வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா வைகுண்டர்.



சாட்டு நீட்டோலை:
==================
நாலுமெறும் பதினெட்டும் நடசாலைக்கும்
நற்காலம் போச்சுதையா சிவனே அய்யா
விளக்கம்:
நான்கு வேதங்களையும், ஆறு சாத்திரங்களையும், பதினெட்டு புராணங்களையும் நடக்கின்ற சாலை விதிகளையும் போற்றுகின்ற நல்ல காலம் போய்விட்டது சிவனே அய்யா.
நான்கு வேதங்ககள்:
-----------------------------
இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்).
சமசுக்கிருத வேதங்கள்:
=====================
1. ரிக் வேதம்
2. யசுர் வேதம்
3. சாம வேதம்
4. அதர்வண வேதம்
ஆறு சாத்திரங்கள்:
--------------------------
வேத்தில் உள்ள ஆறு அங்கங்களினை திருமூலர் 'ஆறு அங்கமாய் வரும் மாமறை' எனக்கூறுகின்றார். அவ்வங்கங்களாவன இவை பதம்,கிரமம்,ஜடை,கனம் ஆகிய அத்யயன முறையைக்குறிக்கும்.
1. சிக்‌ஷம் - ஒலிப்பு முறைகள்
2. வியாகரணம் - இலக்கணத்தைப்பற்றிக் கூறுவது
3. சந்தஸ் - யாப்பினைப்பற்றிக் கூறுவது
4. நிருத்தம் - பதவுரை பற்றிக் கூறுவது
5. ஜோதிஷம் - வான நூல்
6. கல்பம் - கிரியைகளுக்கேற்ற தந்திரம், வேள்வி விளக்கம், வேள்விச்சாலை அமைக்க வேண்டிய க்ஷேத்திரக்கணிதம் ஆகியவை அடங்கியது.
18 மகா புராணங்கள்:
==================
1. பிரம்ம புராணம்
2. பத்ம புராணம்
3. விட்ணு புராணம்
4. சிவ புராணம்
5. லிங்க புராணம்
6. கருட புராணம்
7. நாரத புராணம்
8. பாகவத புராணம்
9. அக்னி புராணம்
10. கந்த புராணம்
11. பவிசிய புராணம்
12. பிரம்ம வைவர்த்த புராணம்
13. மார்க்கண்டேய புராணம்
14. வாமன புராணம்
15. வராக புராணம்
16. மச்ச புராணம்
17. கூர்ம புராணம்
18. பிரம்மாண்ட புராணம்
சாட்டு நீட்டோலை:
==================
மூலகிணத்துக்கும் மேலகுளத்துக்கும்
மோட்டிலேணியானேன்சிவனே அய்யா
விளக்கம்:
=========
மூலாதாரத்துக்கும் (முதுகு தண்டின் அடிப்பகுதி) அதற்கு மேலே காணும் சகசுரார (தலை உச்சி) வெளிக்கும் இடையே உள்ள ஆதாரங்களின் மேட்டில் ஏறும் ஏணியாக இருந்தேனே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
வாசிபாம்புக்கும் பஞ்சுபதிதனக்குமொரு
வாயமாயிருந்தானையா சிவனே அய்யா
விளக்கம்:
=========
ஒன்றோடு ஒன்று பின்னும் இயல்புள்ள இடகலை, வலகலை ஆகிய பாம்புக்கும், பஞ்சுப்பொதியாகிய இவ்வுடலுக்கும் தந்திர வழியாக நான் இருந்தேனே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
அன்பத்தோரெட்டு முனியென்பற்றென் றேக்கவில்லை
அடுத்த பாட்டோதலுற்றேன் சிவனே அய்யா
விளக்கம்:
========
இக்கலியுகத்தில் அன்பத்தோர் அட்சரங்களையும், எட்டுகின்ற முனிகூட என்மேல் முழுப்பற்றுக் கொள்ளவில்லை அத்தகைய கலியுகமாச்சு, இனி அடுத்த நிலையைச் சொல்லுகிறேன் சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
சூரியன் திசைமாறி கலியுகம் முடியவோர்
சொர்ப்பனவித்தேசம் சொல்வேன் சிவனே அய்யா
விளக்கம்:
--------------
சூரியன் திசைமாறி உதித்துக் கலியுகம் முடிவு சமயம் வரப்போகின்ற தர்மதேச நிலை பற்றி இனிச் சொல்லுகிறேன் சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
கலியை அழிப்பதற்கு கண்ணில் வித்தேசம் கண்ட
காரணம் சொல்லறுற்றேன் சிவனே அய்யா
விளக்கம்:
--------------
கலியை அழிப்பதற்கு என் ஞானக்கண் மூலம் இனி வரவிருக்கின்ற தர்மதேசம் பற்றி சொல்லப் போகிறேன் சிவனே அய்யா.
.. அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக