அகிலம்:
உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து
படபடென நின்று பணிந்து மிகப்போற்றித்
தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை
என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய்
அன்று உரைக்க அதகத் திருநெடுமால்
படபடென நின்று பணிந்து மிகப்போற்றித்
தப்பில்லை யையா தவத்தி லொருபங்கமில்லை
என்று முனிகள் இகபரத்துக் குத்தமமாய்
அன்று உரைக்க அதகத் திருநெடுமால்
விளக்கம்:
உடனே, முனிவர்கள் விரைவாக நிமிர்ந்து நின்று, அவரைப் பணிந்து துதித்து, அய்யா, இவர் தவத்தில் எந்தத் தவறும் குறையும் இல்லை. நல்லவை உருவாகியதே அல்லாமல் நியாயக் கேடாக எதுவும் இல்லை என்று இந்த யுகத்துக்கும் பரலோக வாழ்வுக்கும் உத்தமத் தன்மை உள்ளதாக அவர் தவத்தைச் சிறப்பித்துக் கூறினர்.
அகிலம்:
வைகுண்டருக்கு திருமால் உபதேசித்தல்
======================================
.
நல்ல தெனவே நன்மகனைத் தானாவி
செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென
மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத்
தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர
பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட
நாவாணர் போற்ற நாரா யணர்மகனை
======================================
.
நல்ல தெனவே நன்மகனைத் தானாவி
செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென
மகனை மிகக்கூட்டி வாரிக்குள் ளேநடக்கத்
தவமுனிவ ரெல்லாம் சங்கீதம் பாடிவர
பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட
நாவாணர் போற்ற நாரா யணர்மகனை
விளக்கம்:
வைகுண்டரின் தவச்சிறப்பை முனிகள் கூறியதும் திருமால், மிகவும் நல்லது என்று கூறி தம் மகன் வைகுண்டரைக் கட்டிப் பிடித்து அணைத்து, என் அன்பு மகனே, நீ என்னுடன் கடலுக்குள் வருவாயாக என்று அழைத்தார். பிறகு வைகுண்டரைத் தன்னோடு கூட்டுக் கொண்டு கடலினுள் நடந்து சென்றார். அப்போது தவமுனிவர்களும், பாவாணர்களும் பரமுனிவர்களும் சங்கீதம் பாடி வந்தனர். நாவாணர்கள் துதித்தனர்.
அகிலம்:
பாற்கடலி லுள்ள பாலமிர்தந் தான்வருத்தி
ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி
அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி
முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து
ஆர்க்க முடனே அருமைமக னைமூழ்க்கி
அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி
முழுக்காட்டி மகனை உகந்தமுகத் தோடணைத்து
விளக்கம்:
அச்சமயம் திருமால் பால் கடலில் உள்ள பாலமிர்த்த்தை வருத்தி மிகவும் பேறு பெற்ற தம் அருமை மகனை அதனுள் மூழ்கச் செய்தார். தம் மகன் மேலிருந்த அழுக்கைத் துடைத்து, சிவாய நம என்னும் சூட்சம பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசித்து அருளினார். உடம்பெல்லாம் உதறி, முந்தைய துன்பம் எல்லாம் போக்கி, மகிழ்ச்சியான தம் முகத்தோடு அணைத்துக் கொண்டார்.
அகிலம்:
வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த
நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில்
தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே
மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும்
எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட
நால்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க
வல்ல திருமால் மகனை முகம்நோக்கி
நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில்
தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே
மங்காத ஈசுரரும் மாதவனுந் தேவர்களும்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும்
எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட
நால்லோர்க் ளெல்லாம் நாடி மிகஇருக்க
வல்ல திருமால் மகனை முகம்நோக்கி
விளக்கம்:
அப்போழுது வேதம் ஓதும் புரோகிதர்கள் அங்கே தோன்றி வாழ்த்திக் கொண்டிருக்க, சரியான பரிமாணத்துடன் செய்யப்பட்ட நீல நிறமான மண்டபத்தில், தங்கத்தாலான மணியால் ஆகிய அரங்கில், எல்லாரும் அமர உருவாக்கப்பட்ட உல்லாச மண்டபத்தில், எப்போதும் அழிவில்லா ஈசுரரும், மாதவனும், தேவர்களும், சக்தி உமையும், சரசுவதியும், முனிவர்களும் ரிஷிகளும் எல்லாரும் இறைஞ்சி அபய ஒலி எழுப்பிக் கொண்டிருந்தனர். நல்லோர்கள் எல்லாரும் அவரை நாடி அருகிலிருந்த அச்சமயம் எல்லாமை பொருந்திய திருமால் வைகுண்டருடைய முகத்தை நோக்கி,
அகிலம்:
முட்டப்பதி விஞ்சை:
------------------------------
------------------------------
செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால்
திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும்
திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும்
விளக்கம்:
அன்பு மகனே, இப்பொழுது நீ தவம் முடித்துச் சரியான நாள் வந்த காரணத்தால், இனி நீ திருநாள் நடத்தி தெரு வீதிகளில் உலா வா.
அகிலம்:
ஒருவாரந் தன்னில் ஒருநா ளிடைவிடாமல்
நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே
நித்தந் திருநாள் நீநடத்தி யென்மகனே
விளக்கம்:
இனி, ஒரு வாரம் இடைவெளி இல்லாமல் தினந்தோறும் திருவிழா நடத்து என் மகனே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக