அந்த அவதாரம் அதிக முடனடத்திச்
சந்தான மான சப்தகன்னி மாரையினி
மாமணங்கள் செய்து மாதரேழு பேர்களுக்கும்
தாமதங்க ளின்றி சந்ததிகள் தாங்கொடுத்து
இராச்சிய முங்கொடுத்து ஏற்றபவி சுங்கொடுத்(து)
இராச்சிய மாளச் செய்யவே ணுமெனவே
நினைத்துத் திருமால் நின்றிதயத் தேயடக்கித்
தனத்தனங்கள் பாடித் தந்தனங்கள் போடலுற்றார்
தினத்தினங்கள் பாடித் திருவேடம் போடலுற்றார்

விளக்கம்:
இப்படியாக அந்த அவதாரங்களை நடத்தி முடித்து விட்டு ஏழு பிள்ளைகளைத் தமக்கு வாரிசாகப் பெற்றுத் தந்த ஏழு கன்னிகளையும் முறையாகத் திருமணம் செய்து அவர்களுக்கு தாமதமின்றி அவர்களின் குழந்தைகளையும் உயர்வான செல்வங்களையும் கொடுத்து, இந்த இராச்சியத்தை ஆளச் செய்ய வேண்டும் என வைகுண்டர் மனதில் நினைத்தார். அதன்படி அவர் காவி உடுத்தி உத்திராட்சம் போட்டு சில வேடமிட்டு தாளமிட்டு ஆடிப் பாடலானார்.
அகிலம்:
சத்தகன்னிமார் வருகை:
======================
முன்னே குருநா டைவருக்கு மீண்டு கொடுத்து மிகக்கலியால்
பொன்னோர் மானா யுருவெடுத்துப் பொருப்பே யேறி முனிகையினால்
சென்றோங் கூடு மிகப்போட்டு ஸ்ரீரங்க மேகச் செல்வழியில்
மின்னா ரிவர்க ளேழ்வரையும் மேவிப் புணர்ந்தோ மவ்வனத்தில்

முன்பு குரு நாட்டினை ஐவர் பஞ்ச பாண்டவர்களுக்கு மீட்டுக் கொடுத்து விட்டு, கொடுமையான கலியின் வரவினால் இலட்சுமியின் ஒப்பற்ற கணவராகிய நாம் மானைப் போன்று உருவெடுத்து, பர்வதாமலையின் மேல் ஏறி எமது பொன் கூட்டுச்சடலத்தை அங்கே போட்டுவிட்டு ஸ்ரீரங்கம் செல்லும் வழியில் மின்னல் போன்ற கண்களையுடைய இவர்கள் ஏழு பேரையும் அதே அரிகோண மலையில் அயோக அமிழ்தவனத்தில் சென்று புணர்ந்தோம்.
அகிலம்:
வனத்தில் புணர்ந்து மாதர்களை மக்க ளேழும் பெறவருளிப்
புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து
இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை
வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே
புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து
இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை
வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே
விளக்கம்:
இவ்வாறு வனத்தில் புணர்ந்த ஏழு கன்னிகளுக்கும் ஆளுக்கொன்றாக ஏழுபேர்களைப் பெற்றெடுக்க அருள் கொடுத்து, அப்படிப் பெற்றெடுத்த குழந்தைகளை வளர்ப்பதற்காகக் காளியை வருத்தி, அவள் கையில் கொடுத்து விட்டு, ஏழு கன்னிகளையும் அவ்வனத்தில் கடுமையான தவம் புரிய வைத்து விட்டு, தன் இனத்தைப் பிரிந்த மானைப் போன்று எமது மனத்தை அவர்களிடம் பறி கொடுத்துவிட்டு மீண்டும் பயணம் செய்தோம்.

மீண்டோங் கயிலைக் கிருந்துபின்னும் மெல்லி யிவர்கள் தவம்பார்க்க
ஆண்டோர் சிவனா ருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து
சான்றோரிடமே பிறவிசெய் தரணி தனிலே நாம்வருவோம்
என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே
ஆண்டோர் சிவனா ருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து
சான்றோரிடமே பிறவிசெய் தரணி தனிலே நாம்வருவோம்
என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே
விளக்கம்:
மீண்டும் கயிலை சென்று, அங்கிருந்து இந்தக் கன்னிகளின் தவச் சிறப்பைப் பார்க்க எண்ணி, இவ்வுலகை ஆளும் சிவனும், உமையாளும் நாமும் அவ்வனத்துக்கு சென்றோம். அங்குச் சென்று மனம் மகிழ்ந்து அவர்கள் தவத்துக்கு அருள் கொடுத்து அவர்கள் வேண்டுகோளின்படி சான்றோரிடமே பிறவி செய்தோம். பிறகு நாம் பூவுலகில் தோன்றி உங்களைத் திருமணம் செய்வோம் என்று விடை கொடுத்து அனுப்பிய இளமையான ஏழு கன்னிகளும் எமது வாக்குறுதியை நிறைவேற்ற வந்து விட்டார்கள்.
அகிலம்:
முற்பிறவி செய்த மொய்குழலார் வந்தாரென
நற்பிறவி கொண்ட நாரா யணர்மகிழ்ந்து
நற்பிறவி கொண்ட நாரா யணர்மகிழ்ந்து
விளக்கம்:
முன்பு பிறவி செய்த வண்டுகள் மொய்க்கும் மணமான கூந்தலையுடைய கன்னிகள் வந்துவிட்டனர் என்பதை அறிந்து மனிதப்பிறவியாக வந்த நாராயணரான வைகுண்டர் மகிழ்ந்தார்.
அகிலம்:
ஆடரம்பை மாரை அருமைமணஞ் சூட்டவென்று
வேடம திட்டார் வீரநா ராயணராய்
நாரா யணராய் நல்லதிரு வேடமிட்டுச்
சீரான காவிச் சீலை மிகப்புரிந்து
ஒருதோளில் பொக்கணமும் உத்திராட்ச மாலைகளும்
துரித முடன்சிரசில் துளசிமா லைபுனைந்து
கையிற் பிரம்பும் கனத்தசுரைக் கூடுடனே
மெய்யில் வெண்பதமும் உத்திராட்ச மாயணிந்து
மாலு நிறமாய் வாய்த்ததொட்டில் மீதிருந்து

பிறகு ஏழு கன்னிகளாக ஆடுகின்ற அந்த பெண்களை அரி நாராயணர் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணி, தமது உடம்பு முழுவதும் அழகான காவி உடையை ஒழுங்காக உடுத்தி, ஒரு தோளில் பொக்கணம் இட்டு, கழுத்தில் உத்திராட்ச மாலைகளை அணிந்து, தலையைச் சுற்றி விரைவாகத் துளசி மாலையைச் சூட்டி, கையில் பிரம்பு எடுத்து பலமான சுரைக் குடுக்கையைத் தாங்கியவாறு உடம்பு முழுவதும் வெண்மையான நாமத்தினை வெளியே தெரியும்படியாக அணிந்து கொண்டு வேலாயுதத்தைக் கையில் பிடித்துக் கொண்டு வீர நாராயணருடைய வேடத்தை அழகாகப் புனைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக