உகப்படிப்பு :
============
============
1.கவுந்தலம்,வெந்தலம்,சிலப்புவான்,
தானமறச்சானை எடுத்துதான்
சமஸ்தானத்தை சுத்தி பண்ணுங்கோ
இத்தியூர் சமன்மா
தானமறச்சானை எடுத்துதான்
சமஸ்தானத்தை சுத்தி பண்ணுங்கோ
இத்தியூர் சமன்மா
விளக்கம்:
சககராரம் (தலை உச்சி), மூலாதாரம் (இடுப்பிற்கு கீழே முதுகு தண்டின் அடி நுனி), ஆகியவற்றை அடைவதற்குத் தடையாக இருப்பது சுழி முனை நிலையில் நிறுத்த முடியாத சுவாசம் ஆகும். சுழிமுனை நாடியில் நிலை நிற்க, ஆதாரங்களுக்குத் தலைவனான வேதநாயகன் சதாசிவனை மனதில் நிறுத்திப் பிராணாயாமம் மூலம் நாடிகளைச் சுத்தி செய்து, சமஸ்தானமான உடலையும் சுத்தி செய்யுங்கள். தச்சணாமூர்த்தி கல்லால மரத்தின்(இத்தியூர்) கீழிருந்து அவ்வூரில் தம் சீடர்களுக்கு உபதேசித்த அட்டாங்க யோக முறைப்படி பிராணாயாமம் (சமன்மா – சமமான சுவாசத்தின் அளவு) செய்து சுவாசத்தைச் சுழிமுனை நிலையில் நிறுத்திச் சம நிலையில் கன்னித் தாய் இருக்கும் மூலாதாரத்தில் நிலையாக நில்லுங்கள்.
2. இச்சமயம் ஆற்றுவான் அயல் தூக்கித்
தித்திப்பான் சமன்மா
தித்திப்பான் சமன்மா
விளக்கம்:
---------------
இந்தசமயம், மூலாதார (இடுப்பிற்கு கீழே முதுகு தண்டின் அடி நுனி) வேள்விக் குண்டத்தில் நிற்பவன் அங்கு உருவாகும் குண்டலினி சக்தியை மூலாதாரத்துக்கு மேலே இருக்கும் சுவாதிஸ்தானம் (தொப்புளுக்கும்
மர்ம உறுப்புக்கும் நடுவே), மணிப்பூரகம் (தொப்புள் பகுதி), அனகதம் (இருதய பகுதி), விசுத்தி (தொண்டை பகுதி), ஆக்னேயம் (புருவ மத்தி) ஆகிய ஆதாரங்களுக்கு ஏற்றி வெற்றி அடைவான். அதேசமயம் யோகி எப்போதும் வலது இடது நாடிகள் சமமாக உலாவும் சுழிமுனையில் நிலையாக நிற்பான்.

3. சகல தூதாதி சந்தோஷமா சந்தோஷமான
பரமானந்தம் இடுங்கோ, காட்டில் கலி வீசாமல்
திருக்கடம் சடலம் சகலஉடா தச்சன்
உச்சில்லாக் கோட்டை கக்குறுக்கு அறுத்தான்
தடம் குலக்கிப் பட வாரி
மறுவுதிரு தியானம் சமன்மா
பரமானந்தம் இடுங்கோ, காட்டில் கலி வீசாமல்
திருக்கடம் சடலம் சகலஉடா தச்சன்
உச்சில்லாக் கோட்டை கக்குறுக்கு அறுத்தான்
தடம் குலக்கிப் பட வாரி
மறுவுதிரு தியானம் சமன்மா
விளக்கம்:
--------------
--------------
நான் கூறிய செய்தி (தூதாதி) முதலிய எல்லாவற்றையும் கேட்டு அவற்றின்படி செயல்பட்டு, இறைவனோடு கலந்து ஆனந்தம் பெருங்கள். அவ்வானந்தம் மூலம் பரமானந்தம் பெறுங்கள். அப்பரமானந்தம் பெறப் பிறருக்கும் உதவி புரியுங்கள். மனமாகிய காட்டில் கலித்தன்மை பரவாமல் சடத்தன்மையை அடையுங்கள். ஆணவம், கன்மம், மாயை (சகலர்) ஆகியவற்றிற்கு அடிமைப் படாது, அவற்றை விட்டொழித்துத் தன்னுள் அவை ஊடுருவா வண்ணம் தடுத்து நிறுத்தம் ஆன்மா (தச்சன்) ஓர் எல்லையில்லாக் கோட்டையாகும். தனது உடலில் எண்ணம் செல்லாது தான் செல்லும் வழியை ஆய்வு செய்து, விருதுக்கொடி நாட்டித் தடைகளும், மாசுகளும் இல்லாது, உயர்வான(மறுவுதிரு) தியானத்தில் நிற்கும் யோகி எப்போதும் வலது இடது நாடிகள் சமமாக உலாவும் சுழிமுனையில் நிலையாக நிற்பான்.
4. அல்லிப்புலிமன் அகில்பாறையான்
சிலுப்பு வானெடுத்து சிலுப்புவான் எடுத்துத்
தணலத்துச் சங்குரண்டடிமை
தேசவாதிக்குக் கலகம் வந்திருக்குது
மறுயுகத்தார் இதை மாயமொன்று சிரிக்கிறார்
அவர் சற்றுமயலமடைந்தார்
இன்று பாஷையால் அரி அரசு வேண்டாமா
சித்திரவாதத் தூதர்கள் தீயினால் எரிந்து போவார்கள்.

இத்தகைய யோகி சக்சுரார பகுதியில்(தலை உச்சி) இருக்கும் அல்லித் தாமரை இதழிலிருந்து வரும் அமுதத்தினை உள் நாக்கினால்(புலி) அருந்தி நிலையான பேறினை அடைவான். அப்போது அவன் அனுபவிக்கும் எல்லையில்லா இன்பத்தினைச்(அகில்) சொல்ல முடியாதிருப்பான்.
திமிரான வார்த்தைகளைச் சாற்றுகிறவன், ஆணவத்தினால் பேசுகிறவன், ஆகியோருக்குக் குண்டலினி சக்தி உருவாகாது. இடகலையையும், பிங்கலையையும் (வலகலையையும்) அடக்கி ஆள முடியாமல் அதற்கு அடிமைப்பட்ட மனமுடையவர்கள் இக்கலியில் மனக்கலக்கம் உருவாகிக் குழப்பம் அடைவார்கள். இதை மறுக்கின்ற கலியுகத்து (மறுயுகத்தார்) மக்கள் இதை ஏமாற்று என்று ஏளனமாகச் சிரிக்கின்றனர். அவர்கள் மாயையினால் சற்று மயக்கம் அடைந்து உள்ளனர். இன்று இந்த உபதேச மொழியின் மூலம் நீங்கள் அரி அமர்ந்து இருக்கின்ற அரசை அடைய வேண்டாமா? அப்படி அடைகின்ற போது இவ்வாறு பேசுகிறவர்கள் சித்திரவாத தூதர்களின் தீயினால் அழிவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக