வியாழன், 16 ஏப்ரல், 2015

ராதையின் காதல்- தொண்டரின் பெருமை

இறைவனுக்கு பக்தர்களே(தொண்டர்கள்/ அடியார்கள் ) உயர்ந்தவர்கள் . இறைவனை தாயாக தந்தையாக , காதலனாக, காதலியாக , சகோதரனாக , சகோதரியாக இப்படி எத்தனையோ விதத்தில் பக்தி கொள்வோமே, அதில கண்ணனை காதலனாக பக்தி (ப்ரேமம் ) கொண்டவளே ராதை. நிஷ்காமிய பக்தி(தன்னலம் கருதாது ) கொண்டவள். நம் அய்யா நமக்கு அருளிய அகிலத்திரட்டில் கூட தொண்டரே சிறந்தவர் என்பதை அய்யா தெளிவுபடுத்துகிறார்.
மானமுள்ள தொண்டருக்கு இறப்பு பிறப்பில்லாப் பெறேன்றியம்பு - அகிலத்திரட்டு அம்மானை ..
ருக்குமணி(மகா லக்ஷ்மி).
இவ்வுலகில் பிறந்த நாம் அனைவருமே பெண்கள் தான். பிள்ளைக்கு தந்தை ஒருவன் ; நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் என்பதுபோல் நம்முடைய மணவாளன் அய்யாவே..
ஆயர்பாடி ஊர்தனிலே ஆயருட பட்டணத்தில் ஒரு பதினெண்ணாயிரத்து ஏற்ற பெண்கள் தங்கள் முன்னே மாப்பிள்ளையாய் நானிருந்த மாயசித்தை சொல் மகனே
எண்ணடங்கா பெண்களுக்கு இருக்கிறேன் நான் மாப்பிள்ளையாய்
- அருள்நூல்
கேலி மிக உரையாதுங்கோ இன்னும் கெணி மடவார் அநீகமுண்டு மணங்கள் செய்ய
அகிலத்திரட்டு அம்மானை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக