ப்ராண சக்தியின் சுழல் ஏற்படுகையில் அச்சுழல் மையங்கள் சக்கரங்கள் என வழங்கப்படுகிறது. இச்சுழல் மையங்கள் சாதரணமாக மந்தமாகவும் செயலற்றும் இருக்கின்றன. யோகப் பயிற்சிகள் இந்த மையங்கள் மீது மனத்தினை ஒருமுகப் படுத்துகையில், ஏற்படும் சக்தி ஓட்டத்தினால், மன அமைப்புகளின் திறமைகள் விழிப்புறச் செய்வதனால், சாதாரண நிலையினில் அடைய முடியாத உயர் மட்ட உணர்வுகளை அனுபவிக்க இடமளிக்கிறது.
ஞானம் :
-------------
-------------
ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதஞ் செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.
ஆன்மாவின் பரிபக்குவ நிலையிற் சிவனே மானுட வடிவிற் குருவாக வந்து தீட்சை கொடுத்து முத்தி அருளுவான். இவ்வாறு சற்குருவின் அருள் பெற்ற சாதகன், அக்குருவைச் சிவனாகவே காணுவான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக