அகிலம்:
உன்விதி யதனால் முன்னூல் ஊறிய அமிர்தந் தன்னால்
என்விதி தன்னால் வந்த இகபர முனக்குள் ளாகி
மன்முறை தெளிந்த தன்றும் மான்கன்று ஈன்ற தன்றும்
பொன்மக ளகன்ற தன்றும் பூமக ளடைந்தா யன்றே
என்விதி தன்னால் வந்த இகபர முனக்குள் ளாகி
மன்முறை தெளிந்த தன்றும் மான்கன்று ஈன்ற தன்றும்
பொன்மக ளகன்ற தன்றும் பூமக ளடைந்தா யன்றே
விளக்கம்:
மகனே, உன் முன் விதியின் காரணத்தாலும், இவ்வுலகில் எண்ணங்களை வாசு முனையில் நிறுத்தி ஊறிய அமுதத்தின் நிலையினாலும், என் விதிப்பயனாலும், இவ்வுலகமும், பரலோகமும் உன்னுள் அடக்கமாகி, இவ்வுலகத்தின் மனித நியாய நடுத்தீர்ப்பை நீ அறிந்த சமயம், உன் உயிரானது இன்னும் ஒரு மாற்றுப் பிறப்பு எடுக்கும் அச்சமயம், நீ திருமணம் புரிந்த பொன்னைப் போன்ற அழகான பெண்களை விட்டு உன் உயிர் அகலும் அச்சமயம் நீ பூமாதேவியை அடைவாய்.
அகிலம்:
பூமக ளுன்னைச் சேர்ந்து பின்னாறு வரைக்கு மேலே
நானுகந் தன்னாற் போக்கி நகரொரு பகற்குள் ளாக்கித்
தானுனைத் தங்க மானத் தயிலமாம் பதத்தில் மூழ்க்கி
வானுனை மகிழ ரத்தின மகிழ்கிரீட மருள்வே னென்றார்
நானுகந் தன்னாற் போக்கி நகரொரு பகற்குள் ளாக்கித்
தானுனைத் தங்க மானத் தயிலமாம் பதத்தில் மூழ்க்கி
வானுனை மகிழ ரத்தின மகிழ்கிரீட மருள்வே னென்றார்
விளக்கம்:
பூமாதேவி உன்னைக் கலக்கும் சமயம், ஆறு மலைகளாகிய ஆறு ஆதாரங்களுக்கு மேலே நீ செல்லும்போது, நான் அங்கிருந்து கலியுகத்தைத் தன்னால் அழியச் செய்து, அதன் பிறகு உருவாகின்ற தருமபதி பூமியை எப்பொழுதும் ஒளி பொருந்திய பகல் போல் ஆக்குவேன். பிறகு நான் உன்னை தங்கத்தால் ஆகிய தைலம் என்னும் உயர்ந்த பதத்தில் மூழ்கச் செய்வேன். மேல் உலகத்தோர் உன்னை மகிழும்படியாகப் போற்றிக் கொண்டிருக்கும் அச்சமயம், நான் உனக்கு எல்லாரும் மகிழ்ந்து விரும்பும் அந்தக் கிரீடத்தைத் தந்து அருள்வேன் என்றார்.
அகிலம்:
மகனே யுனக்கு மகாசெல்வ மாகிவரும்
சுகமேபோ யிரெனவே சொல்லி யனுப்பலுற்றார்
சுகமேபோ யிரெனவே சொல்லி யனுப்பலுற்றார்
விளக்கம்:
மகனே, உனக்கு இனி உயர்வு பொருந்திய எல்லாச் செல்வங்களும் உண்டாகும். எனவே, நீ சுகமாகப் போய் உலகில் வாழ்ந்து வருவாயாக என்றார்.
அகிலம்:
அனுப்பத் திருமால் அமைமக வேதுரைக்கும்
மனுப்புகழப் பெற்ற வைகுண்ட மேதுரைக்கும்
மனுப்புகழப் பெற்ற வைகுண்ட மேதுரைக்கும்
விளக்கம்:
இவ்வாறு நாராயணர் வைகுண்டரைத் திருப்பி அனுப்ப முயலும்பொழுது வைகுண்டர் நாராயணரை நோக்கி வேதனையுடன் உரைக்கலானார்.
அகிலம்:
பாவி வெறுநீசன் பண்ணிவைத்த பாட்டையெல்லாம்
ஆவியறிந் தென்னுடைய அங்கமெல்லாஞ் சோருதையா
என்று வைகுண்டர் இசையத் திருமாலும்
அன்று மகனுக்கு அருளினது கேள்மாதே
ஆவியறிந் தென்னுடைய அங்கமெல்லாஞ் சோருதையா
என்று வைகுண்டர் இசையத் திருமாலும்
அன்று மகனுக்கு அருளினது கேள்மாதே
விளக்கம்:
அய்யாவே, இந்தப் பாவியாகிய வீணான நீசன் எனக்குக் கொடுத்த துன்பங்களை எல்லாம் நான் அனுபவித்து அறிந்த காரணத்தால் மீண்டும் அங்கு செல்ல என் உடம்பெல்லாம் சோர்வடைகிறது என மெதுவாக கூறவும், வைகுண்டரைப் பார்த்து நாராயணர் அருளியதைக் இலட்சுமியே கேட்பாயாக.
அகிலம்:
இந்நீசன் நமக்கு இந்த யுகம்வரையும்
மன்னீதங் கெட்ட மாற்றானாய் வந்ததினால்
செய்தா னதினால் திருமகனே யஞ்சாதே
மைதான மான வாக்குநமக் காச்சுதெனக்
மன்னீதங் கெட்ட மாற்றானாய் வந்ததினால்
செய்தா னதினால் திருமகனே யஞ்சாதே
மைதான மான வாக்குநமக் காச்சுதெனக்
விளக்கம்:
வைகுண்டா, நீசன் நமக்கு இந்தக் கலியுகம்வரையும் உயர்வான நீதி இல்லாத தீய எதிரியாய் வந்த காரணத்தால் இவற்றைச் செய்து வருகின்றான். என் உயர்வான மகனே, நீ அஞ்சாதே, நீசன் ஏற்கெனவே என்னிடம் தந்த வாக்குறுதி மீறப்பட்டதால் அது நமக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது.
அகிலம்:
கைவாய்த்து தென்மகனே கலிநீச னையறுக்க
மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக் குலத்தோர்க்கு
அன்பான் சீமை அரசாள நாளாச்சு
தன்பா லடைய சரியாச்சு தென்மகனே
மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில்
கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே
என்று விடையருள ஏற்ற திருமாலும்
மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக் குலத்தோர்க்கு
அன்பான் சீமை அரசாள நாளாச்சு
தன்பா லடைய சரியாச்சு தென்மகனே
மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில்
கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே
என்று விடையருள ஏற்ற திருமாலும்
விளக்கம்:
அதுவே, அவனை அழிப்பதற்குப் போதுமானது ஆகும். எனவே, உண்மை நம்முடைய உயர்வான சான்றோர் குலத்துக்குச் சாதகமாக அமைந்து விட்டது. அன்பு பொருந்திய இவ்வுலகை அரசாட்சி புரியக் காலம் நெருங்கி விட்டது. தன்பால் என்னும் தருமபூமியை அடைய நாள் வந்துவிட்டது. எனவே, என் திருமகனே, கண்ணே மனம் கலங்காது, நீ வாழுகின்ற நல்ல தாமரைப்பதிக்குப் போய் வாழ்ந்து வருவாயாக என்று திருமால் வைகுண்டருக்கு விடை கொடுத்து அனுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக